February 01 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திண்டல்மலை

  1. அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி

ஊர்       :     திண்டல்மலை

மாவட்டம்  :     ஈரோடு

 

ஸ்தல வரலாறு:

60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமயத் தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும், ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் உள்ளனர். முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர், நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். மெய்யறிவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு செல்லும் பக்தர்களின் குறைகள் தீர்கிறது அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது. அங்கிருந்து தொடங்கும் படிகளை கடந்தால் இடும்பன் கோயிலை அடையலாம். காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை போக்குகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

 

  • தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தருகிறார் திண்டல்மலை முருகன்.

 

  • கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

 

  • வேலாயுத சுவாமி திருக்கோயில். இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள சிறப்புடையது திண்டல்மலை.

 

  • தன்னை வணங்கியோருக்கு வற்றாத வளத்தையும் குன்றாத நலத்தையும் வாரி வழங்கும் வள்ளலாக விளங்குவதைப் போல வரலாற்றுச் சிறப்புமிக்க தேன் உலவும் நாககிரி திண்டல்மலை எனப் புகழப்படும் இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் அருள்மிகு வேலாயுத சுவாமியாகக் காட்சியளித்து அருள்பாலிக்கின்றார்.

 

  • திண்டு போன்று குன்று அமைப்பு உள்ளதால் திண்டல் என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படும் இந்த திருக்கோயிலுக்கு ஈரோடு- கோவை நெடுஞ்சாலைகளிலேயே தோரண வாயில் அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்திலேயே நெடுதுயர்ந்த அரச மரத்தின் கீழ் விநாயகப் பெருமான் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

 

  • இக்கோயிலின் முதன்மைக் கடவுளான முருகன் ஸ்ரீ வேலாயுதசுவாமி, குழந்தை வேலாயுதசுவாமி, திண்டல் மலை முருகன், குமார வேலாயுதசுவாமி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். முதன்மைக் கடவுளைப் போலவே, திண்டல் மலையின் புனித மலையும் திண்டல்பாளையம், திண்டல்மேடு, திண்டல்புதூர், திண்டமங்கலம், மேலத்திண்டல், திண்டல்கிரி, கீழைத்திண்டல் மற்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

 

  • அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார்.

 

திருவிழா: 

மாதம்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயகசதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் ,

திண்டல்மலை – 638 009

ஈரோடு மாவட்டம்.

 

போன்:    

+91-424-2430114, 94439 44640

 

அமைவிடம்:

ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

nine + one =