“DISCOVER THE JOY OF GIVING”

ஸ்ரீ

Vastu - Mannur Village - Sitheri Malai

“DISCOVER THE JOY OF GIVING” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்சொடர் உண்டு. இதற்கு நேரடி தமிழ் அர்த்தமாக

“கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை கண்டுபிடி”

என சொல்லலாம்.

எனக்கு தெரிந்து என் வாழ்க்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான சந்தோஷங்கள் பிறருக்கு கொடுத்ததினால் எனக்கு கிடைத்திருந்தாலும் அவை அனைத்தும் சமீபத்தில் ஆத்தூரில் இருந்து புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் கடந்து 30 km தொலைவில் உள்ள மண்ணூர் மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு அரசியல், விளம்பர கலப்பிடமில்லாமல் ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் செய்த சிறிய உதவியினால் கிடைத்த சந்தோஷத்திற்கு ஈடாகாது.

மிகவும் கஷ்டப்பட்டு செல்ல வேண்டிய இடம் சித்தேரி மலையில் உள்ள மண்ணூர் கிராமம். சாலை வசதி கிடையாது. கரடு, முரடான கற்களின் நடுவே இரண்டு சக்கர வாகனத்தில் முதுகு எலும்பு பாதிக்கும் அளவிற்கு 10 km பயணம் அந்த குழந்தைகளை சந்தித்து விட்டு திரும்பும் போது. இன்று வரை அந்தப் பிரயாணத்தின் வலி இருக்கின்றது. இருந்தாலும் அந்தக் கஷ்டத்தையும் மீறி ஒரு சந்தோஷம் ஒரு பெண்ணின் பிரசவ வலி போல இன்றும் மனதில் இருப்பதற்கு காரணம் வெளி உலகமே தெரியாத அந்த குழந்தைகளுக்கு சிறிய அளவில் உதவும் வகையில் நம்முடைய இப்பிறப்பு உதவியதே என்கின்ற எண்ணம் தான்.

ஒவ்வொரு தேர்தலிலும், 40% மட்டுமே வாக்களிக்கும் மாற்றத்தை எதிர்பார்க்காத சென்னை மக்களுக்கு Metro Rail.

ஒவ்வொரு தேர்தலிலும் 100% மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களிக்கும் மண்ணூர் மலை வாழ் மக்களுக்கு நடக்க நடைபாதை கூட கிடையாது.

இது தான் ஜனநாயகம் போல.

பாமரர்களுக்காகவும், சாமானியனுக்காகவும், பாட்டளிகளுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தான் நாங்கள் இருகின்றோம் என வெட்டி பேச்சு பேசும் அரசியல் கூத்தாடிகள் இருக்கும் வரை நம் நாடு இப்படியே தான் இருக்கும்.

இவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து என்னுடன் வந்த திரு.நாகராஜ், சேலம் அவர்கள் தன்னுடைய JCB Excavator Machine – ஐ மண்சாலை அமைக்க வாடகை இல்லாமல் கொடுத்து உதவுவதாக சொன்ன போது நெகிழ்ந்து போனேன். ஒரு சாமானிய நாகராஜின் மனதில் உள்ள ஈரம் இதுவரை இந்த மக்கள் வாக்கை பெற்று வெற்றி பெற்ற ஒரு MLA – வுக்கும், ஒரு M.P – க்கும் இல்லை என்பது தான் துயரத்தின் உச்சக்கட்டம்.

தயவுசெய்து இந்த கடிதத்தை படிப்பவர்கள் நாட்டை திருத்த முற்படாமல் நாமே நேரடியாக நம்மால் இயன்றதை தனி தனி குழுவாக நேரடியாக நாட்டின் அடி நாடியான கிராமங்களுக்கு கொடுக்க உறுதி ஏற்போம். கிராமங்களை வாழவைப்போம்.

ஜெய்ஹிந்த்.

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

9 − 1 =