June 03 2022 0Comment

இன்றைய சந்திப்பு (03/06/2022)

இன்றைய சந்திப்பு (03/06/2022)

இன்று என்னுடைய உறவான திருமதி அனுராதா கணேசன் அவர்களுடைய புதுமனை
புகு விழாவிற்கு வருகை புரிந்த பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினரும் அன்பு சகோதரருமான திரு சு.செல்வகணபதி அவர்களை வரவேற்று மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
எளிமையின் மறுபெயர் தான்
திரு.சு.செல்வகணபதி.
யதார்த்தத்தின் மறு பெயர்தான்
திரு.சு.செல்வகணபதி.
மக்கள் சேவகர் பட்டம் யாருக்கு பொருந்தும் என்றால் திரு.சு.செல்வகணபதி
அவர்களையே சாரும்.
காரணம் நான் எத்தனையோ அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகி இருந்தாலும்
என் அனுபவத்தில் மனிதத்தை தன்னுள் இயல்பாகவே வைத்திருக்கக்கூடிய இயல்பான
அரசியல்வாதிகள் வெகு சிலரே.
அதில் ஒருவராக திரு.சு.செல்வகணபதி அவர்களை நான் பார்க்கின்றேன்.
பாண்டிச்சேரி மக்கள் உண்மையில் ஒரு நல்ல பாராளுமன்ற உறுப்பினரை பெற்றிருக்கிறார்கள் என்று என் அருகில் இருந்த சிலரிடம் சொல்லிவிட்டு மகிழ்வுடன் விடைபெற்றேன் அவ்விடத்தில் இருந்து.
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

5 + 15 =