January 15 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணிமங்கலம்

  1. அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தர்மேஸ்வரர்

அம்மன்         :     வேதாம்பிகை

தல விருட்சம்   :     சரக்கொன்றை

தீர்த்தம்         :     சிவபுஷ்கரிணி

புராண பெயர்    :     வேதமங்கலம்

ஊர்             :     மணிமங்கலம்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் காஞ்சிபுரம் சிலபகுதிகள் பல்லவன் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஒரு சிவன் பக்தன் மற்றும் தான தர்மங்கள் செய்வதில்  சிறந்தவனாகத் திகழ்ந்தான். அதனால் அவன் உள்ளார்ந்த சிவனுக்கு ஒரு சிவாலயம் கட்ட ஆசைப்பட்டான் என்ன செய்வது! எங்கே ஆலயம் அமைப்பது என்று  தெரியவில்லை. அவரின் ஆதங்கத்தைப் புரிந்த சிவன், அடியார் வேடத்தில் மன்னரிடம் யாசகம் கேட்டார். அரசரும் தர்மம் செய்யும் நேரத்தில், அடியார் ஓரிடத்தைக் காட்டி  இங்கு ஒரு சிவன் கோயில் கட்டி தானமாகத் தரும்படி கேட்டார்.  மன்னர் தான் நினைத்ததை எவ்வாறு கூறுகிறார் என்று மெய்சிலிர்த்துப் போனார். மன்னருக்கு அடியாராக வந்த சிவன் சுயரூபத்துடன் காட்சியளித்தார். இந்த தானத்தின்  பெயராக ஈசன் பெயர் “தர்மேஸ்வரர்” என்று சூட்டப்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • கோவிலில் இறைவன், இறைவி சன்னதிகள் தனித்தனியாக நந்தியுடன் அருள்பாலிக்கிறார்கள்.

 

  • இங்கு இருக்கும் லிங்கத் திருமேனியான மூலவர் சதுர வடிவத்தில் ஆவுடையாருடன் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

 

  • தர்மேஸ்வரர் என்ற பெயருக்கு ஏற்ப தர்மம் அதாவது நீதி இல்லாத செயல் இருக்கும் இடத்தில் தர்மத்தை நாட்டுவார். எங்கெல்லாம் அதர்மம் என்று செயல் நடைபெறுகிறதோ இங்கிருக்கும் சிவனிடம் முறையிடலாம்.

 

  • வேதங்களின் தலைவியான வேதநாயகி தனிச்சன்னிதியில், சதுர பீடத்தில் நின்றபடி அழகாகக் காட்சி அளிக்கிறார். அம்பிகையின் சந்நிதியும் சதுர வடிவ விமானங்கள், தரையிலிருந்து சன்னதியுடன் சேர்த்துக் காணப்பட்டது.   அம்மனுக்கு முக்கியமாக பௌர்ணமி காலங்களில் சந்தனக்காப்பு. புரட்டாசி மாத  பவுர்ணமியன்று இவளது சன்னதியில் “நிறைமணிக்காட்சி’ வைபவம் நடைபெறும் . அன்றைய தினங்கள் காய்கறிகள், பல்வேறு பழங்கள், சிறப்பு மலர்கள் மற்றும்   தானியங்கள் கொண்டு சன்னதி முன்மண்டபத்தில் அலங்கரிப்பார்கள்.

 

  • இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்படும் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் நான்குக்கும் உரியவராக விநாயகர்கள் இங்கு அமர்ந்துள்ளார். இக்கோயிலில் இருந்து சற்று தூரத்திலிருந்தாலும், ஒரே சன்னதியில் நான்கு விநாயகர்கள் வரிசையாக பொதுவாக எதிரில் ஒரு யானை வாகனத்துடன்  காட்சியளிக்கிறார்கள். இந்த  மாதிரி தரிசனம் என்பது மிக மிக அரிது. இதுதவிர 2 விநாயகர்கள் கோயில் பிரகாரத்தைச் சுற்றி இரண்டு திசைகளிலும் இருக்கிறார்.விநாயகர் சதுர்த்தியன்று நான்கு விநாயகர்களுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. இவர் வேண்டிய புத்தியை தந்து உதவுவர்.

 

  • இங்கு சிவன் சன்னதிக்கு எதிரேயுள்ள நந்தி சிலை, கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது தட்டும்போது வெண்கல ஓசை எழுகிறது. தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்

 

  • கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைந்த சன்னதியில் சிவன், சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். இவ்வகையான விமானங்கள், தரையிலிருந்து சன்னதியுடன் சேர்த்துதான் கட்டப்படும். ஆனால், இக்கோயிலில் சன்னதியின் மேல் பகுதி மட்டும் கஜபிருஷ்ட அமைப்பில் (யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு) கட்டப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்ள, தர்மம் செய்யும் எண்ணம் உண்டாகும். அதர்மம் இழைக்கப்பட்டவர்கள் இவரை வழிபட, நீதி கிடைக்கும் என்பது நம்பிக்கை

 

 

திருவிழா: 

ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு தர்மேஸ்வரசுவாமி திருக்கோயில்,

மணிமங்கலம் – 601 301.

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:

+91- 44 – 2717 8157, 98400 24594

 

அமைவிடம்:

சென்னை தாம்பரத்தில் இருந்து 9 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் 55 என், 55 எஸ், எம் 52 எச், எம் 80 ஆகிய வழித்தட பஸ்கள் இவ்வூர் வழியே செல்கிறது. விநாயகர் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கோயிலுக்கு எளிதில் சென்று விடலாம்.

Share this:

Write a Reply or Comment

4 × two =