June 08 2022 0Comment

இன்றைய சந்திப்பு (07/06/2022)

இன்றைய சந்திப்பு (07/06/2022)

மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் மரியாதைக்குரிய பெருந்தகை
திரு.இல.கணேசன் ஐயா அவர்களை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் வைத்து சந்தித்து உரையாடிய போது எடுத்த படம்….
சிறிய கூட்டம் என்றாலும் தலை சிறந்தவர்களை உள்ளடக்கிய கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது
அருமை சகோதரரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான திரு.டால்ஃபின் ஸ்ரீதர் அவர்களுடைய ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திரு.இல.கணேசன் ஐயா அவர்களை வரவேற்க கிடைத்த வாய்ப்பை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
காரணம் தாயார் ஆண்டாளுக்கு சினிமாவில் கவிதை எழுதும் ஒருவரால் இழுக்கு ஏற்பட்டபோது அதை கண்டிக்கும் வகையில் நாமக்கல்லில் ஹிந்து தன் எழுச்சி மாநாட்டை நான் உங்கள் துணையுடன் நடத்தியபோது அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சிறப்புரை ஆற்றி சென்றவர் திரு.இல.கணேசன் ஐயா அவர்கள்.
அந்த நிகழ்வுக்கு பிறகு அவருக்கு பதில் மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் இன்றைக்கு அந்த வாய்ப்பை கொடுத்த ஆண்டாள் தாயாருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறந்த குரு தலை சிறந்த தன் சிஷ்யனிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பல கதைகள் படித்திருந்தாலும்,படித்ததை இன்று கண் கூடாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
இன்று ஒரு மாநிலத்தின் மிக உச்ச பதவியான ஆளுநராக பெருந்தகை திரு இல கணேசன் ஐயா இருந்தாலும் தன் ஆத்மார்த்தமான சிஷ்யர் திரு.டால்ஃபின் ஸ்ரீதர் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி எல்லோருடனும் பேசி மகிழ்ந்து தன் அனுபவங்களை பகிர்ந்து சென்றதை பார்த்து நெகிழ்ந்து போனேன் ஒரு சிறிய வருத்தத்துடன். வருத்தத்திற்கு காரணம் எனக்கு இப்படி ஒரு குரு இதுவரை கிடைக்கவில்லையே என்பது தான். இருந்தாலும் எனக்கு கிடைக்காதது என் நண்பருக்கு கிடைத்த மகிழ்ச்சியில் தலைசிறந்த குருவிற்கு கிடைத்த தலைசிறந்த சீடராக டால்பின் ஸ்ரீதர் அவர்களை பார்த்து மகிழ்ந்து கொள்வேன் இனி. வாழ்க்கையில் வெற்றி பெற அதிர்ஷ்டத்தை நம்ப கூடிய அத்தனை பேருக்கும் நான் சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரே விஷயம்:
எதையும் எதிர்பாராமல் உழைத்துக் கொண்டே இருங்கள்.
உங்களுக்கான அங்கீகாரம் உங்களை வந்தடைந்ததே தீரும்..
தீவிரமாக உழைத்த ஒருவருக்கு அங்கீகாரம் வந்துவிட்டது.
தீவிரமாக உழைத்து கொண்டிருக்கும் ஒருவருக்கு அங்கீகாரம் நிச்சயம் வரும் என்று ஆண்டாளிடம் வேண்டிக்கொண்டு நிகழ்ச்சித் திடலில் இருந்து விடை பெற்றேன்
நல்ல உள்ளங்களை சந்தித்த திருப்தியுடன்…
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

1 × two =