May 29 2018 0Comment

இ(எ)துவும் கடந்து போகும்………….

என் முதுகு குத்துவதற்கு மட்டுமே………

இ(எ)துவும் கடந்து போகும்………….

கிளையில் அமரும் பறவை தான் அமரும் மரத்தின் வேர் குறித்து எல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை.நானும் அப்படியே

சிறு வயதில் இருந்தே நான் சந்தித்த நிறைய மனிதர்களுக்கு ஒருவனின் முதுகுக்கு பின் தட்டி கொடுப்பதற்கு யாரும் சொல்லி கொடுக்கவில்லை என நினைக்கின்றேன்

அதனால் தான் அப்படிப்பட்ட நிறைய மனிதர்கள் நிறைய குத்தியிருக்கிறார்கள் என் முதுகில்

அவர்களுக்கு அது பிடிக்கும் என்பதால் எனக்கும் அதில் ஒருவித சந்தோஷமே

முதுகுக்கு பின் .தட்டி மட்டுமே கொடுக்கவேண்டும் என யாரும் அவர்களிடம் தயவு செய்து சொல்லி விடாதீர்கள்

அவர்கள் சந்தோஷம் சிதைந்து விட போகின்றது

இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது எனக்கு 4 வயது.

முதுகில் குத்தப்படும் போதெல்லாம் வளராமலேயே இருந்திருக்கலாமோ என்று எண்ணிய காலங்கள் உண்டு.

பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை என்ற உண்மை உணர்ந்த பிறகு

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ? என்பது புரிந்த பிறகு

வெறுங்கை என்பது மூடத்தனம்
என் விரல்கள் பத்து மட்டுமே என்னுடைய ஒரே மூலதனம்

என்பதை தெளிவாக உணர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தான் என் வாழ்க்கை இப்போதெல்லாம் எனக்கே ரொம்ப பிடித்து போய் விட்டது
என் அருமை என்னை தொலைத்தவர்களுக்கு புரியும் அளவில் என் பயணம் தொடர்கின்றது…..

இ(எ)துவும் கடந்து போகும்………….

மலரும் நினைவுகள் தொடரும் ………..

All is Well………………….. 

Share this:

Write a Reply or Comment

16 + 8 =