அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வரும்பொழுது கோவை விமான நிலையத்தில் புதிய தமிழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களை சந்தித்து உரையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அரசியல் ரீதியாக
சாதிய ரீதியாக
அவர்மேல் நிறைய பேருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்
நான் அவரிடம் பேசிய பிறகு அறிந்து கொண்ட விஷயம்
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மேலே வரவேண்டும்,
சாதிய சிந்தனை ஒழிய வேண்டும்,
மதமாற்றம் இருக்கக்கூடாது,
இந்துக்களின் பலம் குறையக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்.
அவர் மற்ற அரசியல் தலைவர்கள் போல் அல்லாமல் மிகவும் முதிர்ச்சி அடைந்த மாறுப்பட்ட தலைவராக இருக்கிறார் என்பதை நான் அடித்துச் சொல்வேன்.
அதற்காக அவருக்கு மனம் உகந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
பேச்சின் இடையிலே பசும்பொன் முத்துராமலிங்கம் தெய்வம் குறித்த அவருடைய கருத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாமே என்றதற்கு
அவர் சொன்ன பதில்:
எனக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து எந்தவித அவதூறு கருத்துக்களும் தனிப்பட்ட முறையில் இல்லை.
#பசும்பொன்_முத்துராமலிங்க_தே வர் பெயரை வைத்து நடக்கக் கூடிய சில தவறுகளுக்காக தான் நான் சிலமுறை பேசி இருக்கின்றேன் என்றும் எடுத்துரைத்தார்.
எனக்கு உள்ள அரசியல் தொடர்புகளை வைத்து பார்க்கும்போது தலைவர்கள் ஓரளவுக்கு சரியாகத்தான் உள்ளார்கள். மக்களுக்கு நடுவில் உள்ள சில தீய சக்திகள் தான் சாதிய சிந்தனைகளை மக்களுக்குள் விதைத்து குளிர் காய்ந்து கொண்டு இருக்கின்றார்களோ என்ற சிந்தனை இவரை சந்தித்தபிறகு மேலோங்கி நிற்கின்றது.
எது எப்படி இருந்தாலும் இந்து மதம் எந்த சூழலிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக, கவனமாக, தைரியமாக உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.
இந்து மதம் குறித்த இவருடைய துணிச்சலான பார்வைக்கு நான் என் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு அவரிடம் இருந்து விடை பெற்றேன்.
Share this: