March 02 2022 0Comment

ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான்…

ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான்

உங்கள் அனைவருக்கும் பெரிய அளவில் நான் வாழும் காலம் முழுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன்…
நண்பன் என்பவன் யார்?
எவன் ஒருவனிடம்
நீ நீயாக இருக்கிறாயோ அவனே நண்பன்!!
அந்த வகையில் என்னை நானாக இருக்க செய்த, இருக்க செய்து கொண்டிருக்கின்ற
உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் நட்பிற்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்கள் நட்பின் பலத்தால்
நாளை மதுக்கடை விடுமுறை என்றவுடன்
மது வாங்கி வைக்கும்/குவிக்கும்
நம் இன்றைய சமுதாயம்
நாளை நம் வருங்கால சந்ததிக்கு
காற்றும், நீரும் அவசியமென்று
மரம் நடுவதில்லை..
என்கின்ற உண்மையை புரிய வைத்து
திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணிக்கு தேவைப்படும் 60 கிலோ தங்கத்தை கொடுத்த பிறகு
தமிழ்நாடு முழுவதும் மரம் என்கின்ற ஒரு விஷயத்தை மிகப் பெரிய இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றேன் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக…
மரம் குறித்து விவரம் தெரிந்தவர்கள் எங்கள் குழுவில் இணைந்து பணியாற்ற வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மரத்தை நோக்கி செல்வோம்
புது விதமான நோய்களின் தாக்கத்தை வெல்வோம்
என்றென்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

10 − ten =