#ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கூட்டு பிராத்தனை.
அனைவரும் அவர் அவர் இல்லங்களில் இருந்து நம் உள்ளங்களில் முருகப்பெருமானையும், நரசிம்ம பெருமாளையும் வேண்டுவோம். வைகாசி விசாகமும் நரசிம்மர் ஜெயந்தியும் சேர்ந்து ஒரே நாளில் வருகிறது மிகவும் விசேஷமாக.
24.05.2021 ம் தேதி பிரதோஷம் உலகை காக்க ஆலகால விஷம் உண்ட ஈசனை வேண்டுவோம் தீவினை வந்து மக்களை தீண்டாமல் இருக்க.
25.05.2021 ம் தேதி வைத்தியனுக்கு எல்லாம் வைத்தியன் முத்து குமரனை சரணடைந்து வேண்டுவோம் வைகாசி விசாகத்தில்.
25.05.2021 ம் தேதி தன் பக்தனுக்காக நொடி பொழுதில் அவதாரம் எடுத்த நரசிம்மரை வேண்டுவோம் உலகம் உய்ய.
*_கூட்டு பிராத்தனைக்கு சக்தி அதிகம்._*
*அனைவரும் சேர்ந்து வேண்டுவோம் உலக மக்கள் நோயின் பிடியில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வதற்கு.*
*அனைவருக்கும் இந்த கூட்டு பிராத்தனை நிகழ்வை தெரிவியுங்கள்.*
நமக்காக, நம் குடும்பம், நம் சொந்தம், நம் நட்பு, நம் ஊர், நமது தமிழகம், நமது பாரத தேசம் மற்றும் இவ்வுலகில் வாழும் *அனைவருக்காகவும் பிராத்திப்போம்.*
கொரோனவை வெல்ல கூட்டுப் பிரார்த்தனை…



Share this: