October 28 2018 0Comment

சொக்கன் பக்கம் – கிறுக்கல் 1 

சொக்கன் பக்கம் கிறுக்கல் 1: மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் ஒன்று…. என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக […]

October 06 2018 0Comment

படிக்காதவன்

படிக்காதவன் 1971 இல் பிறந்த எனக்கு நிறைய தெரியும் பிறரை விட என நம்பும் நிறைய மனிதர்கள் இந்த பூமியில் உண்டு. இருந்தாலும் நான் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் சில சமயம் அழுத்தம் திருத்தமாக நடந்து கொண்டும் இருக்கத்தான் செய்கின்றது அந்த சில சம்பவங்களில் ஒன்று மிகவும் வலிமையானது; அர்த்தம் பொருந்தியது நான் இன்றும் என்றும் இப்போதும் எப்போதும் அதை அவன் செயலாக நம்புகின்றேன். அந்த கருத்தோடு […]

October 01 2018 0Comment

நேபால்- சந்திரகிரி

பொதுவாகவே அழகான வானம்  பனிப் பிரதேசம்  சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி  என்றாலே தமிழர்கள் அத்தனை பேருக்கும் நினைவுக்கு வருவது எம் ஜி ஆர்  நடித்த அன்பே வா பாடல் தான், இன்று நேபாளத்தில் உள்ள சந்திரகிரி மலையில் ஏறத்தாழ 8,500 அடி உயரத்தை 12 நிமிடங்களில் Rope Car மூலமாக சென்றடைந்த பின் எனக்கும்  அந்த பனி பிரதேசத்தையும், மலையையும்   அதிலும் குறிப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குழந்தையையும் பார்த்த போது  அன்பே வா எம் ஜி […]

September 30 2018 0Comment

சிறகு  பறப்பதற்கே

சிறகு  பறப்பதற்கே அதிகம் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை…. மாற்றம்  ஒன்றே மாற்றமில்லாதது வாழும் ஒவ்வொரு நொடியும் தான் எத்தனை  மகத்தான மாற்றங்கள்…. அந்த வகையில் இந்த மாற்றத்திற்கு  அடிப்படையே யாரோ  என்றோ எனக்கு  சொன்னது தான் முட்களின் மேல் நின்று  கொண்டு அழுவதை விட  நெருப்பில் விழுந்து எரிந்து  கொண்டே முயல்வது மேல் விளைவு இன்று மறுக்க முடியாத மகத்தான மனிதனை அதுவே உருவாக்கி இருக்கின்றது கருவாக இருந்தபோதே அடமும் ஆட்டமும் அதிகம் உருவான பிறகு  தனியாக […]

September 30 2018 0Comment

ஒரு வேளை சோறு:

ஒரு வேளை சோறு: சொந்த வீடு  என்பது நடுத்தர  வர்கத்தின் ஒரே  கனவு சில சமயங்களில்  அது நிஜமாகாமலயே கனவாகவே இருந்துவிட்டு  போய் விடுகின்றது சிலருக்கு மட்டும் பல சமயங்களில் அது நனவாகின்றது…. அப்படிப்பட்ட சிலரில் பலர் என்னை அவர்கள் கனவு மெய்ப்பட  தொடர்பு கொண்டதுண்டு. இன்றுவரை அதில்  வெகு சிலரே என்னுடன்  பிரயாணப்பட முடிகின்றது அந்த சிலரில் ஒன்றைப் பற்றிய  குறிப்பு இது: என்ன இருந்து  என்ன செய்ய ஒருத்தி நம்  கூட பொறக்கலியே என […]

September 30 2018 0Comment

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு:

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு: திரு.வைரமுத்து அவர்கள் தாயாரை பழித்து பேசிய பிறகு  பெரிய கோபம் என் மேல் எனக்கே காரணம்  இது  ஏதோ ஒரு  வைரமுத்து  தான் இப்படி என்றால்  அடுத்த வேலையை  நான் பார்க்க  போயிருக்கலாம் ஆனால் ஓராயிரம்  வைரமுத்துகள் இந்து என்று சொல்லிக்கொண்டு பிராமணரை எதிர்க்கின்றேன் என்கின்ற போர்வையில் இந்து மதத்தை  பெரிய அளவில்  அசிங்கப்படுத்திக் கொண்டும், காயப்படுத்திக் கொண்டும்  இங்கு இன்னும் உலவி கொண்டு இருக்கின்றார்கள் என்கின்ற வேதனை தான் என்னை […]

September 28 2018 0Comment

நாராயணா !!! நாராயணா !!!

நாராயணா !!! நாராயணா !!!   இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைத்து தவறு செய்து  மாட்டி கொண்டவனை கெட்ட மனிதன் என்கின்றோம் வாய்ப்பு எதுவும்  கிடைக்காததால்  தவறு எதுவும் செய்யாதவனை  நல்ல மனிதன்  என்கின்றோம் உண்மையில்  வாய்ப்பு கிடைத்தும்  தவறு செய்யாதவனே மாமனிதன் என புரிந்துகொள்ள  தவறி விட்டோம்……  தவறவிட்ட நண்பர்களே!!!!! வாய்ப்புகள்  ஆயிரம்  நீங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தன்னிலை என்றும் மாறாத  என் நண்பர் #நாராயணமூர்த்தியே என்னை பொறுத்தவரை  என் வாழ்வில் நான் கண்ட மாமனிதர்.. […]

September 15 2018 0Comment

கலக்கல் கணேசன்:

கலக்கல் கணேசன்: 1985-1986 களில் கடவுளை வணங்குபவன் முட்டாள் கடவுள் இல்லை  கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி 786 என்ன அல்லாவின் டெலிபோன் நம்பரா பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்று நிறைய சுவர்களில்  அப்போது நான் வசித்த அடையாறு  பகுதியில் எழுதியவனும் நானே… 400 க்கும் மேற்பட்ட  பிள்ளையார் சிலைகளை உடைத்தவனும் நானே….. சரியாக அதில் இருந்து 10 வருடங்கள் கழித்து 1995-1996 களில் […]

