April 04 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கடகம்பாடி

  1. அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     வாசுதேவபெருமாள்

தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி

ஊர்       :     கடகம்பாடி

மாவட்டம்  :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன்.மற்றவர்களெல்லாம், ராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் ராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் “நாராயணா’ என்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக பூலோகத்திலேயே தங்கியிருக்க ஸ்ரீராமனிடம் வரம் பெற்றார். சோழ மன்னர் ஒருவர் காவேரி ஆற்றின் கிளைநதியான அரசலாற்றின் கரையோரம் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வாசுதேவபெருமாளுக்கு கோயில் எழுப்பினார். அங்கே பவ்ய ஆஞ்சநேயருக்கு சன்னதியும் எழுப்பப்பட்டது. இவர் பக்தர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார். சரபோஜிராஜபுரம் என அழைக்கப்படும் கடகம்பாடியில் இக்கோயில் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • ஆஞ்சநேயர் கைகட்டி, வாய்பொத்தி, பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதித்து வருகிறார்.

 

  • அமாவாசை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது.

 

  • காவிரியின் துணை நதியான அரசலாற்றின் கரையில் ஒரு சோழ மன்னன் வாசுதேவப் பெருமாளை ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நிறுவி இந்தக் கோயிலைக் கட்டினான்.

 

  • பவ்ய ஆஞ்சநேயருக்கு ஒரு சன்னதி உள்ளது. கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் வாயை மூடிக்கொண்டு அடக்கத்திற்கு விளக்கமாகத் தோன்றுகிறார். சரபோஜி ராஜபுரம் என்று அழைக்கப்படும் கடகம்பாடியில் கோயில் உள்ளது.

 

திருவிழா: 

மூல நட்சத்திரத்தன்று விசேஷ ஹோமம், மாசி மாதம் லட்சார்ச்சனை, அனுமன் ஜெயந்தி, ஆனி திருமஞ்சனம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில்,

கடகம்பாடி-609 503,

திருவாரூர் மாவட்டம்.

 

போன்:    

+91 4366 273600

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து ஏரவாஞ்சேரி வழியாக பூந்தோட்டம் செல்லும் பஸ்களில் 25 கி.மீ., சென்றால் கடகம்பாடியை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து செல்பவர்கள் பூந்தோட்டத்தில் இருந்து ஏழு கி.மீ., சென்றாலும் கடகம்பாடியை அடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

6 − one =