ஆண்டாள் @ பங்களாதேஷ்: –

ஸ்ரீ

திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது

திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது அவர்களுடன்

திரு.பாபு தங்கம்

திரு.பாபு தங்கம் அவர்களுடன்

தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிகின்றார். அவரின் அழைப்பின் பேரில் சமீபத்தில் பங்களாதேஷ் சென்றிருந்தேன் – வாஸ்து பணிக்காக.

திரு.பாபு தங்கம் வேலை பார்க்கும் நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம். AA Spinning Mills, MSA Spinning Mills, Kadar Spinning Mills என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பங்களாதேஷில் Deutsche Bangla Bank என்று சொந்தமாக வங்கியும் உண்டு. ஏறத்தாழ 3000 ATM கொண்ட இந்த வங்கி தான் பங்களாதேஷிலேயே மிகப்பெரிய வங்கி. இது போக நிறைய துணை நிறுவனங்கள் இந்தக் குழுமத்திற்கு உண்டு.

என்னை வைத்து, தான் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு கண்டிப்பாக வாஸ்து பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணத்தால் திரு.பாபு தங்கம் அவர்கள் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் சென்றேன். என்னை வாஸ்து பார்க்க அழைத்ததில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைவரான திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட திரு.பாபு தங்கம் அவர்களின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக  உரிமையாளரின் அரைகுறை சம்மதத்துடன் பங்களாதேஷ் சென்றேன்.

வேலைக்கு ஆட்கள் அதிகம் உள்ள ஊர், CNG அதிகம் கிடைக்கப் பெறுகின்ற ஊர், மது இல்லா ஊர், தண்ணீர் அளவுக்கதிகமாக உள்ள ஊர் என்பதால் எங்கு பார்த்தாலும் Spinning Mill, Cotton Goodown, Knitting Company என 10 மடங்கு பெரிய திருப்பூரை பார்க்கும் உணர்வு ஏற்பட்டது.

அழைத்து சென்றவர்கள் நல்ல மனிதர்கள்; சென்ற ஊரும் இந்தியருக்கு பெரும் மதிப்பு கொடுக்க கூடிய ஊர்; நல்ல தங்கும் வசதி; சென்னை சாப்பாடு; நிறைவுடன் மொத்த பயணமும் இருந்தாலும் பெரிய குறை ஒன்றும் என்னுடன் இருந்தது.

அந்தக் குறை: –

என்னுடைய நிகழ்ச்சி நிரலில் நான் சென்ற குழுமத்தின் தலைவர் திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது அவர்களை சந்திக்கும் வகையில் பயணத்திட்டம் இருக்கவில்லை. பங்களாதேஷ் செல்லும் வரை எனக்கு அது பெரிய குறையாக தெரியவில்லை. அங்கு சென்று அவரைப் பற்றி கேள்விப் பட்ட பிறகு அவரை கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும் என என் எண்ணம் வலுப்பெற்றது.

அதற்கான காரணங்கள்

  1. அவர் பங்களாதேஷின் மிகப்பெரிய செல்வந்தர்
  2. அவர் அந்நாட்டு பிரதம மந்திரி மற்றும் இராணுவ தளபதிக்கு மிக, மிக நெருக்கமானவர்
  3. மிகச் சிறந்த கொடையாளி. குறிப்பாக மிகவும் பின் தங்கிய பங்களாதேஷின் கடைப்பகுதியில் உள்ள மக்களுக்கு ரூ.100, ரூ.200 கோடி என ஆர்ப்பாட்டம் இல்லாமல் உதவிக் கொண்டிருப்பவர்
  4. பங்களாதேஷ் மட்டும் அல்லாமல் கனடா நாட்டிலும் மிகப்பெரிய பலம் வாய்ந்த மனிதர் என இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

ஆனால் இது எல்லாவற்றையும் விட அவருக்கு வாஸ்து மேல் இருந்த அவ நம்பிக்கையை போக்க அவரை நான் சந்தித்தே ஆகவேண்டும்   என்பதும் மிக முக்கிய காரணமாகி போனது.

