September 25 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுக்கோட்டை

  1. அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     அரியநாச்சி அம்மன்

ஊர்       :     புதுக்கோட்டை

மாவட்டம்  :     புதுக்கோட்டை

 

ஸ்தல வரலாறு:

புராணப் பெருமை கொண்ட, புராதனமான திருக்கோயில் இது. குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என ஆவல் கொண்டான். அதன்படி சிவாலயத்துக்கு அருகிலேயே அம்பிகைக்கும் ஆலயம் ஒன்றை அமைத்தான். அந்த அம்பிகையின் திருநாமம் ஸ்ரீஅரியநாச்சி அம்மன்.

சோழர்கள் காலத்திய ஆலயம் என்றாலும் பாண்டியர்களும் இங்கே இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர் என்று சரித்திரச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. மேலும், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இந்த ஆலயத்தில் பொறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது. அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, பல்லவர்களும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு.

 

கோயில் சிறப்புகள்:

  • இந்த அம்மன் எட்டு கைகளை உடையவனள். தனது எட்டு கரங்களில் உடுக்கை மற்றும் சூலாயுதமும்,இடது கரத்தில் சாட்டை ,மணி, பரம், குங்கும கிண்ணம் வைத்திருக்கிறாள். ஒரு காலைத் தூக்கியும், ஒரு காலை தொங்கவிட்டும் அமர்ந்திருக்கிறாள். தொங்க விட்ட காலில் சூரனை மிதித்துக் கொண்டிருக்கிறாள். தலையில் சுடர் உள்ளது.

 

  • புராணப் பெருமை கொண்ட, புராதனமான திருக்கோயில் இது. குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என ஆவல் கொண்டான். அதன்படி சிவாலயத்துக்கு அருகிலேயே அம்பிகைக்கும் ஆலயம் ஒன்றை அமைத்தான். அந்த அம்பிகையின் திருநாமம் ஸ்ரீஅரியநாச்சி அம்மன்

 

  • சோழர்கள் காலத்திய ஆலயம் என்றாலும் பாண்டியர்களும் இங்கே இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர் என்று சரித்திரச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. மேலும், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இந்த ஆலயத்தில் பொறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது. அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, பல்லவர்களும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு.

 

  • அரியநாச்சி அம்மன், உண்மையிலேயே அரிதான அம்மனாக, அழகும் கருணையும் கொண்டவளாகக் காட்சி தருகிறாள். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் வாரி வழங்குகிறாள் ஸ்ரீஅரியநாச்சி அம்மன்.

 

  • திருமணத் தடை நீங்க, தங்கம் அல்லது வெள்ளியில் பொட்டு வாங்கி, அம்மனை வேண்டிப் பிரார்த்தித்து, கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

 

  • பௌர்ணமிதோறும் லட்சார்ச்சனையும் திருவிளக்கு பூஜையும் இங்கு நடைபெறுவது சிறப்பு.

 

  • மார்கழி மாதத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நேர்த்திக்கடன் செலுத்தவும் தங்கள் பிரார்த்தனைகளை அரியநாச்சி அம்மனிடம் சொல்லி முறையிடவும் எண்ணற்ற பெண்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

 

திருவிழா: 

ஆடி மாதம், பவுர்ணமி

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில்

கீழராஜவீதி

புதுக்கோட்டை.

 

அமைவிடம்:

புதுக்கோட்டை பழயை பேருந்து நிலையத்துக்கு அருகில் கீழராஜ வீதியில் அமைந்துள்ள அரியநாச்சி அம்மன் கோயில்.

 

Share this:

Write a Reply or Comment

two + 12 =