July 27 2022 0Comment

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

 

அன்று
வீடு நிறைய குழந்தைகள்
இன்று
வீட்டுக்கொரு குழந்தை
அன்று
பெரியவர் சொல்லி
பிள்ளைகள் கேட்டனர்
இன்று
சிறியவர் சொல்ல
பெரியவர்கள் முழிக்கிறார்கள்
அன்று
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
அன்று
படித்தால் வேலை
இன்று
படிப்பதே வேலை
அன்று
வீடு நிறைய உறவுகள்
இன்று
உறவுகள் அற்ற வீடுகள்
அன்று
உணவே மருந்து
இன்று
மருந்தே உணவு
அன்று
முதுமையிலும் துள்ளல்
இன்று
இளமையிலேயே அல்லல்
அன்று
உதவிக்கு தொழில் நுட்பம்
இன்று
தொழில் நுட்பமே உதவி
அன்று
யோக வாழ்க்கை
இன்று
எந்திர வாழ்க்கை
அன்று
படங்களில் பாடல் கருத்தானது
இன்று
கருத்தே இல்லாதது பாடலானது
அன்று
ஓடினோம் வயிற்றை நிறைக்க
இன்று
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
அன்று
பெரியோர்கள் பாதையில்
இன்று
இளைஞர்கள் போதையில்
அன்று
ஒரே புரட்சி
இன்று
ஒரே வறட்சி
அன்று
வளச்சியின்
பாதையில் இளைஞர்கள்
இன்று
போதையின்
பாதையில் இளைஞர்கள்
அன்று
ஊரே கூட கோலாகல விழா
இன்று
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
அன்று
கைவீசி நடந்தோம்
இன்று
கைப்பேசியுடன் நடக்கிறோம்
அன்று
ஜனநாயகம்
இன்று
பணநாயகம்
அன்று
விளைச்சல் நிலம்
இன்று
விலை போன நிலம்
அன்று
தொட முடியாத உச்சத்தில் காதல்
இன்று
தொட்டு முடியும் எச்சம் காதல்
அன்று
கோடை விடுமுறையில்
உறவுகளிடம் தஞ்சம்
இன்று
கோடை விடுமுறையில்
உறவுகள் என்றாலே அச்சம்
அன்று
நிறைந்தது மகிழ்ச்சி
இன்று
மகிழ்வை தேடும் நிகழ்ச்சி
அன்று
வாழ்ந்தது வாழ்க்கை
இன்று
ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை…
வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல கொண்டாடுவதற்கு
தயவு கூர்ந்து கொண்டாடுங்கள்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

3 × 5 =