என் எண்ணம் போலவே என்னை அழைத்து சென்ற திரு.பாபு தங்கம் அவர்களுடைய எண்ணமும் இருந்தது. நாம் சரியாக நினைத்தால், சரியானதை நினைத்தால், சரியான நேரத்தில் தான் ஆண்டாள் கொடுத்து விடுவாளே!!!

ஆண்டாளுக்கு கொடுப்பதை தவிர வேறு என்னத் தெரியும்?!!!!

எங்கள் மனம் விரும்பியதை, ரங்கனை மணம் புரிந்த பேதை பெண் கோதை மறுப்பாளா என்ன?!!!!

எண்ணங்களின் தொகுப்பே மனம் – இது அனைவருக்கும் தெரிந்தது. நம் அனைத்து எண்ணங்களிலும் குட்டியாக ஆண்டாள் நிற்கும் பட்சத்தில் அனைத்து எண்ணங்களும் ஈடேறும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில்

திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது அவர்கள் என்னையும், திரு.பாபு தங்கத்தையும் அவர் வீட்டிற்கு அழைக்கின்றார்.

திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது – க்கு மிக நெருக்கமானவராக திரு.பாபு தங்கம் இருந்தாலும், அவர் வீட்டிற்கு ஒரே ஒரு முறை தான் போயிருக்கின்றார். குழுமத் தலைவர் எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதில் என்னைவிட திரு.பாபு தங்கம் அவர்களுக்கு மிக சந்தோஷம். பெரிய வெற்றி பெற்ற மனிதர்களின் வெற்றிக்கு காரணமே அவர்கள் எப்போதும் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் தான் உள்ளது என்பதற்கு திரு.பாபு தங்கம் ஒரு நடைமுறை உதாரணம்.

சென்றோம். சந்தித்தோம். ஒரு படபடப்பு இருந்தது. செயலுக்கு சம்பந்தம் இல்லா உருவம். அவர் பேச, பேச ஆண்டாள் திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது உருவில் எனக்கு உபதேசம் சொல்வது போல் இருந்தது. அவர் பேச்சின் முக்கிய வார்த்தைகள்:

  • தாகம் யாருக்கு எடுத்தாலும் தாகத்தை தீர்ப்பது தண்ணீரின் கடமை என்பது போல் நம் வாழ்க்கை இருக்க வேண்டும்.
  • எல்லாப் புகழும் கடவுளுக்கே
  • உதவுவதற்கு தான் இந்த பிறப்பு
  • எல்லோராலும் உதவ முடியாது. பிறருக்கு உதவ எல்லோருக்கும் கடவுள் அந்த வாய்ப்பை கொடுப்பதில்லை
  • செய்யும் தொழில் வேறு. உதவ நினைக்கும் குணம் வேறு. செய்யும் தொழிலை நேர்மையாக செய்.
  • நீ உதவ, உதவ உனக்கு ஆண்டவன் உதவிக் கொண்டே இருப்பான்
  • உன்னால் ஒருவருக்கு / ஒரு விஷயத்திற்கு உதவ முடிகிறதென்றால் கடவுளுக்கு உன்னை பிடித்து இருக்கின்றது என்று அர்த்தம்.

பங்களாதேஷின் அம்பானி போன்றவர் என்னிடம் வாஸ்து சம்பந்தமாக பேசுவார் என்ற என் நினைப்புக்கு மாறாக என் எண்ண ஓட்டத்தில் ஒரு மூலையில் இருந்த விஷயங்களை குறித்து பேசியது எனக்கு மிகப்பெரிய ஆனந்தத்தை கொடுத்தது. நான் என் வாழ்க்கையை எப்படி இனிமேல் தொடர வேண்டும், அணுக வேண்டும் என ஆணித்தரமாக புரிய வைப்பதற்காகவே இந்தப் பயணம் என்பது போல் இருந்தது.

