July 22 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சேலம்

  1. அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கோட்டை மாரியம்மன்

தல விருட்சம்   :     அரச மரம்

தீர்த்தம்         :     மணிமுத்தாறு

ஊர்             :     சேலம்

மாவட்டம்       :     சேலம்

 

ஸ்தல வரலாறு:

கொங்கு மண்டலம் மலை வளமும், மண் வளமும், தமிழ் கமழ விளங்கிய நாடாக விளங்கியது. சேலம் சேரநாட்டின் ஒரு பகுதியாக திகழ்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முன் சேரநாட்டை சேர்ந்த சிற்றரசர்கள் சேலத்தில் கோட்டை எழுப்பினர். கோட்டையில் தங்கியிருந்த வீரர்கள், அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். காலத்தின் ஓட்டத்தில் அப்பகுதியில் இருந்த கோட்டை இன்று குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டது. கோட்டை இருந்ததற்கான கோட்டை மேடு என்ற பகுதி இன்றும் உள்ளது.

இங்குள்ள மாரியம்மன் திருமணிமுத்தாறு நதிக்கரையில் எழுந்தருளியுள்ளார். முன்பு பக்தர்கள் திருமணிமுத்தாற்றில் நீராடி, பின்னர் அம்மனை தரிசனம் செய்து வந்தனர். கொங்கு மண்டலத்தில் கோட்டை மாரியம்மன் தனி சிறப்புடன் இருந்ததால், சுற்றுபகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மனை தரிசிக்க நடைபயணமாக வந்து சென்றனர். இதற்காக 1876 பழைய கோட்டை பட்டக்காரர் பார்வதியம்மாள், முத்துக்குமார பிள்ளை ஆகியோர் தர்ம சத்திரம் ஒன்றை கட்டிக் கொடுத்தனர். 1881ம் ஆண்டு கோட்டை மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும்.

 

  • நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை. மாறாக இத்தலத்தில் எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம்.

 

  • மற்ற அம்பாள் தலங்களில் மனித தலை இருப்பது போல் அல்லாமல் இந்த அம்மனின் காலடியில் தாமரை மொட்டு உள்ளது.

 

  • அம்மன் சிரசில் ஜூவாலா கிரீடம், அக்னி கிரீடம் அமைப்பில் நாகம் படம் எடுத்தவண்ணம் உள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்கரத்தில் திரிசூலம் இருக்கிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய், இடது கீழ்கரத்தில் கபாலத்துடன் காட்சி தருகிறாள். இடது காலை மேல் யோகாசனமாய் மடித்து ஈசான திசையை நோக்கி அமைதி வடிவாய் ஆனந்த முகத்துடன் வீற்றிருக்கிறார்.

 

  • அன்னையின் அடியவர்கள் மாரி (மழை) வேண்டி விழா எடுத்தனர். அன்னையும் மனமுருகி செவி மழை பொழிந்தாள். இதனால் ஆடி முழுவதும் மழை பெய்து 18ம் நாள் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

 

  • சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன்,2.அம்மாபேட்டை, 3.செவ்வாய்பேட்டை, 4.சஞ்சீவிராயன் பேட்டை, 5.சின்னகடை வீதி( இராஜகோபுரம் கிடையாது), 6.குகை, 7.அன்னதானப்பட்டி, 8.பொன்னம்மாபேட்டை ஆக 8 மாரியம்மன் கோவில்களில் பெரியவள்.தலைமையாக விளங்குகிறது.

 

  • எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் சக்தி வாய்ந்த அம்மன் என்பது நம்பிக்கை. இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

 

  • ஆடிப் பெருக்கை யொட்டி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள் கோட்டை பெருமாள் கோவில் சார்பில் வழங்கப்படும்.  மாரியம்மன்க்கு அழகிரிநாத  பெருமாள்  ‘அண்ணன்’ என்ற முறையில் திருமண சீர்வரிசை பொருள்களாக சேலை ,வளையல்கள் ,மங்கல நாண் ,காதோலை ,கருமணி ,மஞ்சள், குங்குமம் ,திருக்கல்யாண மலர் மாலைகள் ,பழங்கள் வழங்கப்படுகிறது.

 

  • ஆடிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். இவ்விழாவின்போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும்.

 

திருவிழா: 

கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா இது இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும், இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிஷேகம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை மணி 4முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்,

சேலம் மாவட்டம்.

 

போன்:    

91 427 2267 845

 

அமைவிடம்:

சேலம் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

14 − 2 =