கடம்பவனேசுவரர் கோயில்:

கடம்பவனேசுவரர் கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.  தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை.  சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, […]

எறும்பீஸ்வரர் கோயில்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்: திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும். […]

தோரணைமலை முருகன்:

குகைக்கோயில் அழகன் ! தோரணைமலை முருகன்: வெண்மேகங்கள் தழுவ விண்ணைத் தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந்திருக் கிறது, தோரண மலை.  யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில், மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக்கிறார்.  அவருடைய சீடரான தேரையர் மகா சமாதி அடைந்ததும் இங்குதான். இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ […]

விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்: 

விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்:  சுவாமி :  விருத்தகிரீஸ்வரர் (அ)#பழமலைநாதர், முதுகுந்தர். #அம்பாள் :  விருத்தாம்பிகை (அ) #பாலாம்பிகை, இளைய நாயகி. #தீர்த்தம் :  மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். தலவிருட்சம் : வன்னி மரம். தலச்சிறப்பு :  உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக கருதப்படுகிறது.  மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல #வரலாறு :  ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார்.  […]

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்:

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்: தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு வந்து வழிபடுகின்றனர்.  உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு #தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும் #சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம். மூலவர் : வைத்தியநாதர். தாயார் : தையல்நாயகி. தல விருட்சம் : வேம்பு. தீர்த்தம் : சித்தாமிர்தம். ஆகமம் : காமிக ஆகமம். ஊர் : வைத்தீஸ்வரன் […]

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்:

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்: சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிதந்து அருளாசி வழங்கும் ஆலயங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூர்த்தி மகிமையாலும்,தலம், தீர்த்தம் சிறப்பாலும் மேன்மையுற்று விளங்குகின்றன. மூலவர் : ஸ்ரீநந்தீஸ்வரர். அம்மன் : ஸ்ரீஆவுடைநாயகி. தல விருட்சம் : நாகலிங்கம். பழமை : 2 ஆயிரம் ஆண்டுகள். ஊர் : ஆலந்தூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல வரலாறு : பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி உருவத்தில் காட்சித் தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்குள்ள மலையில் […]

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்: கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது.  இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும்.  வரலாறு : இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.  பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய […]

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்: 

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்:  இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நொய்யல் நதியில் இருந்து தான் 1945 முதல் 1970 வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இந்த ஆற்றின்  பெயர் மென்மையான நுண்ணிய  மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது.  […]

திண்டல் முருகன் கோவில்:

  ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல்மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. திண்டல் முருகன் கோவில் என்பது அருள்மிகு #வேலாயுதசாமி திருக்கோவிலாகும். இவர் குழந்தை வேலாயுத சுவாமி குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.  தல சிறப்பு : நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும் ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம் […]

வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோவில் :

    வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோவில் :   தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது.   இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.   தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.   தென்கயிலாயம் எனக்கூறப்படும் இத்தலத்து இறைவனிடம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by