September 15 2018 0Comment

திரு.நாகை செல்வகுமார் & திருமதி.ஷோபா 

இந்த சாதரணமானவனை அசாதாரணமானவனாக ஆக்கிய பெருமை வெகு சிலருக்கு உண்டு. அதில் ஒருவர் சகோதரர் திரு.நாகை செல்வகுமார் இன்னொருவர் என் ஆருயிர் சகோதரி  திருமதி.ஷோபா  இருவரையும் இன்று விளம்பலில் வைத்து சந்தித்தபோது எடுத்த படம் என்னை பார்க்க ஷோபாவின் குழந்தைகளான கிருஷ்ணாவும், ராக  வர்ஷினியும்    சூரியன் வரும் முன்னரே சோம்பல் மறந்து  தூக்கம் துறந்து  எழுந்து  குளித்து  நான் வரும் சாலையிலேயே  காத்து இருந்தது நெஞ்சம் நெகிழ வைத்த நிகழ்வு என்ன தவம் செய்தேனோ மாதவா […]

September 15 2018 0Comment

உசுரு போய்டணும்

உசுரு போய்டணும் உசுரு போய்டணும் சில விஷயங்களை  பார்த்த பிறகு, அனுபவித்த உடனே….. அப்படி ஒரு சம்பவம் நேற்று பாண்டிசேரியில் வைத்து  நடைபெற்றது 2 மாதத்திற்கு முன்  எனக்கு  எழுதப்பட்ட  கடிதம் 1 வாரம் முன் கிடைக்கப்பெற்றது  நண்பர் மூலமாக…. கடிதம் கிடைக்கப்பட்ட உடன்  கடிதம் எழுதியிருந்த  அந்த அம்மாவிடம் சொல்லி இருந்தேன் பாண்டி வந்தால் சந்திப்பததாக  நேற்று பாண்டி  சென்றதால் சந்திப்பு உருவம் பெற்றது சொன்னாள் சுருக்கமாக பரம்பரை பணக்காரி தன் கதையை சோகமே வாழ்க்கை […]

August 13 2018 0Comment

குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2

குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2 வழக்கம் போல  நிறைய அறிவுரை குடியை பற்றி  நான் எழுதியதற்கு நீங்கள் நன்றாக வளர்ந்து வீட்டீர்கள் ஏன் உங்களைப் பற்றிய பழைய கதை இப்போது என்று…. பழையது புரியாததால்  தான் நம்மை இன்னும் பழைய விஷயங்களே ஆண்டு கொண்டு இருக்கின்றது ஆண்டாண்டு காலமாக… ஆஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு  தேசபக்தர்களின்  தேசபக்தி என்று பெயர் வைத்து  கொண்டாடி கொண்டு இருக்கின்றோம். . தொடர்ந்து இருந்துவிட்டு போகட்டும்  சிலரின் அறியாமை  அவர்களால் அறியப்படாமலேயே… […]

August 13 2018 0Comment

குடி, குடிக்காதவனையும் கொல்லும்-1

குடி, குடிக்காதவனையும் கொல்லும்: நாள் முழுவதும் நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் தனிமையை ரசிக்க  தவிக்கவிட்டதை நினைத்து நினைத்து மாய்ந்து போக  நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் அனுபவித்து குடித்திருக்கின்றேன் நண்பர்களோடு குடித்ததை விட  தனிமையில் குடித்த காலங்கள் அதிகம் குடித்திருந்தால் யாரிடமும் பேச மாட்டேன்  என்பதால்  கிட்டத்தட்ட கவிஞர் கண்ணதாசன் போல  நிறைய  யோசித்திருக்கின்றேன்  யாசித்த போது ஏளனம் செய்தவர்களை  பற்றி நிறைய சிந்தித்து இருக்கின்றேன்  ஏன் இந்த நிலைமை  எனக்கு மட்டும் என்கின்ற எண்ணம்  என்னை சூழ்ந்த […]

June 21 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 7

மறக்க கூடாத மனிதர்கள் – 7 P.B.வேணுகோபால் அண்ணாமலை பல்கலைக்கழகம் நேற்றும் இன்றும் என்றும் எனக்கொரு  அதிசயம் இவன் இவனுக்கொரு  அதிசயம் நான் மாணவனாக சிதம்பரம் சென்றவனை மனிதனாக்கிய ஆறில் ஒன்று இவன் இவன் என் நண்பனாகியது என் பெரும் பேறு வேணு வகுப்பில் எப்போதும் அமரும் இடம் முதல் மேசையில்; அதனால்தான் என்னவோ  வகுப்பிலும் எப்போதும் முதல் தான்….. எனக்கு இருக்கை கடைசியில் என்பதால் என்னவோ வகுப்பிலும் எப்போதும் கடைசி தான்….. ஏணி வைத்தாலும் எட்டி […]

June 21 2018 0Comment

மனித உளவியல் 2- Sigmund Chocku

மனித உளவியல் 2   Sigmund Chocku   நீங்கள் பேசும் போது   உங்கள் எதிரில்  இருந்து கேட்பவர் கை கட்டி உங்கள் பேச்சை கவனிக்கின்றார் என்றால்   நீங்கள் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு   வேறு உபயோகமான  வேலையை பார்க்க செல்லலாம்   அப்படிப்பட்ட நபர்களுடனான தொடர்பை நீங்கள்   உடனடியாக துண்டித்தால்   வெறும் கையோடு நீங்கள் இருந்தாலும் ஒரு நாள் கனகதண்டிகை ஏறுவீர்கள    பேசு கவனி அல்லது நிறுத்து   […]

May 30 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4  எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் நேரு  மாமாவை  ரொம்ப……   மாமா என்ற சொல்லிற்கே அழகு அது என் வேணு மாமா  பெயருடன்   சேரும் போது  தான்…..   என்பதாலோ என்னவோ   எனக்கு நேருவை மாமா என்று சேர்த்து அழைக்க பிடிக்கவே பிடிக்காது   ஏனோ அன்றும் இன்றும் என்றும் மாமா என்றால்   எனக்கு என் வேணு மாமா  மட்டும் தான்    நிறைய யோசித்து இருக்கின்றேன் […]

