October 08 2017 0Comment

ஆண்டாள் கடிதம் 43 – வேலு நாச்சியார் II

வேலு நாச்சியார் II :

 

நான் சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒருவருக்கு வாஸ்து பார்க்க சென்ற போது அங்கு உணர்ந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

                                                          

நடுத்தர வசதி வாய்ப்புள்ள குடும்பம்;

சிவகங்கை சொந்த ஊர்;

பிழைப்புக்காக கோயம்புத்தூர்;

கடினமாக உழைக்க கூடிய நேர்மையான மனிதர் அந்த குடும்ப தலைவர்;

அதற்கு இம்மியளவும் குறையாதவர் அவர் மனைவி;

அற்புதமான இரண்டு பெண் குழந்தைகள்;

மூன்றரை மணி நேர உரையாடல்….

முடிவில் கிளம்பும் போது நான் கொஞ்சம் கூச்சபட்டுதான் கேட்டேன்.

 

உங்கள் பெரிய குழந்தையுடன் ஒரு Selfie Photo எடுத்துக்கலாமா????? என கேட்டேன். (அந்த சமயம் சிறிய குழந்தை தூங்கி கொண்டு இருந்தது)

 

என் வாழ்க்கையில் இதற்கு முன் நிறைய பேருடன்  புகைப்படம் எடுத்து கொள்ள ஆசைப்பட்டதுண்டு. இது எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டது நான் கோயம்புத்தூர் வீட்டு பெண் குழந்தையுடன் எடுக்க ஆசைப்பட்ட புகைப்படம்.

 

இந்த இடத்தில எனக்கு இருக்கின்ற ஒரு பெரிய திறமை பற்றி  சொல்லியாக வேண்டும்.

 

அது ஒரு சில விஷயங்களை உறுதியிட்டு கணித்து, தீர்மானமாக, அடித்து சொல்ல முடியும்.

 

அந்த வகையில் நான் ஆசைப்பட்டு புகைப்படம் எடுத்து கொண்ட இந்த  பெண் குழந்தை பற்றி என்னுடைய அனுமானமங்கள்:

 

  1. இந்த குழந்தை ஒரு Child Prodigy

 

  1. CA துறையில் முத்திரை பதிப்பாள்

 

  1. அதிசயத்தக்க Strong Aura

 

  1. வேலு நாச்சியாருக்கு பிறகு சிவகங்கைக்கு பெருமை சேர்ப்பாள்

 

  1. இது போன்று ஒரு குழந்தையை என் வாழ்க்கையில் நான் பார்த்தது இல்லை

 

  1. எட்டு வயது பாலாவை (காஞ்சி காமாஷியை) பார்த்தது போல் ஒரு உணர்வு

 

  1. Sharpness to the core

 

  1. பழனி முருகருடன் நெருங்கிய தொடர்பு உள்ள குழந்தை

 

  1. குருவாயூருடனும் நெருங்கிய தொடர்பு உள்ள குழந்தை

 

  1. இந்தியாவிற்கு பெரிய பெருமை சேர்க்கும்.

 

ஒத்தை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த குழந்தை வேலு நாச்சியார் II என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த குழந்தை சிகரங்கள் தொடும்.

 

இந்த குழந்தையை நான் வாழும் காலத்தில் பார்க்க வைத்த ஆண்டாள் நாச்சியாருக்கு நன்றி

என்ன தவம் செய்தேனோ இந்த அறிய வாய்ப்புக்கு….

 

நன்றி நன்றி நன்றி

 

#AndalKaditham #ஆண்டாள்_கடிதம் #Chockisim #AndalPChockalingam #வேலு_நாச்சியார்_II

Share this:

Write a Reply or Comment

thirteen + 13 =