October 26 2022 0Comment

தீபாவளி மாசு

தீபாவளி மாசு

நான் ஹிந்து என்பதில்
பெருமிதம் கொள்கிறேன்

அதே சமயம் என் மதம் வலியுறுத்துகின்றது என்பதற்காக காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை
நாம் தூக்கி சுமக்க கூடாது என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை

8 லட்சம் பேர் சிவகாசியில் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் மீதம் உள்ள 8 கோடி பேரும் சங்கடப்பட வேண்டும் என்று எங்கேயும் எழுதப்படவும் இல்லை
ஆணை பிறப்பிக்கப்படவும் இல்லை

எனவே பட்டாசு விஷயத்தில்
யாரும் அரசியல் பார்க்காமல்
அரசியல் செய்யாமல்
இனிமேலாவது பட்டாசு என்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்கி ஒட்டுமொத்தமாக பட்டாசு
விற்பனையை தடை செய்ய வேண்டும் என விரும்புகின்றேன்

நேற்றைய சென்னை மாசுவினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக இந்த பதிவை பதிவு செய்கின்றேன்

பட்டாசு வெடிப்பதனால் யாருக்கு என்ன நல்லது நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்து தீபாவளி முதல்
மற்றும் அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிப்பதை பூரணமாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கின்றேன்

என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

14 − 2 =