May 30 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2 பரிசுத்தம் சரணாகதி ஒழுக்கம் நேர்மை இவற்றின் மொத்த  உருவம்  சந்தைபேட்டையின் சங்கீதம் என் பெரம்பலூர் சண்முகம் நான் நாலு பேருக்கிட்ட கற்ற வித்தையை என்னிடம் மிக சிறப்பாக கற்று என்னை  விட மிக பெரிய அளவில் தன்னை நகர்த்தி கொள்ளும், கொண்டிருக்கும் வல்லமை கொண்டவர் பெரம்பலூரே இவர் பெயரை உரக்க சொல்லும் காலம் வரும் இவருக்கும் எனக்கும் நடுவில் ஒரு  சிறு  கசப்பு சேலம் அன்பினால் மீண்டும் இணைப்பு காரணம் […]

May 30 2018 0Comment

சிறகை விறி

சிறகை விறி   பொறுமை கொண்டு வெற்றி  கோட்டை தொட என் வாழ்த்துக்கள் காரணம் பூமி கூட  பொருத்து  இருந்து தான்  பூகம்பத்தை  வெளிப்படுத்துகின்றது…… ஓடுவதாக இருந்தால் துரத்தி கொண்டு ஓடுங்கள் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள் நம்மை தூக்கி வீசி விட்டார்களே என்னும் என் உறவுகளே நீங்கள் தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கின்றது என்பதை மறந்து விடாதே வாய்ப்பு கிடைத்தது என்று சிறகை விரித்து பறக்க ஆரம்பித்து  விடு இப்போதே….. […]

May 30 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 1

மறக்க கூடாத மனிதர்கள் – 1 குறியிட்டு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள நண்பர் சேகர் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிறந்த உழைப்பாளி மிக சிறந்த ஆரோக்கியமான மனிதர் இவரின்  உடல் மட்டுமல்ல உள்ளமும் அப்படியே திருமண பேச்சு வந்த  போது ஆண்டாளின் தீவிர பக்தன் எடுத்த முடிவு என்னை, என்னை நினைத்து  வெட்கி தலை குனிய வைத்தாலும் சேகர் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுக்கும் போது நானும் அதற்கு காரணமாய் இருந்தேன் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமையே…… அந்த […]

May 30 2018 0Comment

வெற்றி உனதே….

வெற்றி உனதே…. சண்டை  போட்டு  பல நாள்  பேசாம  இருப்பது  வைராக்கியம்  இல்லை……. கெளரவம் பார்க்காமல் முதல்ல  பேசறது தான் மனிதம் அப்படி பேசறவன்  தான் புனிதன் வன்மம் விட்டு முடியும் வரை முயற்சி செய்யுங்கள் உன்னால்  முடியும் வரை அல்ல நீ நினைத்த செயல் முடியும்  வரை……….. முடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் மறந்து விடாதே நாளை நமதே…… வெற்றி  உனதே…. இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் […]

May 30 2018 0Comment

கருவறை to இருட்டறை

                                                                             கருவறை to இருட்டறை முதியோர்  இல்லத்தில்  இருக்கும் ஒரு அம்மாவின்  பதிவு: நீ இருக்க  ஒரு  கருவறை  இருந்தது  என்  வயிற்றில் ஆனால் […]

May 30 2018 0Comment

மணமகன் கவனத்திற்கு

மணமகன் கவனத்திற்கு: நான்  காசு  கேட்டால்…  “பிச்சைக்காரன்”  பட்டம்  கொடுக்கும்  என்  சமூகமே பல  இலட்சம்  வரதட்சணை  கேட்கும்  அயோக்கியனுக்கு… திருட்டு பயலுக்கு ……. “மாப்பிள்ளை”  என  பட்டம்  கொடுப்பது  தகுமா????? இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் P சொக்கலிங்கம்            

May 30 2018 0Comment

அறை  vs அரை 

அறை  vs அரை  ஆண்டாளிடம் நான் இதுவரை மனதார வேண்டிய ஒரே  விஷயம் என்று ஒன்று உண்டு மனதார  சொல்கின்றேன் என்  தாயின் மரணத்திற்கு முன் என்  மரணம் இருக்க வேண்டும்….. காரணம் என்னை சுமந்த அவளை   நான் நால்வரோடு ஒருவனாக சுமக்க முடியாது தாயாக அவள் எனக்கு செய்ததை விட  நான் இன்று வரை அவளுக்கு செய்து அவளை மிஞ்சி இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறி  தான்?????? எனக்கு தெரிந்த வரை என்னை […]

May 30 2018 0Comment

எத்தனையோ மனிதர்கள் ….

எத்தனையோ மனிதர்கள்  வித விதமான பாடங்களை என் முதுகுக்கு பின்  நடத்தி சென்று இருக்கின்றார்கள்  நான் இவருக்கு வகுப்பு எடுத்திருந்தாலும் நான் பாடம் படிக்க நிறைய இருக்கின்றது இவரிடம்….. நிறைய பேசப்படுவார் இவர் இனி  ஆவடி சாய் சுபா சரவணன் …..

May 30 2018 0Comment

முன்னோக்கி செல்கின்றேன் 

முன்னோக்கி செல்கின்றேன்  மிகுந்த எச்சரிக்கையுடன்  உறுதியுடன்   கால் பதித்து …. பின் இருந்து  பார்ப்பவர்கள்  பின்னோக்கிய பயணம்  என நினைக்க  நான்  என் வாழ்க்கையை எந்த தலைமைக்கும் அர்ப்பணிக்காமல்  எனக்கென்று  புதிய  தனி பாதையில்…… வெல்ல  வெற்றிகள்  எனக்காக என்று காத்திருக்கும் போது இனி எல்லாம் நலமே……….      

