April 21 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குணசீலம்

  1. அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரசன்ன வெங்கடாஜலபதி

உற்சவர்        :     ஸ்ரீனிவாசர்

தீர்த்தம்         :     காவிரி, பாபவிநாசம்

புராண பெயர்    :     பத்மசக்கரபட்டணம்

ஊர்             :     குணசீலம்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

தன்னை அறிவதற்காகவும் உலக மக்களின் நன்மை கருதியும் முனிவர் பெருமக்கள், மகரிஷிகள், ஞானிகள் தபஸ் செய்வது வழக்கம். அப்படி குணசீலன் எனும் மகரிஷி, ஆற்றங்கரையில் அமைந்திருந்த இயற்கைச் சூழலை உணர்ந்து, கரையையொட்டி ஆஸ்ரமம் அமைத்துத் தங்கினார். பர்ணசாலை அமைத்தார். இங்கே பெருமாளை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார். திருப்பதி ஏழுமலையானின் மீதும் அவரின் பேரழகின் மீது மாறாபக்தி கொண்டிருந்த குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசிலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசிலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. குணசீலரின் சேவை அவரின் குரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.

 

அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. ஆற்றில் வெள்ள அடிக்கடி வந்ததால் பயந்துபோன சீடர் வெங்கடேசப் பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார். வனம் நிறைந்த இந்த குணசீலம் அருகில்தான் மன்னர் ஞானவர்மாவின் கோசாலை இருந்தது. கோசாலையில் இருந்து குணசீலம் வனத்தில் மேய்ந்து விட்டு சென்ற மாடுகளிடம் யாதவர் கள் பால் கறந்து புற்று அருகே சற்று இளைப்பாறி விட்டு அரண்மனைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு சமயம் அந்த மாடுகளிடம் இருந்து கறந்து குடங்களில் ஊற்றப்பட்டிருந்த பால் புற்று அருகே யாதவர்கள் ஓய் வெடுத்தபோது மாயமாய் மறைந்தது.

திடீரென்று மன்னரிடம் பயந்தபடி இதை சொன்னார்கள். நம்ப மறுத்த அரசர் வந்து நேரில் பார்த்த போதும் இதேபோல் பால் மாயமாய் மறைந்தது. அரசரும் திகைத்தார். அப்போது அந்த வழி வந்த ஒரு அந்தணர், அருள் வந்து வைகுண்டவாசனை நாம் பிரசன்ன வெங்கடேசனாக இங்கு சுயம்பு வடிவில் எழுந் தருளியுள்ளோம். புற்றை பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் உண்மை புரியும்’ என்று பிரசன்னம் சொன்னார். அதன்படி மன்னர் உத்தர விட, புற்றின் மீது குடம் குட மாக பால் அபிஷேகம் செய்ய புற்று கரைந்து, சங்கு சக்கர தாரியாய், ஆனந்த சொரூப னாய் காட்சியளித்தார்.

அன்று இரவில் அவரது கனவில் பிரச்சன்னமான வெங்கடேசன் தான் இருந்த இடத்தில் ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படி கட்டளையிட, அதை தனக்கு கிடைத்த பாக்கியமாய் எண்ணி மன்னரும் ஆலயம் கட்டினார். இந்த ஆலயம்தான் இன்றைக்கு தென்திருப்பதிஎன்னும் சிறப்புடன் திவ்யதேசமாக புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இந்தத் தலத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. திருப்பதி பெருமாளின் திருநாமம்தான் இவருக்கும். ஏனென்றால், திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்றே குணசீலம் போற்றப்படுகிறது.

 

  • கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது.

 

  • சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை.

 

  • உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார்.

 

  • தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

 

  • சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும்.

 

  • பெருமாள் இத்தலத்தில் திரிதளம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

 

  • பெரும்பாலான கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.

 

  • உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜர் சீடர் சுருதிதேவனும், பகுவிராஜ மன்னன் கால் பாதிக்கப்பட்ட போதும் இந்தக் கோவிலுக்கு வந்து குணம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், வாய்பேச முடியாத நிலையில் இந்த கோவிலுக்கு வந்து பேசும் சக்தியைப் பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

  • கோயில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர்.

 

 

திருவிழா:

சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி. பிரம்மோற்ஸவத்தின் முக்கியத் திருவிழா, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் – அக்டோபர்) 11 நாட்களுக்கு ஒன்பது நாள் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

 

முகவரி:  

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்,

குணசீலம் – 621 204.

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91 4326 275 210 275 310 94863 04251

 

அமைவிடம்:

திருச்சி- சேலம் ரோட்டில் 24 கி.மீ., தூரத்தில் குணசீலம் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

2 × two =