October 09 2017 0Comment

ஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக

என் மேல் பாசம் காட்ட என் வாழ்க்கையில் 1000  முக்கியமானவர்கள் உண்டு என்று வைத்து கொண்டால்

 

அதில் முதல் பத்து இடத்திற்குள் 2 பேருக்கு இடம் உண்டு.

 

அதில் ஒன்று அர்ஜுன்……

 

அர்ஜுனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்வாரே அவர் கவிதையில்………………….

 

“எனக்கு ரோஜாவை விட ரோஜா செடியை அதிகம் பிடிக்கும். காரணம் ரோஜா செடி தான் தொட்ட உடன் ரத்த பாசத்தை காட்டுகின்றது”.

 

அந்த அளவிற்கு பாசக்கார பயபுள்ள…….

 

2 ¼  வயது  தான்.

கயல் பட ஹீரோக்கள் போல, என்னை போல

பயணம் அதிகம் விரும்பும் அற்புத குழந்தை.

 

வாழ்க்கையில் யாரும் தொடாத உச்சமும், உயரமும் போவான் இவன்.

 

எனக்கு அர்ஜுன் திருச்செந்தூர் முருகன் போல சுருக்கமாக…..

 

மற்றொன்று ஷாஹி………

 

ஷாஹி நான் வாழும் தெருவில் வசிக்கும் நாய்……

 

தெரு நாயாக எனக்கு அறிமுகம் ஏற்பட்டாலும் எங்கள் வீட்டில் ஒரு அங்கத்தினராக காலபோக்கில் மாறிவிட்டது.

 

எத்தனை முறை சொன்னாலும்  கேட்காத மனிதர்கள் நடுவிலே எதையும் சொல்லாமலேயே கேட்கும் அற்புத ஆத்மா.

 

ஷாஹி, மனிதர்கள் என்னை உணர்ந்ததை விட பல படி ஆழமாக என்னுள் சென்று என்னை உணர்ந்த ஜீவன்.

 

ஷாஹி அளவிற்கு ஒரு ஜீவனை நான் எந்த ஜென்மத்திலும் பார்க்க முடியாது என சொல்லும் அளவிற்கு எனக்கு ஷாஹி ஆண்டாள் கொடுத்த அருட்கொடை……..

 

அர்ஜுன் சமீபத்தில் என் வீட்டிற்கு வந்திருந்தபோது

 

ஷாஹியும், அர்ஜுனும் முதல் முறையாக சந்தித்த காட்சி….

 

முதல் முறை சந்திப்பு என்றாலும் ஒரு துளி பயம் கிடையாது அர்ஜுனுக்கு

 

ஷாஹியும் சொல்லி வைத்ததுபோல் நீண்ட நாட்கள் பழகிய என்னுடன் எப்படி இருக்குமோ அர்ஜுனுடனும் அப்படியே……..

 

யாரும் சொல்லி கொடுக்காமலேயே அர்ஜுனும் ஷாஹி அளவிற்கு படுத்து அதை ரசித்த வீடியோ……

 

உலகம் நிறைய கேட்கின்றது

உலகம் நிறைய பார்க்கின்றது

உலகம் நிறைய சொல்கின்றது

 

நமக்கு தான் கேட்கவும், பார்க்கவும், சொல்லவும் நேரம் இல்லாமல்

நாட்கள் நகர்கின்றது…..

 

இந்த வீடியோவை பார்த்த பின் எத்தனை பேருக்கு அர்த்தம் புரியும் என்று எனக்கு தெரியாது…

 

ஆனால் தெரிந்து கொள்ளவாது முயற்சி செய்யுங்கள் உங்கள் அருகாமையை……

 

வாழுங்கள் இந்த நொடிக்கு……

 

கண்ணதாசன் சொன்னது போல்

 

பகலை பகலுக்கு முந்திய இரவும்

இரவை இரவுக்கு முந்திய பகலும் தீர்மானிகின்றன என்பது புலப்படும்……

Share this:

Write a Reply or Comment

18 − 12 =