May 30 2018 0Comment

மீன்

மீன் மீனாக  பிறந்து  சாவது  என்று  முடிவெடுத்துவிட்டால் பொழுதுபோக்கிற்கு  மீன் பிடிப்பவனின்  தூண்டிலில்  சிக்காதே பிழைப்பிற்கு  மீன்  பிடிப்பவனின்  வலையில்  சிக்கிடு உன்  மரணம் கூட ஒருவனை  வாழ வைக்க வேண்டும் நீ வாழ வேண்டும் என்றால் அடுத்தவன் வலி இல்லாமல் வாழ வழி ஏற்படுத்தி கொடு கொடு கிடைக்கும் கொடு நிறைய கொடு கொடு கொடுத்து  கொண்டே இரு கட்டாய கவிஞன் #மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம் […]

May 29 2018 0Comment

சந்தோஷம்

சந்தோஷம் எனக்கு பரிச்சயமானவர்கள் வாஸ்து பார்க்க என்னை அழைத்து அதன்பின் அதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் நம்மிடம் பேசும்போது ஏற்படும் பூரிப்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை – அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும் இந்த உண்மை. எந்தவித எதிர் கேள்வியும் இல்லாமல் சொன்னதை அப்படியே செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் பலருண்டு. அதில் சிலருக்கு வாஸ்துவை விட என் மேல் ஈடுபாடும் அதிகம்; நம்பிக்கையும் அதை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் […]

May 29 2018 0Comment

இரும்பு திரை 

இரும்பு திரை  மக்களின் மாய திரையை கிழிக்கும் வண்ணத்திரை…….. For past 1 week. No phone calls No vastu No dear @ near That too after 7 days juice fasting After very very long time Today had been to cinema theater Nice theater Good AC Good seat Enjoyed like a kid to watch a cinema with absolute happy […]

May 29 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

May 29 2018 0Comment

கலம் உன்னை கலாமாக்கும்:

கலம் உன்னை கலாமாக்கும்: வாழ்க்கை  பிடிக்கவில்லை  என்றால்  தற்கொலை  செய்து  கொள் உடனே….. தற்கொலை  செய்து  கொள்ளும்  அளவிற்க்கு துணிவிருந்தால் வாழ்ந்து  பார்… என்ன  நடக்குமோ  அது நடந்தே தீரும்  என்றாகி விட்டால்  பின்  அதை கண்டு பயந்து  நடுங்க  என்ன  இருக்கின்றது…… எதுவுமே  சரியில்லாத போதும்  எல்லாம்  சரியாகி  விடும்  என்று  நம்பு….. ஏணியின்  உச்சியை  அடைய  ஆசைப்பட்டால் அதை  கீழ் படியில்  இருந்து  தொடங்கு காலத்தை  தவிர  வேறு  எதுவும் உனக்கு  சொந்தமில்லை…  நினைவில்  […]

May 29 2018 0Comment

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா?

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா????? தைரியத்தின்  மறுபெயர்  தெரியுமா?  அதை  தான்  தன்னம்பிக்கை என்போம்.  ஒருவர்  தன் வாழ்வின்  எந்த சூழலிலும்  தன்னம்பிக்கையை  இழந்து  நிற்க கூடாது. தைரியத்துடன் + தன்னம்பிக்கையே  நம்மை வழி நடத்தி வாழ வைக்கும்.  இதை விளக்க நீண்ட நாள் முன் நான் விரும்பி படித்த கதை ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் காலையில் எழுந்ததும் சூரியனின் உதயத்தை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காலையில் கண் […]

May 29 2018 0Comment

சீட்_பெல்ட்:

நேற்று சென்னை மேடவாக்கத்தில் வேலை ஒன்றை முடிக்க வேண்டி இருந்ததால் வேளச்சேரி வழியே பயணம் நான் சீட் பெல்ட் போடாததால் போலீஸ் நிறுத்திய உடன் பக்கத்தில் இருந்த என் நண்பன் மடக்கிய போலீசிடம் தல ஆளும் கட்சி தல என்றதும் உடனே அவரும் தல நாங்க 5 பேரு மத்தவங்கனா 50 ரூபாய் வாங்கலாம் நீங்க 100 ரூபாய் கொடுக்கணும் அதுக்கு கம்மியா கொடுத்தா வாங்கமாட்டேன் என்று செல்லமாக சிணுங்கி அன்பு சண்டையிட்டு 100 ரூபாய் எங்களிடம் […]

May 29 2018 0Comment

நாராயணா:

நாராயணா…… ஆண்டாள் கொடுத்த 30 லட்சம் ரூபாய் காரில்  காருக்குள் குளிரூட்டப்பட்டு தனியே போனாலும் சென்னை வெயிலால் வெறுப்படைந்து மதிய தூக்கம் கண் தழுவ போரூர் சிக்னலில் சிக்னலுக்காக நின்றபோது வயதான  உயரமான  அழுக்கு வெள்ளை வேட்டி சட்டையுடன் என்  இடது பக்க ஜன்னலை தட்டிய போது அவர் முகத்தை பார்த்தேன் ஏனோ என்  அப்பா அந்த  நொடியில் நினைவுக்கு வந்துபோனார் என் அப்பாவும் நான் கல்லூரி  படிக்க இப்படித்தானே பணம் கேட்டிருந்திருப்பார் வந்த  நொடி  நினைவை […]

May 29 2018 0Comment

வெற்றி வெற்றி வெற்றி…….

வெற்றி வெற்றி வெற்றி……. #பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு  கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது #நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன் உண்மையே………. இருந்தாலும் மனிதர்களால் தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான் முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்.! எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள்..! தோற்றால் புலம்பாதே – போராடு, கிண்டலடித்தால் கலங்காதே – மன்னித்துவிடு, தள்ளினால் […]

May 29 2018 0Comment

Punctuality / காலந்தவறாமை :

Punctuality / காலந்தவறாமை : ஒரு இடத்திற்கு Late ஆக போக ஆயிரம் நல்ல காரணங்கள் இருப்பினும் அதற்கு மாறாக Late ஆவதே மேல் என இப்போதே முடிவெடுங்கள் பிரபஞ்சம் எத்தனை மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றது என்பதை நேரத்திற்கே வெளிச்சம் என விட்டு விடலாம் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில நான் இல்லை என்றால் நானே இல்லை என்று அர்த்தம் என் மாற்றம் உங்களையும் மாற்றட்டும் மாற்றமே மாறாதது சர்வம் கிருஷ்ணார்ப்பணம்…… கட்டாய கவிஞன்…

