இராஜபதியும், இயற்கையின் சதியும்: –

ஸ்ரீ

Vastu - Helping Hands

வேடிக்கையான கதை ஒன்றை நான் Business School – ல் படிக்கும் போது விரிவுரையாளர் சொல்ல கேட்டிருக்கின்றேன்.

அந்த கதை…..

ஒருவன் கையில் ரூ.100/- மட்டுமே இருந்தது. அவனுக்கோ 5 Star ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஆசை. 5 Star ஹோட்டலில் ஒரு வேளை சாப்பாட்டின் விலை ரூ.1700/- என கேட்டு விசாரித்து கொண்டான். பணம் இல்லாவிட்டாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு மூச்சு முட்டும் அளவிற்கு சாப்பிட்டு தீர்த்தான். சாப்பிட்டதற்கு கொடுக்க பணம் தன்னிடம் இல்லை என்று தைரியமாக பில் கொடுத்தவனிடம் சொன்ன உடன் ஹோட்டல் நிர்வாகம் அவனை Police – ல் ஒப்படைத்து பணம் கொடுக்காமல் ஏமாற்றிய அவனை நன்கு தண்டிக்குமாறு கேட்டு கொண்டது. Police – ம் அவனை Station – க்கு கூட்டி செல்வதாக கூறி அழைத்து சென்று கொண்டிருந்த போது மூச்சு முட்ட சாப்பிட்டவன் தன்னை அழைத்து சென்ற Police – யிடம் ஐயா! நான் 5 Star ஹோட்டலில் சாப்பிட ஆசைப்பட்டேன்.சாப்பிட்டு விட்டேன். ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த வாய்மொழி புகாரை வைத்து என்னை ஜெயிலில் போடுவதால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் என்னை இப்போதே இங்கு இறக்கிவிட்டால் நான் உங்களுக்கு ரூ.100/-  தருகின்றேன். உங்களுக்கு ரூ.100/- சும்மா தானே வருகின்றது என்று கேட்டு Police – ஐ முதலில் Confuse பண்ணி, அதன்பின் சிறிது Convince பண்ணி, முடிவில்  லஞ்சம் வாங்க ஏதுவாக Police – ஐ Corrupt –டும் பண்ணிவிட்டு தப்பி விட்டான்…

–    இது தான் இன்றைய Finance Management Theory என்று வேடிக்கையாக வகுப்பில் கூறினார்.

ஏறத்தாழ என்னை ஏதோ ஒரு தருணத்தில் ஏமாற்றிய பணக்காரர்கள் அத்தனை பேரும் இந்த வகையில் தான் வருகிறார்கள் என்பது தான் அதிசய ஒற்றுமை.

ஆனால் இதற்கு நேர் மாறான நல்ல குணநலன்; பழக்க வழக்கம் கொண்ட ஒரு மிகப்பெரிய ஏழை மனிதனான திரு.இராஜபதி அவர்களின் மாளிகைக்கு (200 Sq.Ft அளவிலான வீடு) வாஸ்து பார்க்க சென்றேன். அளவு கடந்த அன்பை என்னிடம் அள்ளி தெளித்தது அந்த குடும்பம் என்னை பார்த்த உடன். இராஜபதியின் மூத்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை. இரண்டாவது குழந்தை பள்ளி படிக்கும் சிறிய ஆண் குழந்தை.

பெரிய வருமானம் அவருக்கு இல்லை. இருந்தாலும் அவருக்கு ஆண்டாளை பிடிக்கும்… அதேபோல் எனக்கும் ஆண்டாளை பிடிக்கும் என்பதால் என்னை தன் வீட்டிற்கு வாஸ்து பார்க்க அழைக்கின்றார். பெரிய அளவில் மாற்றம் சொல்ல முடியாத வீடு. சொன்னாலும் செய்ய முடியாத வீடு…அங்கு  போனதற்கு ஒரு மணி நேரம் அவர்களுடன் பேசிவிட்டு நான் கிளம்ப எத்தனித்த போது சில பணக்காரர்களை போல் பேரம் பேசாமல்,பேசிய பணத்தை எனக்கு கொடுக்க மறுத்து ஏமாற்றாமல் அவர் எனக்கு தருவதாக ஒத்து கொண்ட பணத்தை வெற்றிலை / பூ வைத்து கொடுத்தார்.

