February 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

  1. அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     லெட்சுமி ஹயக்ரீவர்

அம்மன்    :     மகாலட்சுமி

ஊர்       :     முத்தியால்பேட்டை

மாவட்டம்  :     புதுச்சேரி

மாநிலம்   :     புதுச்சேரி

 

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளில் மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய தைரியத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார். மது, கைடபரால் பெருமை இழந்த வேதங்களை, பரிமுகக் கடவுளாகிய ஹயக்ரீவர், உச்சி முகர்ந்து புனிதப்படுத்தினார்.

அந்த மூச்சுக் காற்றால் வேதங்கள் புனிதம் பெற்றன. ஆனாலும் அசுரர்களுடன் போரிட்ட வேகத்தில் ஹயக்ரீவர் உக்ரமாக இருக்கவே, அதைத் தணிக்க திருமகள் அவரது மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தினாள். அந்த நிலையில் அவர் லட்சுமிஹயக்ரீவர் என வணங்கப்பட்டார். வேதங்களை மீட்டதால் இவர் கல்விக் கடவுளானார்.

 

கோயில் சிறப்புகள்:

  • மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் ஹயக்ரீவ மூர்த்தி சேவை சாதிக்கிறார்.

 

  • கருவறையில் ஹயக்ரீவ மூர்த்தியின் இடது கை தாயாரையும், தாயாரின் வலதுகை எம்பிரானையும் அணைத்த வண்ணம் உள்ளன.

 

  • இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.

 

  • ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளது சிறப்பு

 

  • இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.

 

  • மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனை தரிசித்ததாக கூறுவர்.

 

  • கல்விக்குரிய கடவுள்களில் ஹயக்ரீவ மூர்த்தி எனும் பரிமுகக் கடவுள் வழிபாடு, தொன்மையானது. படிப்பில் மந்தமாக உள்ளவர்களும் பேச்சுத் திறன் குறை உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து பெருமாளை தரிசித்து அக்குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.

 

திருவிழா: 

ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை,

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு லெட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில்,

முத்தியால் பேட்டை -605 003.

புதுச்சேரி

 

போன்:    

+91- 413 226 0096 94431 04383

 

அமைவிடம்:

புதுச்சேரி நகரின் நடுவே முத்தியால்பேட்டையில் கோயில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

seventeen − one =