May 29 2018 0Comment

நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

May 28 2018 0Comment

தமிழர்களின் அடையாளம்

                                                                   தமிழர்களின் அடையாளம்  பாரதத்தின் பெருமை உலகத்தின் ஒரே ஞானி  நம் தேசத்தின் மூவர்ண கொடியை நினைவுப்படுத்தும் வகையில் மூவரும் ஒரு சேர இருக்கும் இந்த படமானது ஒவ்வொருவர் வீட்டு பூஜை […]

May 07 2018 0Comment

சாதனையை நோக்கி

  அக்கினி குஞ்சு நீ என்பது உனக்கு தெரியுமா   எரிமலையில் தினம் குளிக்கும் பூகம்பம் நீ என்பது சராசரிக்கு புரியுமா   ஒடுங்கிய உள்ளமும் கலங்கிய எண்ணமும் உன்னை தோற்கடிக்க முடியுமா   பர பிரம்மமே…… இன்று முதல் நித்தம் அதிசயம் தான்…….   காத்திருங்கள் எதிர்பார்த்திருங்கள்…….   இழப்பதற்கு எதுவும் இல்லை ஜெயிப்பதற்கு இந்த உலகமே உண்டு   வாழ்க்கை வாழ்வதற்கல்ல கொண்டாடுவதற்கு   என்றும் அன்புடன் ஆண்டாள் P சொக்கலிங்கம்

May 07 2018 0Comment

உசுரு எப்போ போகணும்

நீண்ட நாள் வாடிக்கையாளர் நீண்ட இடைவெளிக்கு பின் அழைப்பு ஆவடியில் இருந்து கிளம்பும் போது கூப்பிட்டேன் வருகின்ற வழியில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று வேகமாக சுவரில் அடித்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் எல்லாம் சமைச்சாச்சு உங்களுக்காக இன்று வீட்டில் சைவ சாப்பாடு ok done வாழ்க வளமுடன் நான் இதுவரை 25000 பேர் வீட்டிற்கு போய் இருப்பேன் 40 பேர் வீட்டில் தான் சாப்பிட்டு இருப்பேன் இதுவரை பிறப்பால் மீனவர்கள் தான் எனக்கு […]

October 17 2017 0Comment

ஆண்டாள் கடிதம்: 46

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவில்:   “ஓம் பூர்புவஸ்ய தத்சவித்துவரரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹீ தியோ யோந பிரஸோதயாத்” யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சக்தியை வணங்குவோம். அந்த சக்தி நமக்கு புத்தியை நன்கு பிரகாசிக்கச் செய்யட்டும். அந்த சக்தி இருக்கும் சிவ ஸ்தலத்தில் தினமும் சூரிய ஒளி  நந்தி மீது பட்டுச் சிதறி அதே ஒளிக்கதிர்கள்   கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலித்து பிரகாசிக்கும்  மிகவும் அற்புதமான காட்சியை நீங்கள் காண […]

October 09 2017 0Comment

ஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக

என் மேல் பாசம் காட்ட என் வாழ்க்கையில் 1000  முக்கியமானவர்கள் உண்டு என்று வைத்து கொண்டால்   அதில் முதல் பத்து இடத்திற்குள் 2 பேருக்கு இடம் உண்டு.   அதில் ஒன்று அர்ஜுன்……   அர்ஜுனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்வாரே அவர் கவிதையில்………………….   “எனக்கு ரோஜாவை விட ரோஜா செடியை அதிகம் பிடிக்கும். காரணம் ரோஜா செடி தான் தொட்ட உடன் ரத்த பாசத்தை காட்டுகின்றது”.   […]

October 08 2017 0Comment

ஆண்டாள் கடிதம் – 44 சாய்பாபா வழிபாடு சரியா?????

சாய்பாபா வழிபாடு சரியா?????   முகில் குழு என்று கீழ்க்கண்ட message Forward ஆக வந்தது. இந்த message ஐ முதலில் படிக்கவும்:   “””எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இந்து சமயம்..?   இறைவனுக்கு இணையானவர்களா ஆச்சாரியார்கள்? இன்னும் ஐம்பது வருடங்களில், சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன், வினாயகர், எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன்! சிவபெருமான், பெருமாள் என்றால் யார் என்று கேட்பார்கள் போல..!   ஏனென்றால் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்???? ஸ்ரீடி சாய்பாபா […]

October 08 2017 0Comment

ஆண்டாள் கடிதம் 43 – வேலு நாச்சியார் II

வேலு நாச்சியார் II :   நான் சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒருவருக்கு வாஸ்து பார்க்க சென்ற போது அங்கு உணர்ந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.                                                            நடுத்தர வசதி வாய்ப்புள்ள குடும்பம்; சிவகங்கை சொந்த ஊர்; […]

October 08 2017 0Comment

கடிதம் – 42 – முலாயும், மொக்கையும்…

ABCD – ஐ Any Body Can Dream என்று சொல்லலாம். அதேபோல் ABCD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன். அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்” என்பதே என்னுடைய வாக்கியம். […]

கடிதம் – 41 – தர்ம யுத்தம்

பணத்தை வட்டிக்கு விடுபவர்கள்; லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்; கொலைகாரர்கள்; திருடர்கள்; கெட்டவர்கள்; சாராயம் விற்பவர்கள்; பெண்களை வியாபாரமாக்கி பணம் சம்பாதிப்பவர்கள் etc., என இப்படி இயற்கைக்கு முரணான வகையில் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் வசதி வாய்ப்புடன் நன்றாக இருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுக்காரன் அவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றார்; பெத்த அம்மா, அப்பாவிற்கு கூட சோறு போடாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருக்கின்றார். ஆனால் அவர் நன்றாக இருக்கின்றார்; நான் மிகவும் நல்லவன்.கனவில் கூட பிறர்க்கு துன்பம் தராத […]

