அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : பட்டாபிராமர்
தாயார் : சீதை
ஊர் : விளாச்சேரி
மாவட்டம் : மதுரை
ஸ்தல வரலாறு:
சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் காண வேண்டுமானால் விளாச்சேரியில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோயிலில் காணலாம். இங்குள்ள கோயிலில் வலதுபக்கத்தில் சீதா, இடப்பக்கம் லட்சுமணன் சகிதமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் ராமர். கருடனும், அனுமனும், துவாரபாலகர்களாக வீற்றிருக்கின்றனர். இதே கோலத்தில் தான் ராமரின் பட்டாபிஷேக காலத்தில், ராமருக்கு வலப்பக்கம் சீதையும், இடப்பக்கம் லட்சுமணனும் வீற்றிருந்தனர்.
கோயில் சிறப்புகள்:
- ஊருக்கு ஒரு கோயில் இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஊர் முழுவதும் கோயில் இருப்பதை விளாச்சேரியில் காணலாம்.
- கருடனும், அனுமனும், துவாரபாலகர்களாக வீற்றிருக்கின்றனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் விளா பூஜை நடக்கும், இந்த விளா பூஜைக்கு விளாமரங்கள் அடர்ந்த இந்த ஊரில் இருந்து தான் கோயில் நெல் கொண்டு செல்வார்கள் இதனாலேயே இந்த ஊர் விளாச்சேரி ஆனது. வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர் இது.
- காசிமாநகரில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிக புண்ணிய நதியாகிறது. இதேபோல் விளாச்சேரியிலும் வைகை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிகவும் புனிதமாகிறது
- இந்த ஊரில் பட்டாபிஷேக ராமருடன், விநாயகர், காசிவிஸ்வநாதர் – விசாலாட்சி, மாமுண்டி ஐயன், கருப்புசாமி, அழகு நாச்சியார், தட்சிணா மூர்த்தி, பூரணை புஷ்கலை சமேத ஐயனார் ஆதிசிவன் ஆகியோர் தனித்தனி கோயில்களில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
இராம நவமி
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் ,
விளாச்சேரி – 625 006,
மதுரை.
போன்:
+91- 97888 54854
அமைவிடம்:
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து தெற்குப் பகுதியில் 9 கி.மீ தூரத்தில் விளாச்சேரி அமைந்துள்ளது. டவுன் பஸ்வசதி உள்ளன.