April 18 2018 0Comment

ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

 

 

ஆபத்சகாயேஸ்வரர் :

தட்சன், சூரியபகவான் மற்றும் அக்னிதேவன் ஆகிய மூவரும் சாப விமோச்சனம் பெற்ற தலமாக விளங்குகிறது.

நாகை மாவட்டம், பொன்னூர் கிராமத்தில் இருக்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும்.

இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை.

இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக்கொண்டாடப்படுகிறது.

மூலவர் – ஆபத்சகாயேஸ்வரர், இலிகுசாரண்யேஸ்வரர்அக்னீசுவரர்பாண்டதவேசுவரர்இரதீசுவரர்.

அம்மன் – பெரியநாயகி, பிருகந்நாயகி.

தல விருட்சம் – எலுமிச்சை.

தீர்த்தம் – அக்னி, வருண தீர்த்தம்.

ஆகமம் – காமீகம்.

பழமை – 1000 வருடங்களுக்கு முன்.

புராணப் பெயர் – திருஅன்னியூர்.

ஊர் – பொன்னூர்.

மாவட்டம் – நாகப்பட்டினம்.

தல வரலாறு :

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அசுரர்களிடம் இருந்து தங்களை காத்தருளும் படி சிவனை வேண்டச் சென்றனர்.

அச்சமயம் சிவபெருமான் யோகத்தில் இருந்ததால் தேவர்கள் மன்மதனின் உதவியால் சிவபெருமானின் யோகத்தை களைத்தனர்.

கோபம் கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய மன்மதனின் மனைவி ரதிதேவி சிவபெருமானிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள்.

சிவபெருமான் உரிய காலத்தில் மன்மதன் உயிர்பெற்று வருவான் என்று கூறினார்.

கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவபெருமானை எண்ணி தவமிருந்து வழிபட்டாள் ரதிதேவி.

மன்மதன் சிவபெருமான் அருளால் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார்.

பிறகு இத்தல இறைவனை மன்மதன் ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

தல சிறப்பு :

இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இவரது இன்னொரு பெயர் அக்னிபுரீஸ்வரர் ஆகும். மேலும் இங்கு ஆதிசங்கரருக்கும் சன்னிதி உள்ளது.

இத்தல சுவாமியை வருணன் அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர்.

பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.

பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும் இங்கு சனி சுபசனீஸ்வரராகவே இருக்கிறார்.

அம்பிகை தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் புரிந்த திருத்தலம்,
தட்சிணாமூர்த்தித் தலம்.

வழிபட்டோர் :

விசுவாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, வீரபத்திரர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.

 
Share this:

Write a Reply or Comment

five + 7 =