கடிதம் – 40 – அதுவின்றி எதுவும் இல்லை

என் பெண்ணிற்கு B.E., படிக்க PSG Tech – கோவை & Sairam – சென்னை என இரண்டு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு இருந்தது. என் பெண் தேர்ந்தெடுத்தது Sairam Engineering College – சென்னை… 10/8/2017 அன்று அங்கு அவளை சேர்க்க போனபோது தான் எனக்கும் வயதாகின்றது என்பதை நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். கூட்டத்தில் ஒருவனாக, உருவத்தில் சிறுவனாக என்னை நான் அறிந்த நாள். ஒரு வேலை சாப்பாடுக்காக வரிசையில் நின்று ஒரு சாதாரண […]

கடிதம் – 39 – சொத்தும், சொத்தையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்? –    திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். –    திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். 1953 – ம் வருடம் […]

கடிதம் – 38 – கனவும், நனவும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மாதக் கூலி வாங்கிக் கொண்டிருந்த நான், மாதக் கூலி கொடுக்கும் நிலைக்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் கனவுகள்… நான் கண்ட கனவுகள் மட்டுமே… நான் கனவு காண ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கையுடன் முரண்பட்டு இருந்த இயற்கை சமன்பாடுகள் சமமாகி போனது… இயற்கையே தன்னுடைய சமன்பாடுகளை எனக்காக மாற்றிக் கொண்டதை கண்டு, எனக்காக காத்திருந்த […]

கடிதம் – 37 – காரும், கனவும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா? குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு கஷ்டப்பட்ட காலம் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய. பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு […]

கடிதம் – 36 – தள்ளுதலும், கொள்ளுதலும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்…… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்…… என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்……. இந்த இரண்டு […]

கடிதம் – 35 – மனமும், மணமும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய […]

கடிதம் – 34 – AB – யும் CD – யும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையின் அடித்தளமே A. B. C. D – தான் ABCD – யை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் யாருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும்? யாருக்கு அவநம்பிக்கை மட்டுமே இருக்கும்? யாருக்கு எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்கும்? யாருக்கு […]

கடிதம் – 33 – குளமும், உப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எனக்கு தெரிந்த வரை வேறு எந்த துறையை சார்ந்தவர்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு வாஸ்து துறையை சார்ந்தவர்களுக்கு உண்டு. இதற்கு காரணம் வாஸ்து துறையை சார்ந்தவர்கள் கட்டாயம் ஒருவரின் வீட்டிற்க்கு போக வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அந்த வீட்டை பற்றிய முழு விவரங்களும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். வீட்டை மட்டும் அல்லாமல் […]

கடிதம் – 32 – மார்டினும், இராமரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 10-11-1483 – ல் பிறந்து 18-2-1546 – ல் மறைந்த மார்டின் லூதர் கிங் புராடஸ்டன்ட் இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, போப்பாண்டவருக்கு எதிராக பிராசாரம் மேற்கொண்டதால் பல்வேறு வகையான துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து கஷ்டப்பட்டார். அது போன்ற ஒரு தருணத்தில் மிகுந்த மன இறுக்கத்துடன் ஒரு முறை அவர் காணப்பட்டதை கண்டு அவருடையை […]

கடிதம் – 31 – ரங்கநாதனும் ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எங்கே தன் மருத்துமனையில் ஒருவர் இறந்து விட்டால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணி என் தந்தையை அவசரகதியாக வெளியே தள்ளி விட்ட மருத்துவரின் மருத்துவமனையில் என் தந்தை இறப்பதற்கு முதல் நாள் இரவே, அவர் என்னிடம், இந்த மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை செய்தால் பணம் அதிகமாக செலவாகும். நீயே இப்போது தான் கஷ்டப்பட்டு […]

கடிதம் – 30 – இறப்பும், பிறப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 28 May 1999 உடல்நிலை சரியில்லை என்று என் தந்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். 29 May 1999  அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. 30 May 1999 காலை வழக்கம் போல் விடியல் விடிந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல். எனக்கு அன்று என்ன காத்திருக்கின்றது என்று தெரியாமல் நானும் […]

கடிதம் – 29 – விதியும், மதியும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… குரு ஒருவரிடம் அவரின் சீடர் ஒருவர் ஒருமுறை விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறார்களே? அதுபற்றி கூற முடியுமா என்று கேட்டார். குரு உடனே அந்த சீடரிடம், “உன் வலது காலைத் தூக்கு” என்றார். அவரும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றார். “சரி…. இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது […]

கடிதம் – 28 – வேரும், வெந்நீரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கொடுப்பவனுக்கு என்றுமே கொண்டாட்டம்; கொடுக்காதவனுக்கு நித்தம் திண்டாட்டம் என்று சென்ற கடிதத்தில் கூறி இருந்தேன். அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் தனக்கும், தன் குடும்பத்திற்கு மட்டும் என வாழ்ந்தவர்களின் கதையை நீங்கள் புரிந்து கொண்டால் தான் வாழ்க்கையில் நாம் நம்மை யாரோடும் ஒப்பிடாமல், ஒப்பிட்டு வீணாக போகாமல், தவறு எதுவும் செய்யாமல் நமக்கென்று ஓர் நல்ல வாழ்க்கையை […]

கடிதம் – 27 – வேரும், நீரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கொடுத்ததை புரிந்து கொடுத்தால் கொடுப்பதை அறிந்து கொடுத்தால் கொடுப்பதை தெரிந்து கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? என்கின்ற கேள்விக்கான விடை “சாவ்ஜி டோலக்கியா” www.ndtv.com – ல் அக்டோபர் மாதம் 22 –ந் தேதி “சாவ்ஜி டோலக்கியா” பற்றி வந்த செய்தியை உங்களுக்காக ஆங்கிலத்தில் தருகின்றேன். இந்த செய்தியின் சுருக்கமான தம்ழாக்கத்தை அதன் கீழே […]

கடிதம் – 26 – அனாதையும், ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… *     என் அப்பாவின் திடீர் மரணம் ஏற்படுத்தி விட்டு சென்ற வெற்றிடம் *     ஒத்தை குழந்தையாய் பிறந்து விட்டதால், சிறுவயது சகோதர, சகோதரிகள் எங்காவது தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு கொள்வதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது போல் வாய்ப்பு கிடைக்கவில்லையே என என் மனதில் தோன்றும் ஒருவிதமான […]

