தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் பொள்ளாச்சி பயணம்:-

ஸ்ரீ என்னுடைய ஏற்றமிகு வாழ்விற்கு மிக மிக முக்கிய காரணமானவரும், என் இனிய நண்பருமான திரு.வசந்த், P.R.O – Sun TV அவர்களுக்கு ஜூன் 7 அன்று தூத்துக்குடியில் திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணத்திற்காக ஜூன் 6 அன்று திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி செல்ல இருக்கின்றேன். ஜூன் 7 அன்று திருமணம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்து விட்டு புதிய வாஸ்து வாடிக்கையாளர்களை சந்திக்க பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் செல்ல இருக்கின்றேன். […]

ஆசையும், பேராசையும்…

ஸ்ரீ நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு பஸ்ஸிலோ அல்லது BMW காரிலோ பயணம் மேற்கொண்டாலும் சாலை ஒரே சாலை தான்… நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு விமானத்தில் அந்த  விமானத்தின் முதல் வகுப்பிலோ அல்லது அந்த விமானத்தின் சாதாரண வகுப்பிலோ சென்றாலும் நாம் போக வேண்டிய இடம் ஒரே இடம் தான்…. நாம் நேரத்தை பார்ப்பதற்கு 50 ரூபாய் கைகடிகாரம் கட்டியிருந்தாலும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் கட்டி இருந்தாலும் ஒரே  நேரத்தை தான் 2 கைகடிகாரங்களும் காண்பிக்க போகின்றன. நாம் ஆசைப்பட்டவாறு சுகபோகமாக வாழ்வது தவறில்லை. ஆனால்  ஆசை பேராசையாக மாறாத வரைக்கும் எதுவும் பிரச்சினையில்லை.  காரணம் ஆசைகளை அடைய முடியும் ஆனால் கண்டிப்பாக  பேராசைகளை அடைய முடியாது. நம்மில் பெரும்பாலோனோர் ஆசைக்கும், பேராசைக்கும் அர்த்தம்  தெரியாமலேயே வளர ஆரம்பிப்பதற்கு முன்பே வளர்ந்து முடிந்த  திருப்தியுடன் வாழ்ந்து முடிந்துவிடுகின்றோம். எனக்கு தெரிந்த வரை  படித்த பெரியவர்களுக்குமே இதன் முழு அர்த்தம் புரியாத போது,  30 வயதே நிரம்பிய ஒரு பெண் எனக்கு நான்கு வருடங்களுக்கு  முன் அதன் முழு  அர்த்தத்தை புரிய வைத்தாள். இன்னும் சில தினங்களில் வாஸ்து பயிற்சி வகுப்பு  I – க்கு  வருபவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை சந்திக்க இருக்கின்றேன்.  நாங்கள் அந்த பெண்ணை  சந்தித்தபின் கடிதத்தில் சொல்லப்படாத முழு விவரத்தையும் நல்லதொரு தருணத்தில் உங்கள் அனைவருக்கும்  தெரிவிப்பேன்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!   வாழ்க வளமுடன் […]

இராஜபதியும், இயற்கையின் சதியும்: –

ஸ்ரீ வேடிக்கையான கதை ஒன்றை நான் Business School – ல் படிக்கும் போது விரிவுரையாளர் சொல்ல கேட்டிருக்கின்றேன். அந்த கதை….. ஒருவன் கையில் ரூ.100/- மட்டுமே இருந்தது. அவனுக்கோ 5 Star ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஆசை. 5 Star ஹோட்டலில் ஒரு வேளை சாப்பாட்டின் விலை ரூ.1700/- என கேட்டு விசாரித்து கொண்டான். பணம் இல்லாவிட்டாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு மூச்சு முட்டும் அளவிற்கு சாப்பிட்டு தீர்த்தான். சாப்பிட்டதற்கு கொடுக்க பணம் தன்னிடம் […]