நானும் அவர் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு அவரின் தோள் மேல் கையை போட்டு கொண்டே வீட்டிலிருந்து அவருடன் பேசியபடியே என் கார் வரை கூட்டி வந்தேன். காரில் ஏறும் முன்பு நான் அவரிடம்  “அண்ணே! நீங்கள் என்னை விட ஆண்டாளை தீவிரமாக நேசிக்கிறீர்கள்.அதனால் என்னுடைய சிறிய வேண்டுகோள்: எனக்கு ஆண்டாள் நிறைய கொடுத்திருக்கிறாள்.நான் நீங்கள் கொடுத்த இந்த  பணத்தை வைத்து மாட மாளிகை  கட்ட போவது இல்லை. நான் Fees ஆக உங்களிடம் பணம் வாங்கிய பிறகு உங்கள் பணம் என்னுடைய பணமாக ஆகி விட்டதால் உங்கள் பணத்தை நான் என் சகோதரியான உங்கள் மனைவிக்கே  கொடுக்கின்றேன். அதற்கு மிக முக்கிய காரணம் உங்கள் வீட்டில் Gas இல்லை. எனக்கு கொடுத்த மொத்தப் பணத்தையும் சேர்த்து Gas மற்றும் வீட்டிற்கு தேவையான இதர பொருட்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய போது, அந்தப் பணத்தை மிகவும் சங்கடத்துடன் அவர் கையில் வாங்கிக் கொண்டு கண்ணீர் மல்க எனக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

அதன் பிறகு பெரிய தொடர்பில் நான் திரு.இராஜபதியுடன் இல்லை. அவர் மட்டும் இரண்டு முறை எனக்கு கடிதம் எழுதி இருந்தார். நானும் அந்தக் கடிதம் கண்டு இரண்டு முறை அவரிடம் பேசி இருந்தேன்.

10 நாட்களுக்கு முன் ஒரு முக்கியமான புத்தகத்தை தேடிய போது தேடிய இடத்தில் திரு.இராஜபதி எனக்கு எழுதிய பழைய கடிதம் கவருடன் கிடைத்தது. உடனே திரு.இராஜபதிக்கு Phone செய்தேன். அவருடைய மனைவி திருமதி.துர்க்கையம்மாள் தான் போனை எடுத்தார்கள். நான் யாரென்று சொல்லி திரு.இராஜபதியை பற்றி கேட்டவுடன் அந்தப் பெண் அழுத அழுகை கேட்டு, சொன்ன செய்தி கேட்டு சாப்பிட்ட உணவு தொண்டையில் சிக்கி சித்தம் கலங்கி போனது போல இருந்தது. திரு.இராஜபதி மறைந்து ஒரு வருடம் ஆகி விட்டது என்றும் இறப்பதற்கு முன் அவர் பேச ஆசைப்பட்டது என்னிடம் மட்டுமே என்று திருமதி.துர்க்கையம்மாள் கூறியது கேட்டு கதி கலங்கி விட்டேன். கலங்கிய நான் அன்று தெளிவாக தீர்க்கமாக முடிவெடுத்தேன். என் நண்பர் மற்றும் ஆண்டாளின் செல்லப் பிள்ளையான திரு.இராஜபதி குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு கலங்கரை விளக்கமாகவும், தத்தளிக்கும் அவர்களுக்கு துடுப்பாகவும் இருக்க வேண்டுமென்று.

வாஸ்து பயிற்சி வகுப்பு I – க்கு வரும் நண்பர்கள் படை சூழ அந்த குடும்பத்தை சந்திக்கவுள்ளேன். பிறப்பால் மனிதன் பிரித்த தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவனாக இருக்கலாம் திரு.இராஜபதி. ஆனால் அவன் ஆண்டாளுடைய பெரிய பிள்ளை.ஆண்டாள் மனதிற்கு பிடித்த பிள்ளை.

அவன் இறந்ததால் வாழ்க்கையில் தோற்று போய் இருக்கலாம். அது சாதாரணமான செய்தியாகவே இருக்க போகின்றது – இன்னும் சில நாட்களுக்கு.

ஆனால் அவனின் ஆண்டாள் பக்தி, அவன் ஆண்டாளிடம் வைத்த நம்பிக்கை அசாதாரணமானது ஆயிற்றே. இப்படி இருக்கும் போது ஆண்டாள் சும்மா இருப்பாளா????!!!!!!!!!!!!!!!!!! .

இராஜபதியின் ஆண்டாள் பக்தி அவன் இறந்து போய் இருந்தாலும் அவன் குடும்பத்தையே வாழ வைத்தது என்று அந்த ஊரே சொல்லும் தலைப்பு செய்தியாகும்…

இன்னும் 10 நாட்களில்….

என்னை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் தோற்கலாம்…

ஆண்டாள் தோற்க கூடாது….

ஆண்டாளை நம்பியவர்கள் தோற்க கூடாது….

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. While reading this article, tears are rolling from my eyes. I am a new reader of your wesbsite. You are doing a marvelous job. All the best to Andal P. Chockalingam

    Reply

Write a Reply or Comment

20 − twelve =