கடிதம் – 25 – மனிதனும், மாமனிதனும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… சரியான படிப்பறிவு இல்லாத வாகன ஓட்டுநர் கூட தினமும் தாங்கள் ஓட்டும் வாகனத்தை முதல் முறையாக எடுக்கும் போது வாகனத்தை முன் நகர்த்தி பின் தாங்கள் போக வேண்டிய திசைக்கேற்ப வாகனத்தை இயக்கி கொண்டு செல்வார்கள். சரியான படிப்பறிவு இல்லாத ஒரு வாகன ஒட்டி கூட தினமும் தன் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி தான் […]

கடிதம் – 24 – கொடு – கெடு – கேடு

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… தினமும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உயிரினம் “கொசு”. அந்த கொசுவை ஒழிக்க சில செடிகளின் இலைகள் முதலில் பயன்பட்டது. பின் கொசுவை கொல்ல கொசுவர்த்தி சுருள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு அடுத்தகட்டமாக கொசுவை இல்லாமல் ஆக்க திரவம் அடைத்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மின்சார பேட் கண்டுபிடிக்கப்பட்டது. பின் நம் உடம்பில் […]

கடிதம் – 23 – நூறு போடும் சோறு

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எறும்புகள் மழையில் நனைந்து நான் பார்த்தது இல்லை. காரணம் எறும்புகள் கூட எப்போதும் முன்னேற்பாடுகளுடன் தான் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றது. ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் ஏக்கத்துடன் மந்திரத்தில் மாங்காய் காய்க்காதா என்று வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெற நினைக்கும் செயலுக்கு மனிதர்களைத் தவிர வேறு யாரை சிறந்த உதாரணமாக சொல்ல முடியும். மனித […]

கடிதம் – 22 – அதிசயமும், பீனிக்ஸ் பறவையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை அது தவறு என்று கருதி விட்டு விட்டாலும் ஏற்கனவே இருந்த புகை பழக்கத்தின் தீய விளைவுகள் குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் புகை பிடித்து அதனை கைவிட்டவரின் உடம்பிற்கு ஏற்படுத்துவது போல் தான் நம் தீய எண்ணங்களும் / தீய குணங்களும் நமக்கு ஒரு […]

கடிதம் – 21 – சேதமும், பூதமும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நான் இதற்கு எழுதிய கடிதங்களில் (கடிதம் 16, 17, 18, 19, 20) நான் பட்ட கஷ்டம், கஷ்டத்தில் இருந்து மீண்டது, பின் வாஸ்து என்கின்ற விஷயத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி அடுத்த கட்டம் நகர்ந்து, அப்படி நகர்ந்த பிறகும் என்னிடம் வாஸ்து பார்த்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டு பூமி பூஜைக்கு என்னை அழைத்ததே […]

கடிதம் – 20 – அனுபவமும், காற்றும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… “தனியாக பிறந்து, தனியாக வாழ்ந்து, தனியாக மறைந்து” என்கின்ற உண்மை நிலை தத்துவத்தின் நடுவே கொஞ்ச காலம் நான் கற்ற வாஸ்துவினால் மேலும் எனக்கென்று நண்பர்கள், உறவுகள் ஏற்படுத்தி என் வாழ்க்கையை கொஞ்சம் சந்தோஷமாக மாற்றி வாழ ஆசைப்பட்டதற்காவும் என்னுடைய எதிர்கால இலக்கை இலகுவாகவும், சரியாகவும் அடைய – நான் வாஸ்துவை உபயோகப்படுத்தினேன். உபயோகப்படுத்துகின்றேன். […]

கடிதம் – 19 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – IV

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தை கூட அது பிறந்த உடன் அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது என்று நேதாஜி சொன்னதாக நான் மார்க்ஸிய கொள்கைகள் சம்பந்தமான புத்தகங்கள் படித்த போது படித்ததுண்டு. அதை வேடிக்கையான வாசகமாக நான் எடுத்துக் கொண்டேன் முதலில் படித்த போது. […]

கடிதம் – 18 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – III

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை) இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு […]

கடிதம் – 17 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – II

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிறப்பின் நோக்கம் இறப்பு அல்ல என்பது புரியாமல் பயணப்பட்ட நான், நினைவு தெரிந்து முதல் முதலாக திருச்செந்தூர் மண்ணை மிதித்தேன். என் வீட்டிலிருந்து நேராக திருச்செந்தூர் போனால் கையில் வைத்திருந்த பணம் பத்தாது போய்விட்டால் என்னாகும் என்ற சந்தேகம் வலுத்ததால் என் பாட்டி வீட்டிற்கு பிரயாணப்பட்ட என்னை அங்கு நான் மிகவும் மதித்த, நேசித்தவர்களே […]

கடிதம் – 16 – வாழ்க்கை – கதையல்ல நிஜம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிறப்போ மனிதர்கள் பிரித்த உயர் வகுப்பில்… வாழ்வாதாரமோ நடுத்தரத்திற்கு சற்று கீழே… பழக்க வழக்கங்களோ கீழ்த்தரத்திற்கு சற்று மேலே…. – இது தான் 1995 – 1996 க்கு முன்னே ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை பற்றிய முன்னுரை… * நல்ல வேலை – ஒரு தற்பெருமைக்காக சொன்ன பொய்யால் இல்லாமல் போனது… * நல்ல உடல் […]

கடிதம் – 15 – ஆண்டாள் கல்வி திட்டம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நிறைய பேர் சார் உங்களால் நன்றாக இருக்கின்றேன். நீங்கள் வாஸ்து பார்த்த பிறகு நன்றாக இருக்கின்றேன். குழந்தை பிறந்தது. திருமணம் ஆனது. கஷ்டம் போனது. சந்தோஷமாக இருக்கின்றோம் என்று சந்தோஷத்துடன் என்னிடம் சொல்ல கேட்டிருக்கின்றேன்… அப்படி சொன்ன அன்பு உள்ளங்களுக்கும், சொல்ல போகும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்:- உங்களுக்கு கிடைத்த உங்களுக்கு […]

