March 01 2018 0Comment

அதிசய நடராஜர் !

அதிசய நடராஜர் !

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சியளிப்பார். ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சியளிக்கிறார் இறைவன். இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்கப்பட்டு வைக்கப்படுகிறது. ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்புள்ளது.

மனித தோற்றம் :

இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும். நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தௌ;ளத்தௌpவாக காணப்படுவது சிறப்பாகும்.

இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.

மேலும் வரகுண பாண்டியனுக்கு இத்தல இறைவனும், இறைவியும் பஞ்ச லோகத்தால் ஆன குழம்பைக் குடித்து, நடராஜர், சிவகாமி அம்பாள் தம்பதியராக காட்சி கொடுத்துள்ளனர்.

இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோவில் தல விருட்சமாக உள்ளது.

சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அருள்பாலிக்கிறார்கள்.

இக்கோவில் ராஜராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது.

Share this:

Write a Reply or Comment

seventeen − 16 =