ஒரு பணக்காரர் எப்படி பணக்காரர் ஆகின்றார் என்பது எனக்குத் தெரியாது…

ஆனால் ஒருவன் எப்படி மிக, மிகப்பெரிய பணக்காரர் ஆகிறார் என்பது எனக்கு தெரியும்.

அனுபவ பூர்வமாக இவரைப் பார்த்த உடன் புரிந்து விட்டது. இவரின் வாழ்க்கை வெற்றி பெற்றதற்கு காரணம் இரண்டே இரண்டு விஷயங்கள் தான்

  •  நன்றி உணர்வு
  •  உதவி புரிதல்

இந்த இரண்டும் இருந்தால் நீங்கள் நினைப்பதை அடைய முடியும்

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும்

மணம் தாமதமானவர்களுக்கு மணம் நடக்கும்

பணம் இல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும்

உடல் நலமில்லாதவர்களுக்கு உடல் நலம் கிட்டும்

கடைசியாக வாஸ்து பற்றி சில நிமிடங்கள் பேசினோம். நான் சொன்ன வாஸ்து மாற்றம் அவருக்கு பிடித்திருக்கும் என நம்புகின்றேன். நான் சொன்னதை தான் அவரும் பல மாதங்களாக சொல்லி வந்திருக்கின்றார்.

நான் சொன்னது

  • பெண்களை அதிகம் வேலைக்கு அமர்த்தவும்

நான் இதை சொன்ன உடன் உடனே அதை நடைமுறைப்படுத்த உத்தரவிடுகின்றார்

  • நிறுவனம் பெண் பெயரில் இருக்க வேண்டும்

நான் சொன்னபடியே அவரின் மனைவியின் பெயரில் அந்த நிறுவனம் இருந்தது.

உபரி தகவல்:

  • உச்ச  வாசலும், படிக்கட்டு சரியான இடத்திலும், செவ்வகமாக வீடும், Watchman Toilet முதற்கொண்டு சரியான இடத்திலும் என  அவர் வீடு பக்கா வாஸ்து படி கட்டப்பட்டிருந்தது
  • 6 விலையுயர்ந்த கார்கள் சரியாக நிறுத்தப்பட்டிருந்தது கண்டு மிகுந்த சந்தோஷப்பட்டு போனேன்.
  • என்னால் நம்பவே முடியாத விஷயம் இவரின் வயது 60 +.
  • நல்லவர்களுக்கு இறைவன் இயற்கையாக  நல்ல வீட்டை கொடுத்து விடுவான் – என புரிய வைத்தது இந்த மொத்த நிகழ்வும்.
  • நல்லவர்கள் தவறு செய்யக் கூடாது, நல்லவர்களுக்கு தவறு நடந்து விடக் கூடாது என்பதற்காக அவர்கள் வணங்கும் அல்லா திரு.பாபு தங்கம் வடிவில் என்னை தேர்ந்தெடுத்ததாக நினைக்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தை உண்டு பண்ணி கொடுத்த நான் வணங்கும் ஆண்டாளுக்கும் நன்றி…

அவர்கள் வணங்கும் அல்லாவிற்கும் நன்றி…

இந்த நிகழ்வுக்கு அடிப்படை காரணமான எனக்கு ஒரளவு தெரிந்த வாஸ்து கலைக்கும் நன்றி…

நான் என் வாழ்க்கையில் எந்த பெரிய மனிதருடனும் இதுநாள் வரை போட்டோ  எடுத்து கொள்ள ஆசைப்பட்டதே இல்லை. முதன் முறையாக நான் ஆசைப்பட்டு எடுத்து கொண்ட படங்கள் என் வாழ்விற்கு அர்த்தம் புரிய வைத்த திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது அவர்களுடனும் இந்த சந்தர்ப்பத்தை பெற்று தந்த திரு.பாபு தங்கத்துடனும்.

ஆண்டாளுக்கும், வாஸ்து கலைக்கும் என் கோடான கோடி நன்றிகள்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

nine − 5 =