April 23 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… பண்ணாரி

  1. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மாரியம்மன்

தல விருட்சம்   :     வேங்கைமரம்

தீர்த்தம்         :     தெப்பக்கிணறு

புராண பெயர்    :     மண்ணாரி

ஊர்             :     பண்ணாரி

மாவட்டம்       :     ஈரோடு

 

ஸ்தல வரலாறு :

கேரளாவில் உள்ள மன்னார்காடு என்ற பகுதியில் மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அப்போது அங்கே இருக்கும் மக்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை ஊர் ஊராக சென்று விற்று வந்தனர். அப்படி ஒரு முறை விவசாய பொருட்களை விற்க கிளம்பிய மக்களுக்கு வழிகாட்ட அந்த ஊர் தலைவன் இல்லாததால். அப்போது அந்த ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள அம்மனை வேண்டி எங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை நீதான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினர். அப்பொழுது அங்கு ஒழித்த குரல் கவலைப்படாதீர்கள், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நான் வழி காட்டுகிறேன் என்று அம்மனின் குரல் ஒலித்தது. இப்படி அம்மனைப் பின்பற்றி தங்களது விவசாய பொருட்களுடன் கிளம்பினார் மக்கள். அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியை கடக்கின்றனர் அப்போது அங்கே ஒரு வேங்கை மரத்தை பார்க்கின்றனர் இந்த வேங்கை மர நிழலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்கள் மக்கள்.அப்போது அம்மனும் அந்த வேங்கை மரத்தின் அடியில் அமர்ந்தார்.

அப்போது தனது வேலையை முடித்துக் கொண்டு ஊர் தலைவன் மக்களை வழிநடத்த அங்கு வந்தார். அப்போது மேற்கொண்டு செல்லலாமா என அம்மனிடம் உத்தரவு கேட்க அம்மனோ இனி உங்களை வழிநடத்த உங்கள் ஊர் தலைவன் இருக்கிறார் நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே அந்த அடர்ந்த வனப்பகுதியில் குடியிருந்தார் அம்மன்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வனப் பகுதியில் நடந்தது அந்தச் சம்பவம். புலிகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் அதிகம் வாழும் வனம் என்றாலும், சுற்றுவட்டாரத்து மக்கள் பலரும் எவ்வித அச்சமுமின்றி அந்தக் காட்டிலேயே பட்டிகள் அமைத்து தங்களது ஆடு மாடுகளை மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படியொரு பட்டியில் நிறைந்திருந்த மாடுகளுக்கு மத்தியில், காராம்பசு ஒன்று மட்டும், தன் கன்றுக்குப் பால் தராமலும், மற்றவர்களை பால் கறக்கவிடாமலும் நடந்து கொண்டது. இந்த நிலை பல நாள்களாகத் தொடர்ந்தது. ஒருநாள், அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று அதன் போக்கைக் கவனித்தான் மேய்ச்சல்காரனான சிறுவன். பட்டியில் இருந்து தன்னந்தனியாக வெளியேறிச் சென்ற காராம்பசு, சற்றுத் தொலைவில் இருந்த வேங்கை மரத்துக்கு அருகில் சென்றது. அந்த மரத்தைச் சுற்றி ‘கணாங்கு புற்கள்’ நிறைந்திருந்த ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், காராம்பசு பால் சொரிந்தது. இந்த அற்புதத்தைக் கண்ட சிறுவன் ஓடோடிச் சென்று, ஊர் மக்களிடம் நடந்ததை விவரித்தான். ஊரே கூடிவந்து அந்த இடத்தை வேடிக்கை பார்த்தது. பின்னர் ஒரு சிலர் சேர்ந்து அந்த இடம் முழுவதையும் சுத்தம் செய்து பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய புற்றும், அதனருகில் ஒரு சுயம்புத் திருவுருவமும் காட்சித்தர, அதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.

அப்போது அவ்விடத்தில் குழுமியிருந்த கூட்டத்தில் ஒருவருக்கு அருள் வந்தது. ‘மலையாள தேசத்திலிருந்து மைசூர் பட்டணத்துக்குப் பொதி மாடுகளை ஓட்டிச்சென்ற மக்களுக்கு வழித்துணை யாக நான் வந்தேன். எழில்கொஞ்சும் இவ்வனப்பகுதி எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இங்கிருந்து செல்ல மனமில்லாமல் இங்கேயே தங்கிவிட்டேன். இந்த இடத்தில் எனக்கொரு கோயில் கட்டி நீங்கள் வழிபட்டால், பண்ணாரித் தாயாகிய நான் உங்கள் அனைவரையும் காத்தருள்வேன்’ என்று அருள்வாக்குக் கிடைத்தது.

ஊர் மக்கள் சிலிர்த்துப்போனார்கள். உடனடியாக அந்த இடத்திலேயே கணாங்குப் புற்களைக்கொண்டு வேய்ந்து குடிலொன்று அமைத்து, அதில் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்கள். அன்னையின் சாந்நித்தியம் திக்கெட்டும் பரவியது. பிற்காலத்தில் ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து அன்னைக்கு விமானத்துடன் கூடிய கோயிலை எழுப்ப, இன்றைக்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் என விரிவடைந்து மிக அற்புதமாகத் திகழ்கிறது பண்ணாரி அம்மன் ஆலயம். அம்மன் சுயம்புவாகத் தோன்றிய இந்தக் கோயில் தெற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

 

கோயில் சிறப்புகள் :

  • இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.

 

  • தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது

 

  • பண்ணாரி அம்மன் ஆலயம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இது தமிழகம் மற்றும் கர்நாட எல்லையில் இருக்கும் வனப்பகுதி என்பதால், இரு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கும் பிரியமான தெய்வமாக திகழ்கிறாள்

 

  • பக்தர்கள் காடுகளுக்கு போய் மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்கிறார்கள்) கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள்.முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 4 மணி முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.

 

  • கடைசியாக ஆடு, மாடு, போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள். இக்கோயிலின் குண்டம் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்புகழ் பெற்றது. தமிழ்நாடு தவிர கர்நாடக மாநில மக்களிடையேயும் பெரிய அளவில் புகழ் பெற்ற தலம்.

 

  • பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காண

 

திருவிழா: 

பங்குனி குண்டம் பெருந்திருவிழா 20 நாள் திருவிழா

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:  

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்,

சத்தியமங்கலம், பண்ணாரி – 638 451,

ஈரோடு மாவட்டம்.

போன்:    

+91-4295-243366, 243442, 243 289

அமைவிடம் :

சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. சத்திய மங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சத்தியமங்கலம் 15 கி.மீ., ஈரோடு 77 கி.மீ., கோவை 82 கி.மீ., சேலம் 170 கி.மீ., மைசூர் 127 கி.மீ., திருப்பூர் 65 கி.மீ.,

 

Share this:

Write a Reply or Comment

16 + twenty =