July 22 2022 0Comment

அனைவரும் சாதனை படைக்க

அனைவரும் சாதனை படைக்க

சில காயங்கள் மருந்தால் சரியாகும்
சில காயங்கள் மறந்தால் சரியாகும்
ஆடம்பரம் அழிவை தரும்
ஆரோக்கியம் நல் வாழ்க்கை தரும்
கார் இருந்தால்
ஆடம்பரமாக வாழலாம்
மிதி வண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்
வறுமை வந்தால் வாடக்கூடாது
வசதி வந்தால் ஆடக்கூடாது
வீரன் சாவதே இல்லை
கோழை வாழ்வதே இல்லை
தவறான பாதையில்
வேகமாக செல்வதைவிட
சரியான பாதையில்
மெதுவாக செல்லுங்கள்
மனிதனுக்கு ABCD தெரியும்
ஆனால் Qல போகத் தெரியாது
எறும்புகளுக்கு ABCD தெரியாது ஆனா Q ல போகத் தெரியும்
ஆயிரம் பேரைக்கூட எதிர்த்து நில்
ஒருவரையும் எதிர்பார்த்து நிற்காதே
தேவைக்காக
கடன் வாங்கு
கிடைக்கிறதே
என்பதற்காக கடன் வாங்காதே
உண்மை எப்போதும்
சுருக்கமாக பேசப்படுகிறது
பொய் எப்போதும்
விரிவாக பேசப்படுகிறது
கருப்பு மனிதனின்
இரத்தமும் சிவப்புதான்
சிவப்பு மனிதனின்
நிழலும் கருப்புதான்
வண்ணங்களில்
இல்லை வாழ்க்கை
மனித எண்ணங்களில்
உள்ளது வாழ்க்கை
கடினமாய் உழைத்தவர்கள் முன்னேறவில்லை
கவனமாய் உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்
வியர்வை துளிகள்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவை வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்
கடனாக இருந்தாலும் சரி
அன்பாக இருந்தாலும் சரி
திருப்பி செலுத்தினால்
தான் மதிப்பு
செலவு போக மீதியை சேமிக்காதே
சேமிப்பு போக மீதியை செலவு செய்
உன்னை நீ செதுக்கி கொண்டே இரு வெற்றி பெற்றால் சிலை
தோல்வி அடைந்தால் சிற்பி
உறவினர்களில் யார் முக்கியம் என்பதை உயிரற்ற பணமே முடிவு செய்கிறது
கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும்
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்பது புரியும்.
பணம் கொடுத்துப்பார்
உறவுகள் உன்னை போற்றும்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி தூற்றும்
பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம் பொய்
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே உண்மை
மனைவி கேட்பதை எல்லாம்
வாங்கி கொடுத்து
சமாளிப்பவன் புத்திசாலி
வாங்கி கொடுக்கிறேன்
என்று சொல்லியே
சமாளிப்பவன் திறமைசாலி
கவலைகள் கற்பனையானவை
மீதி தற்காலிகமானவை
குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்
அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் உண்டு
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் இல்லை
விழுதல் என்பது வேதனை
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை
அனைவரும் சாதனை படைக்க என்னுடைய அன்பான

வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

five + 1 =