அயோத்தி (ஆங்கிலம்:Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பைசாபாத மாவட்டத்தில் இருக்கும் ஒரு அயோத்தி மாநகராட்சி ஆகும்.
#ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது.
இந்நகரம் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சமசுகிருதம் – பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது.
மாநிலம்: உத்தரப் பிரதேசம்
மாவட்டம்: பைசாபாத் மாவட்டம்
அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும்.
#வரலாறு :
சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது.
#விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.
அவத் பகுதி இசுலாமியர்களின் ஆட்சியில் அவுத் நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது.
#பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இங்கிருந்த ராமர் கோவில் இடித்துவிட்டு இங்குள்ள மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது.
பல ஆயிரம் உயிர்கள் கடவுளின் பெயரால் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்தி பிரச்சினை இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.
Share this: