January 09 2021 0Comment

அயோத்யா ராமர் கோவில்:

அயோத்யா ராமர் கோவில்:

அயோத்தியாவில் கட்டப்படவுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் சம்பந்தமாக நேற்று 04/01/2021 மதியம் திரு தண்டபாணி மற்றும் திரு பெருமாள் அவர்களுடன் திரு. மிலிந்த் ப்ராண்டே அகில உலக பொதுச்செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத், திரு. P.M.நாகராஜன் தென்பாரத அமைப்புச் செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் திரு ஸ்ரீ ராமன் அமைப்பாளர்- விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழகம் சந்தித்த போது எடுத்த படம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் புதியதாக கட்டப்பட உள்ள ராமர் கோவில் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். விருப்பம் தானே வாழ்க்கை. வாழ்க்கை சுவைபட விருப்பம் நிறைவேற வேண்டும். ஜனவரி 15 2021 இல் இருந்து பிப்ரவரி 27 2021 க்குள் இதற்கான நன்கொடை பொதுமக்களிடமிருந்து பெறப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் தயவுகூர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ராமர் அவதரித்த அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இப்போது பணம் கொடுக்காவிட்டால் எப்போதும் கொடுக்க முடியாது என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினமும் இப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன். எங்கு யாரிடம் கொடுக்க வேண்டும் என்கின்ற விவரங்கள் விரைவில்…. VHP யின் மக்கள் பணி சிறக்க ஆண்டாள் பக்தர்கள் பேரவை என்றென்றும் தோள் கொடுக்கும்.. என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

20 + six =