June 22 2022 0Comment

இன்றைய சந்திப்பு (22/06/22)

இன்றைய சந்திப்பு (22/06/22)

சுவாமி விக்யானந் ஜி அவர்கள்,
உலக ஹிந்து பொருளாதார அமைப்பின் நிறுவனர் & தலைவர்.

இன்று ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்.

உடன் சிசிஜிஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் திரு தண்டபாணி அவர்கள்.

சுவாமி அவர்கள் ஐஐடி
டெல்லியில் படித்தவர்.

அவருடன் ஒரே வகுப்பில் அன்று படித்தவர்களில் முன்னாள் RBI கவர்னர் திரு.ரகுராம் ராஜன் & தற்போதைய மத்திய நிதி துறை இணை அமைச்சர் திரு.ஜெயந்த் சின்ஹா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலக அளவில் சுவாமிகளுக்கு தெரியாத இந்து தொழிலதிபர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய ஆளுமை உள்ளவர்.

இவருடைய பிரத்யேக 9 பேர் கொண்ட குழுவில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி அவர்களும் ஒரு உறுப்பினர்.

மெத்தப் படித்தவர்
நிறைய தொழில்களையும்
நிறைய அரசியல் தலைவர்களையும் உருவாக்கியவர்

துவாரகா சங்கர மடத்தின் சீடர்

சுவாமிஜியை நிறைய முறை சந்தித்திருந்தாலும்
அவரை அவரிடத்தில் தான்
இது நாள் வரை சந்தித்திருக்கின்றேன்.

முதன்முறையாக சுவாமிஜி நான் இருக்கும் இடத்திற்கே வந்து அறிவுரைகள் பல சொல்லி ஆசீர்வாதம் தந்து
உடன் அமர்ந்து உணவருந்தி
சென்ற ஒரு விஷயம் என் வாழ்க்கையின் நடந்த நடக்கப் போகின்ற முக்கிய சம்பவங்களில் தலையாய ஒன்று

சுவாமிஜியை அறிந்தவர்களுக்கு தெரியும் இது அவ்வளவு எளிதில் கிடைக்காத ஒரு விஷயம் என்று

எனக்கு இன்று கிடைத்ததுக்கு ஆண்டாளுக்கு நன்றி

மேலும் தமிழ்நாட்டில் சிறிய அளவிலே தொழில் முனைவோர்களை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் சிந்தித்து நடத்தப் போகும் காஞ்சி மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வர சம்மதம் தெரிவித்து சென்றதை அந்தக் கூட்டத்திற்கு வரக்கூடிய அத்தனை பேருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக நான் பார்க்கின்றேன்

சன்னியாச வாழ்க்கை என்றாலும்
தேசத்திற்காக உயிரை பணயம் வைத்து நிறைய செய்வதற்கு அரிய செயல்களை செய்து கொண்டிருப்பவர்
அப்படிப்பட்ட ஒருவருடன் இன்று ஒருநாள் இருந்ததை எனக்கு கிடைத்த பெரிய பேறாக கருதுகின்றேன்

நன்றி நன்றி நன்றி

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

20 − fifteen =