ஆண்டாள் – கதையா??? கவிதையா!!!

ஸ்ரீ

Vastu - Rajapathi

கடவுள் என்று கல்லை வணங்கி நேரத்தை விரயம் செய்கின்றோம் என்று நம்மை பார்த்து நாத்திகர்கள் எப்போதும் முன்வைக்கும் வாதத்திற்கு என்னுடைய பதில்….

ஆம்…. நாத்திகர்கள் சொல்வது உண்மைதான்….

கடவுளை வெறும் கல்லாக பார்க்கும் அனைவருமே அவர்கள் நேரத்தை விரயம் செய்கின்றார்கள் என்பதில் எனக்கும் எந்த வித மாற்று கருத்தோ,அப்பிப்ராய பேதமோ இல்லை.

கல்லை கடவுளாக, தோழியாக, தோழனாக, தாயாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, தங்கையாக, அக்காவாக, மனைவியாக, கணவனாக, ஆசிரியராக, தாத்தாவாக, பாட்டியாக, மாமாவாக, அத்தையாக என மொத்தத்தில் நம்முடைய ஓர் உறவாகவும்,தன்னையே அதுவாகவும் பார்க்கும் பட்சத்தில் மேற்சொன்ன கூற்று பொய்யாகி, பொடியாகி, தூள் தூளாகி மக்கி மண்ணாக போய் விடும்.

எத்தனை பேருக்கு இது புரியும்….

எத்தனை பேருக்கு இது புரிந்திருக்கும்…

எத்தனை பேருக்கு இது புரியப் போகின்றது….

– என எனக்குத் தெரியாது.

ஆனால் கல்லாக பார்க்காமல், கல்லை ஆண்டாளாகப் பார்த்தவன் கதை இதற்கு கண்டிப்பாக பொருள் சொல்லும்.

அவனுக்கு அவன் வாழ்ந்த நாள் வரை ஆண்டாளைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

அவன் மனைவிக்கும், அவன் இரண்டாவது குழந்தைக்கும் அவனைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.

அவனின் முதல் குழந்தைக்கோ எதுவுமே தெரியாது.

இப்படிபட்ட சூழ்நிலையில் அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் நல்ல நாளில் போய் விட்டான் – குடும்பத்தை காட்டாற்று வெள்ளத்தில் சிக்க வைத்து நடுக்கடலில் போய் சேர்த்துவிட்ட சந்தோஷத்தில்…

அவன் ஆண்டாளை போய் சேர்வதற்கு முன் அவன் செய்த ஒரே விஷயம் என்னை அவன் வீட்டிற்கு அழைத்தது…

மனசு ஒடிந்த மனைவி….

மனநிலை சரியில்லா பெரிய குழந்தை….

மனம் என்றால் என்னவென்றே தெரியாத சிறிய குழந்தை…

மனைவியின் தற்போதைய தினக்கூலி ரூ.150/-

கணவர் வைத்து விட்டு சென்ற கடனுக்கான மாத வட்டி ரூ.4000/-

இறந்தவன் கல்லை வணங்கி இருந்தால் மொத்த குடும்பமும் கல்லாகி தான் இன்று போயிருக்கும் இருக்கும் கடன் சுமையை கண்டு. ஆனால் அவன் நம்பியது ஆண்டாளை அல்லவா!! ஆண்டாள் வரம்பின்றி, விளிம்பின்றி பெருமாளுக்கு இணையாக அவனை நேசித்தாள் என்பது அவன் உயிருடன் இருந்தவரை அவனுக்கு புரியவில்லை. இன்று இறந்த பின்னும் அவனுக்கு தெரியப் போவதில்லை.

புரியாமலும், தெரியாமலும் இருப்பது தானே ஆண்டாளுடைய இலக்கணம்.

அவனுக்கு புரியாதது, தெரியாதது எனக்கும், என்னுடன் வந்த என் நண்பர்களுக்கும் புரிந்த நாள் மே 6, 2015.

ஏதேச்சையாக கிடைத்த பழைய கடிதத்தை கொண்டு இறந்தவனின் குடும்பத்தை பார்க்க சென்றோம் ஆண்டாளின் தூதுவர்களாக…..

என்னுடன் 28 பேர் வந்தார்கள் ஆண்டாளை மட்டும் நம்பிய அவனின் வீட்டிற்கு. அனைவரும் சேர்ந்து ரூ.50,000 – த்தை உதவி தொகையாக கொடுத்தோம் – கோதை காதலித்தவனின் பேதைப் பெண்ணிடம்

மேலும் அவன்  மகளின் படிப்பு செலவு மற்றும் அவன்  குடும்பத்திற்கான அத்தியாவசியமான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி கூறினோம்.

பணம் வாங்கிய அவன் மனைவியின் கண்கள் கண்ணீரால் நிரப்பப்பட்டிருந்தது. பணம் கொடுத்த எங்களுக்கும் அப்படியே…

Vastu - Rajapathy

அடுத்த வேளை எப்படி? என்ன? என்று தெரியாத நிலையில் இருந்த அவனின் மனைவியை சந்தித்து அவன் இருக்கின்றான் ஆண்டாளுடன் என்பதை புரியவைத்து விட்டு கால் தடுமாற கிளம்பி வந்தோம்…

எந்தவித ஆதாயத்துக்காகவும் என நடக்காத தன்னிச்சையாக நடந்த இயற்கையான நிகழ்வு இது. இவன் இறந்து போனதே ஆண்டாளை நாங்கள் அனைவரும் உணர்வதற்கு தானோ என்னவோ?

இவ்விடத்தில் கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.

அது அவனின் குடும்பத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அந்த குடும்பத்திற்கு உதவிய என்னுடைய நண்பர்கள் 24 பேர்.

நாளைக்கு நானே அவனின் குடும்பத்திற்கு உதவ இவ் உலகில் இல்லாமல்  போனாலும் அவன் பார்த்திராத/அவனுக்கு பரிச்சயம் இல்லாத ஆண்டாளின் செல்ல பிள்ளைகள் 24 பேர்  எனக்கு பதில் அங்கு இருப்பார்கள் ஆண்டாள் கதையல்ல கவிதை என்று இவ் உலகிற்கு புரிய வைப்பதற்கு….

ஆண்டாள் தாயே!!!!! இப் பிறவிக்கான அர்த்தத்தை எனக்கும்,அவனுக்கும்  உணர்த்தியது போல் அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.

கல்லை கடவுளாக காண்போம்…

ஆண்டாள் கதையல்ல கவிதை – உணராதவர்கள் உணரும் தருணம் இது.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

3 comments

  1. அருமை! ஒரு நல்ல நண்பர்கள் குழாத்தை உருவாக்கி உள்ளீர்கள்

    அதுவும் இரக்கமுள்ள, மனிதரை நேசிக்கும் குணமுள்ள , நல்ல மனிதர்களை நண்பர்களாகப் பெறுவதே பாக்கியம்.

    பாக்கியம் செய்தவர் நீங்களும் உங்கள் நண்பர்களும்,

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    Reply
  2. truth behind the statchu, kindness is also one of the nature ofmankind tjat reveals
    gods existance,Be happy thanks for all those who help the helpless.B>Srinivasan

    Reply
  3. கடவுள் தேவையானவர்களுக்கு மனித வடிவில் வந்து உதவி செய்வார்கள் என தங்களும் நண்பர்களும் நேருபிதிருக்கிர்கள் உங்கள் சேவை தொடரட்டும்
    சீனுவாசன்

    Reply

Write a Reply or Comment

2 × two =