கடிதம் – 14 – ஆண்டாள் கோவில்

கடிதம் – 14 –  ஆண்டாள் கோவில் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது எனக்கு விளையாட்டு மைதானம் போன்றது… நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்பதை விட நேரத்தை ஏற்படுத்தி ஆண்டாள் கோவில் செல்வதை இன்றளவும் வழக்கமாக வைத்திருக்கின்றேன்… ஒவ்வொரு முறை செல்லும்போதும் எத்தனையோ விஷயங்களை அந்த கோவிலில் இருந்து கற்று கொண்டு இருந்தாலும் சில நெருடல்களும் […]

கடிதம் – 13 – காதல்

கடிதம் – 13 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்கள் – என்பது போல் ஒரு வாழ்க்கை ஒவ்வொரு காதலர்களுக்கும்…. உடல் ரீதியாக, மனரீதியாக என காதலர்களை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்… முதல் காரணம் பற்றி பேச தேவையேயில்லை…. மனரீதியாக ஒன்றி நான் என் துணையை காதல் மூலம் […]

கடிதம் – 12 – காதல்

கடிதம் – 12 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் அப்பா மறைந்த 2 மாதங்களுக்கு பிறகு, நீர் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மீன் போல இருந்த என்னை, என் நண்பன் ஒருவன் பார்க்க வந்தான் ஒரு செய்தியோடு….  என் காதலி சொன்னதாக அவன் என்னிடம் சொன்ன செய்தி இது தான். –    என் சொக்கு எந்த முடிவெடுத்தாலும் […]

கடிதம்– 11– காதல்

கடிதம்– 11– காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பெண் பார்க்க செல்வதென முடிவெடுத்த பிறகு மதுரை சென்று என் கூட படித்த நண்பனை துணைக்கு கூப்பிட்டு கொண்டு என் பாட்டியுடன் சென்றேன் நெல்லை மாநகருக்கு… நெல்லையப்பர் கோவிலில் வைத்து பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னதால் பெண்ணும், அவள் உறவினர்களும் அங்கு ஏற்கனவே வந்திருந்து எனக்காக காத்திருந்தனர்… எனக்கு எப்போதும் […]

கடிதம் – 10 – காதல்

கடிதம் – 10 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் நண்பன் சொல்லிய உடன், நான் பெரிதும் ஆசைப்பட்ட அவளை, அவளுடைய அக்காள் வீட்டில் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், அவள் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனை தான். செய்த தொழில்கள் வேறாக இருந்ததாலும், அவரவர் கவலைகள் அவரவருக்கு என்கின்ற அளவில் […]

கடிதம் – 9 – காதல்

கடிதம் – 9 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்…. பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு, கடவுள் […]

கடிதம் – 8 – சகுனம்

  ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. […]

கடிதம் – 7

கடிதம் – 7 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மலர்களிலேயே கருநெய்தல் மலர் ரொம்ப விசேஷம் பத்மம் அதனைவிட சிறப்பு தாமரை (100 இதழ்கள்) பத்மத்தை விட சிறப்பானது புண்டரீகம் (1000 இதழ்கள்)  தாமரையை விட சிறந்தது ஸ்வர்ண புஷ்பம் (தங்கத்தால் ஆனது) புண்டரீகத்தை விட சிறந்தது ஆனால் ஆண்டாள் – ஆண்டாள் என்கின்ற துளசி எல்லாவற்றையும் விட சிறப்பானது ; மேலோங்கியது…… இத்தகைய […]

கடிதம் – 6

கடிதம் – 6 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் தங்க விமான திருப்பணி தடைபெற்று நிற்கின்றதே என்று நான் வருத்தப்படாதே நாட்களே இல்லை….  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக என் மனைவி, அம்மா, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள் என் ஞாபகத்திலேயே கிடையாது… இந்த சூழ்நிலையில் ஆண்டாள் கோவில் திருப்பணிக்காக யாரிடமும் சென்று ஆண்டாளுக்கு கொடுங்கள் […]

கடிதம் – 5

கடிதம் – 5 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… இதுவரை என்னால் எத்தைனையோ பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்திருக்கிறார்கள்…. தன்னலம் பார்க்காமல் இதுவரை தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்து உதவிய ஆயிரக்கணக்கானோர்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதல்பிரிவினர்: முதல்பிரிவினர் 70% பேர் என்று வைத்து கொண்டால், அந்த 70% […]

கடிதம் – 4

கடிதம் – 4 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நான் இதற்கு முன் குறிப்பிட்ட சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் முன், எனக்கும் ஆண்டாளுக்கும் உள்ள தொடர்பை சுருக்கமாக சொல்லி விடுகின்றேன்… என்னை ஒன்றுமே இல்லாதவன் என ஆக்கியவளும் ஆண்டாள் தான் என்னுள் ஒன்றும் இல்லை என ஆக்கியவளும் ஆண்டாள் தான் பகலை பகலுக்கு முந்திய இரவும், இரவை இரவுக்கு முந்திய […]

கடிதம் – 3

கடிதம் – 3 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் வாழ்க்கையில் வாஸ்துவினால் கிடைத்த சந்தோஷங்கள் என்று நிறைய உண்டு… அதேபோல் அதற்கு சரிசமமாக கஷ்டங்களும் நிறைய உண்டு…. கஷ்டம் – 1 அதிலும் குறிப்பாக என்னை வாஸ்துவிற்காக சந்தித்த பிறகு என் மனதிற்கு பிடித்த சில மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் என் மனதில் எப்போதும் ஆறா வடுவையும், வலியையும் […]

கடிதம் – 2

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 24, ஆகஸ்டு 2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து, என்னிடம் வாஸ்து பார்த்தவர்களுக்கு மட்டும் (300 நபர்களுக்கு மிகாமல்) எனக்கு தெரிந்த வாஸ்து, ஆழ்நிலை ஆண்டாள் தியானம் கற்று கொடுக்க முடிவு செய்துள்ளேன்… இதற்கு தலையாய காரணம் என் எதிர்கால குறிக்கோளை அடைய என்னை சற்று ஒருமுகப்படுத்த வேண்டி இருப்பது […]