இந்தியர்களுக்கான பதிவு
நீங்கள் இந்தியர் என்றால் இந்த பதிவை படிக்கவும்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் திரு.லட்சுமணன் (வயது 22) ராணுவவீரராக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்
திரு.லட்சுமணன் பணியாற்றி வந்த ரஜ்ஜவுரி மாவட்டத்தில் 11/08/2022 அதிகாலையில் பயங்கரவாதிகள் மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர் அப்போது நம் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்ததை தீவிரவாதிகள் புறக்கணித்ததால் இரு தரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் நம் நாட்டின் ராணுவ வீரர் நம் இளஞ் சிங்கம்
திரு. லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்
அவரது குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத்தும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையும் இணைந்து இவ்விரு இயக்கங்கள் சார்பில் இறந்த ராணுவ வீரரின் தந்தை தர்மராஜ் பெயரில் ரூ.213780/-க்கு(சேவை வரி உள்பட) LIC யின் ஜீவன் சாந்தி என்ற திட்டத்தில் பாலிசி எடுக்கப் பட்டது இதன்படி இறந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.3076/- கிடைக்கும்
இந்த பாலிசியின் முதன்மை ரசீதை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய துணை செயலாளர்
திரு. P.M.நாகராஜன் ஜி அவர்கள் திரு.தர்மராஜ் ஆண்டாள் தம்பதியினரிடம் இன்று (07/11/2022) வழங்கினார்
உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.பசும்பொன் சக்திவேல்,
மதுரை அமல்கமலேஷன்ஸ் திரு.நாகராஜன்,
மதுரை பாண்டியராஜா மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் திரு.பாண்டி,திரு.கண்ணன் இருந்தனர்
இது நாங்கள் கொடுத்தோம் என்பதை ஊருக்கு பறை சாற்றுவதற்காக இடப்பட்ட பதிவல்ல இந்தப் பதிவிற்கு மூன்று நோக்கங்கள் உள்ளது.
1 இறந்த ராணுவ வீரர் நம் நாட்டை காப்பதற்காக உயிர் நீத்துள்ளார்
வாழ்க்கையை வாழாமலேயே நாம் அனைவரும் கண் மூடி மகிழ்ச்சியாக தூங்குவதற்கு ஏதுவாக தன் கண்களை மூடி கொண்டவர்
அவருக்கும் அவருடைய பெற்றோருக்கும் லட்சியங்களும் கனவுகளும் நிறைய இருந்திருக்கும்
எதுவுமே நிறைவேறாமல் அவர் வாழ்க்கை முடிந்து விட்டது
அவர் இன்று இந்த பூமியில் இல்லாமல் போயிருந்தாலும் அவரை பெற்றவர்களின் ஆசைகளை அந்த குடும்பத்திற்கு ஒரு பிள்ளையாக இருந்து பூர்த்தி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை
அந்த வகையில்
ஒரு இந்தியனாக நாங்கள் சேர்ந்து எங்களால் முடிந்த விஷயத்தை இன்று செய்திருக்கின்றோம்
நீங்களும் இந்தியன் என்றால் கொடுப்பதற்கு பணமோ பொருளோ உங்களிடம் இல்லாவிட்டால் கூட நிச்சயம் ஒரு ஆறுதல் வார்த்தையாவது அந்த குடும்பத்தை நேரில் சந்தித்து கூற வேண்டும் என்கின்ற உத்வேகத்தை கொடுப்பதற்காக இந்த பதிவு
2 நாம் கொடுக்கக்கூடிய ஆறுதலாலோ பணத்தாலோ அந்த குடும்பம் கோட்டை கொத்தளங்களில் வசிக்கப் போவதில்லை
மாறாக இந்திய தாய் திருநாட்டில் ஒரு இந்திய ராணுவ வீரன் இறந்தால் ஒட்டு மொத்த நாடே அந்த ராணுவ வீரனுக்காக அவன் குடும்பத்திற்காக இருக்கின்றது என்கின்ற உண்மையை இந்த உலகிற்கு உரக்க பறை சாற்றுவதற்காக இந்த பதிவு
3 ஒவ்வொரு ராணுவ வீரனும் போரில் தான் இறந்து விட்டால் கூட என் குடும்பத்தை கால காலத்திற்கும் பார்த்துக் கொள்ள என் நாடு என் நாட்டின் மக்கள் இருக்கின்றார்கள் என்கின்ற நம்பிக்கையை கொடுப்பதற்காகவே இந்த பதிவு
இன்னொரு முறை நம் நாடு ஒரு ராணுவ வீரரை இழக்க கூடாது என்று நம் கடவுளிடம் பிரார்த்திப்போம்
இந்த பதிவை பகிரவும்
கீழ்கண்ட விலாசத்தில்
வசித்துக் கொண்டிருக்கும்
நம் எல்லையை காப்பாற்றி வந்த மறைந்த நம் எல்லை சாமி லட்சுமணன் அவர்களின் பெற்றோரை ஒரு முறையாவது சந்திக்கவும்
நாமெல்லாம் அவர்களுடன் இருக்கின்றோம் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்க
Laxmanan
S/O Dharmaraj
Nadutheru
T. Puthupatti
Thumnakkundu PO
Usilampatti Taluk
Madurai
9037608665
நன்றி
என்றும் அன்புடன்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை



Share this: