September 18 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உடுமலைப்பேட்டை

  1. அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்)

உற்சவர்        :     விநாயகர்

தல விருட்சம்   :     வன்னி , வில்வம், அரசு

தீர்த்தம்         :     கிணற்றுநீர்

ஊர்             :     உடுமலைப்பேட்டை

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தனர். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், பல மன்னர்கள் பல கால கட்டங்களில் தனி ராஜ்யம் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். ஒர் நாள், ஒரு மன்னனின் கனவில் விநாயகர் தோன்றி, “உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட மன்னன், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • ஸ்ரீவிநாயகப் பெருமான் உடுமலை நகரில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னாள் பிரசன்னமாகி காட்சி தந்து அருள்பாலித்த இடம்தான் பிரசன்ன விநாயகர் திருக்கோயிலாகும்

 

  • இந்த விநாயகர் தற்போது கோயில் கொண்டிருக்கும் இடத்தில் தானாக பிரசன்னமாகி காட்சியளித்து அருள்பாலித்ததால் ஸ்ரீபிரசன்ன விநாயகர் எனப் பெயர் பெற்றார் எனக் கூறப்படுகிறது.

 

  • இத்திருக்கோயிலின் மூலவரான அருள்மிகு பிரசன்ன விநாயகர், ராஜ கம்பீரத்தோடு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தம்மை வேண்டிவருவோர்க்கு வேண்டும் வரம் நல்கும் இனியவர்.

 

  • இந்தக் கோயிலில் பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்) மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் உற்சவரும் விநாயகப் பெருமானே. வன்னி, வில்வம் மற்றும் அரச மரமே கோயிலில் தல விருட்சமாக திகழ்கிறது.

 

  • இந்தக் கோயிலில் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.

 

  • இங்குள்ள விநாயகர் ராஜகம்பீர கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 

  • அரை சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரபுரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர் நாளடைவில் உடுமலைப்பேட்டை என்றானது

 

  • இத்தலத்தில் உள்ள விநாயகர் 6 அடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்துடன் காட்சி தருகிறார். மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருக்கிறது.

 

  • கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசி விஸ்வநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடது புறத்தில் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சவுரிராஜபெருமாள், அவருக்கு இடது புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சன்னதி கொண்டுள்ளனர்.

 

 

 

திருவிழா: 

சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்

உடுமலைப்பேட்டை- 642126

கோயம்புத்தூர் மாவட்டம்

 

போன்:    

+91 – 4252 221 048

 

அமைவிடம்:

உடுமலைப்பேட்டையின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. கோவை, பொள்ளாச்சி மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு பஸ் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

four + 15 =