December 26 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழபழையாறை வடதளி

  1. அருள்மிகு சோமேசர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சோமநாதர், சோமேசர்

அம்மன்         :     சோமகலாம்பிகை

தல விருட்சம்   :     நெல்லி

தீர்த்தம்         :     சோம தீர்த்தம், கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம்

புராண பெயர்    :     பழையாறை வடதளி, ஆறைவடதளி

ஊர்            :     கீழபழையாறை வடதளி

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்றுக் இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின. கருடன் தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது.

திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கி உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை. வடதளியிலுள்ள தர்மபுரீஸ்வரர் ஆலயமே அப்பர் பெருமானால் பதிகம் பாடப்பெற்ற சிவஸ்தலம்.

 

கோயில் சிறப்புகள்:

  • சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.

 

  • பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் சோழமாளிகை என்னும் தனி ஊராக உள்ளது.

 

  • தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.

 

  • இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் – பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் – நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் – முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

 

  • பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் – 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.

 

  • திருஞானசம்பந்தப் பெருமான் “அப்பரே” என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.

 

  • சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.

 

  • மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.

 

  • சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம்.

 

  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.

 

  • இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது.

 

  • கருடன் , ஆதிசேஷன் வழிபட்ட தலம்.

 

  • இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்.

 

திருவிழா: 

ஐப்பசி பவுர்ணமி, திருகார்த்திகை, மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி,

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சோமேசர் திருக்கோயில்,

கீழபழையாறை- 612 703,

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91 – 98945 69543

 

அமைவிடம்:

கும்பகோணம் – ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

sixteen − eleven =