May 19 2022 0Comment

இன்றைய சந்திப்பு (18/05/2022)

இன்றைய சந்திப்பு  (18/05/2022)

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளருமான சேலம் திரு.இளங்கோவன் அவர்களை இன்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் மதிய உணவுடன் சந்தித்து உரையாடிய பிறகு அண்ணன் அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த தருணத்தில் எடுத்த புகைப்படம்.
முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நிழல் என்றால் அண்ணன் சேலம் இளங்கோவன் அவர்கள் தான்.
ஒரு முறை அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாயாருக்கு தளிகை 300 கிராமில் தான் நடக்கின்றது & அதை சரி செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க வைத்து நான் வைத்த கோரிக்கையை உடனே முதல்வரையும் ஏற்க வைத்து அதை சரி செய்யுமாறு உத்தரவிடுவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணன் சேலம் திரு.இளங்கோவன் அவர்கள்.
தமிழ்நாட்டின் உச்சகட்ட பதவியின் நிழலாக அன்று இருந்தபோதும் இன்று தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் நிழலாக இருக்கின்ற போதும் குணம் மாறாமல் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அற்புதமான மனிதர் சேலம் திரு இளங்கோவன் அவர்கள்.
அண்ணன் அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும்
என்று வாழ்த்தி விட்டு மன மகிழ்ச்சியுடன் அலுவலகம் திரும்பினேன்.
நன்றி ஆண்டாளுக்கு…
என்றென்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

four × 3 =