August 05 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உதயகிரி

  1. அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     முத்து வேலாயுத சுவாமி

ஊர்       :     உதயகிரி

மாவட்டம்  :     ஈரோடு

 

ஸ்தல வரலாறு:

சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது இந்த உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் முத்து வேலாயுத சுவாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது கற்கள் கொண்டு கட்டப்படும் பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கோயில். அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் தூண்கள், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

  • சித்திரை மாதத்தின் சில நாட்கள் சூரியன் மூலவர் மீது விழும் அற்புத காட்சியால், ஸ்ரீ உதயகிரி வேலாயுதசாமி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுவது சிறப்பு.

 

  • அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்சலிங்களும், ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைந்துள்ளன.

 

  • ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் அமைந்துள்ள சகஸ்ர லிங்கம் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பாகும்.

 

  • காலபைரவர் தனி சன்னதியிலும், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் தனி சன்னதிகளிலும் எழுந்தருளிகின்றனர்.

 

  • இக்கோயிலுக்கு அருகில் தாமரைக்குளம் உள்ளது. வற்றாத ஊற்றுடன் மலை மேல் அமைந்துள்ள இக்குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பது சிறப்பான ஒன்றாகும்

 

  • இங்கு வலது புறத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடது புறத்தில் ஸ்ரீ காசிவிசாலாட்சியும் எழுந்தருளிகின்றனர்.

 

  • கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், திருக்கல்யாண மண்டபம், வாகன மண்டபம், அமுத மண்டபம் என ஆகம விதிப்படி ஒரு ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்களால் அமையப்பெற்றுள்ள பழமையான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.

 

  • நில மட்டத்திற்கு கீழ், குகை போன்ற அமைப்பில் இத்திருக்கோயில் காணப்படுகிறது.

 

திருவிழா: 

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்,

உதயகிரி,

ஈரோடு மாவட்டம் . 638452

 

போன்:    

+91 9750467504

 

அமைவிடம்:

திருப்பூரிலிருந்து 16 கி.மீ., கோவையிலிருந்து 47 கி.மீ., ஈரோட்டிலிருந்து43 கி.மீ., அவிநாசியிலருந்து 25கி.மீ., ஈரோடு கோபியிலிருந்து பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

twenty − 7 =