வானத்தை போல மனம் படைத்தவள்: –

ஸ்ரீ

Tj Raja

வாஸ்து பயிற்சி வகுப்பு II – ல் நடந்த ஒரு சிறிய விஷயம் வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்ற பார்வையை உங்களுக்கு தரும் என நம்புகின்றேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஒருவரை வாஸ்து கற்க வந்தவர்களுக்காக பேச கூப்பிடுகின்றேன். வந்தவர் சாதாரணமானவர் அல்ல. பெரியாழ்வாரின் 225 – வது வம்சாவழி. வந்தவர் சும்மா வராமல் ஆண்டாளுக்கு சார்த்திய மாலை, கிளி மற்றும் பிரசாதத்தோடு வருகின்றார்.

பிரசாதமும், கிளியும், மாலையும் எனக்காக கொண்டு வரப்பட்டது என எனக்கு தெரிந்து இருந்தாலும் ஆண்டாளை வகுப்பிற்கு வந்திருக்கும் அனைவரும் உணர வேண்டும் என முடிவெடுத்து அவரவர் பெயரை ஒரு காகிதத்தில் எழுத வைத்து ஒன்றாக சேர்த்து அதிலிருந்து ஒன்றை வருகை புரிந்திருக்கும் சிறப்பு விருந்தினரையே எடுக்க சொல்கின்றேன். வந்தவரும் எடுத்தார். எடுத்தவர் என்னிடம் கொடுத்தார். வாங்கின நானும் அதைப் படித்தேன். மிரண்டு, மிரண்டு போனேன் – தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் எழுதிய காகிதத்தை படித்து பார்த்த போது.

வந்திருந்த அத்தனை பேரும் தங்கள் பெயரை மட்டும் தான் எழுதி இருந்தார்கள். ஆனால் வெற்றி பெற்றவர் மட்டும் எழுதி இருந்தது என்னவென்று தெரியுமா?! அது

ஆண்டாள் துணை

ராஜா

நொடிப்பொழுதில் என்னை கொடுக்க முடிவு செய்ய வைத்து , நொடிப்பொழுதில் என்ன காரணமென்று சொல்லாமல் எல்லோரிடத்திலும் பெயரை எழுத சொல்ல வைத்து,அவர்களும் நான் சொன்னபடியே எதற்கு என்று தெரியாமலேயே அவர்கள் பெயரை காகிதத்தில் எழுதி கொடுத்தார்கள். ஆனால் சிறு நொடி கூட யோசிக்காமல் தன் பெயரை மட்டும் எழுத வேண்டிய நேரத்தில் கூட ஆண்டாளை மறக்காத அவனுக்கு அவள் காட்சி தந்தாள் மாலை வடிவத்தில். தொடர்ந்து காத்திருங்கள் ‪#‎ஆண்டாள்‬ அதிசயத்தை உணர….

வாழ்க நண்பர் ‪#‎வாஸ்து‬ ‪#‎நிபுணர்‬ தஞ்சாவூர் ராஜா.

வளர்க அவரின் ஆண்டாள் பக்தி.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. ‪#‎சொக்கலிங்கம்‬

Share this:

Write a Reply or Comment

seventeen + 20 =