வாஸ்து – எனக்கு கொடுத்த அற்புத வரங்கள் – 1

ஸ்ரீ சபரி தன்னை தாயாக்கி கடவுளை குழந்தையாக பார்த்தாள்… மீரா தன்னை காதலியாக்கி கடவுளை காதலனாக பார்த்தாள்… ஆண்டாள் மட்டும் தான் தன்னை மனைவியாக்கி கடவுளை கணவனாக பார்த்தாள்… அந்த வகையில் அரங்கனையே தனதாக்கி கொண்ட ஆண்டாளுடைய அன்பின் அளவு அளவிடமுடியாதது. இதனால் தான் என்னவோ ஒவ்வொரு முறை ஆண்டாள் தாயாரை பார்க்கும் போதும் பார்க்கும் அந்த நொடியே இறப்பை தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனம் முழுவதும் வியாபிக்கும். ஆண்டாளை தரிசனம் செய்யும் அந்நேரத்தில் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 4

ஸ்ரீ சென்னை மாநகரில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு என்று அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் நிறுவனங்களில் முதன்மையான நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு இருக்க கூடிய 1000 மிகப்பெரிய பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவர். சமீபத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் அவருடைய 5 கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க சென்றிருந்தேன். அதில் ஒரு மனையில் உள்ள வீடுகள் எல்லாம் 5000 சதுர அடி விஸ்தீரணம் கொண்டது. ஒவ்வொரு வீடும் பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் அற்புதமாக வடிமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தை பார்வையிட்டுக் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 3

ஸ்ரீ எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய வாஸ்து அனுபவத்தில் கீழ்கண்ட Dialogue – ஐ ஏறத்தாழ நான் வாஸ்து பார்த்த மக்களில் 40% பேர் சொல்லி கேட்டிருக்கின்றேன். “உங்களுக்கு பூர்வீகம் ஆகாது. தயவுசெய்து வேறு இடத்திற்கு போய் விடுங்கள் என எங்கள் ஜோதிடர் சொல்லி இருக்கின்றார். அதனால் தான் வீடு மாறி இந்த வீட்டில் இருக்கின்றோம்”. ஜோதிடர் பூர்வீகம் ஆகாது என்று சொன்னவர்களின் பூர்வீக வீட்டை ஆராய்ந்து பார்த்ததில் அந்த வீடு பெரிய வாஸ்து தவறுகளுடன் தான் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 3 | Vastu Practitioner Training – Letter 3

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு ஆரம்ப நாள்: – 02-05-2015 (Saturday) வாஸ்து பயிற்சி வகுப்பு துவங்கும் இடம்: – சென்னை வாஸ்து பயிற்சிக்காக 2 – ம் நாள் தங்கும் இடம் (03-05-2015): – காஞ்சிபுரம் வாஸ்து பயிற்சிக்காக 3 – ம் நாள் தங்கும் இடம் (04-05-2015): – தஞ்சாவூர் வாஸ்து பயிற்சிக்காக 4 – ம் நாள் தங்கும் இடம் (05-05-2015): – மதுரை வாஸ்து பயிற்சிக்காக 5 – ம் நாள் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 2 | Vastu Practitioner Training – Letter 2

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி தொடங்குகின்றேன் என்று சொல்லி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே நிறைய அழைப்புகள்; நிறைய கருத்து பரிமாற்றங்கள்; உங்கள் அனைவரின் அன்பான அழைப்புகளுக்கு நன்றி. ஆனந்தத்துடன் அழைத்தவர்கள் பேசியதை சொல்ல சொல்லி கேட்டேன். சொன்னதை, கேட்டதை வைத்து பார்த்ததில் இந்நிகழ்ச்சி பற்றி நான் சற்று உட்புகுந்து பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். I.     Vastu Practitioner Training – பயிற்சி வகுப்பிற்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். II.     எனக்கு Numerology, ஜோதிடம், Pronology, […]

மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி பயணம்:-

ஸ்ரீ ஏப்ரல் 02, 03, 04 அன்று முறையே சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலி செல்ல இருப்பதால் என்னிடம் சென்னையில் ஏதும் உதவி தேவைப்படும் பட்சத்தில் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை சார்ந்த பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் […]

ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிற்கு சுற்று சுவர் அமைக்கலாமா?

ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிற்கு சுற்று சுவர் கண்டிப்பாக அமைக்க கூடாது. ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்படும் கிணற்றிற்கு சுற்று சுவர் அமைக்க கூடாது என்கின்ற பட்சத்தில் பாதுகாப்பிற்காக இரும்பு கம்பி கொண்டு கிணற்றை மூடி கொள்ளலாம்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by