ஆசையும், பேராசையும்…

ஸ்ரீ

Vastu - ஆசை, பேராசை
நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு பஸ்ஸிலோ அல்லது BMW காரிலோ பயணம் மேற்கொண்டாலும் சாலை ஒரே சாலை தான்…

நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு விமானத்தில் அந்த  விமானத்தின் முதல் வகுப்பிலோ அல்லது அந்த விமானத்தின் சாதாரண வகுப்பிலோ சென்றாலும் நாம் போக வேண்டிய இடம் ஒரே இடம் தான்….

நாம் நேரத்தை பார்ப்பதற்கு 50 ரூபாய் கைகடிகாரம் கட்டியிருந்தாலும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் கட்டி இருந்தாலும் ஒரே  நேரத்தை தான் 2 கைகடிகாரங்களும் காண்பிக்க போகின்றன.

நாம் ஆசைப்பட்டவாறு சுகபோகமாக வாழ்வது தவறில்லை. ஆனால்  ஆசை பேராசையாக மாறாத வரைக்கும் எதுவும் பிரச்சினையில்லை.  காரணம் ஆசைகளை அடைய முடியும் ஆனால் கண்டிப்பாக  பேராசைகளை அடைய முடியாது.

நம்மில் பெரும்பாலோனோர் ஆசைக்கும், பேராசைக்கும் அர்த்தம்  தெரியாமலேயே வளர ஆரம்பிப்பதற்கு முன்பே வளர்ந்து முடிந்த  திருப்தியுடன் வாழ்ந்து முடிந்துவிடுகின்றோம். எனக்கு தெரிந்த வரை  படித்த பெரியவர்களுக்குமே இதன் முழு அர்த்தம் புரியாத போது,  30 வயதே நிரம்பிய ஒரு பெண் எனக்கு நான்கு வருடங்களுக்கு  முன் அதன் முழு  அர்த்தத்தை புரிய வைத்தாள்.

இன்னும் சில தினங்களில் வாஸ்து பயிற்சி வகுப்பு  I – க்கு  வருபவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை சந்திக்க இருக்கின்றேன்.  நாங்கள் அந்த பெண்ணை  சந்தித்தபின் கடிதத்தில் சொல்லப்படாத முழு விவரத்தையும் நல்லதொரு தருணத்தில் உங்கள் அனைவருக்கும்  தெரிவிப்பேன்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

3 × 3 =