ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர்:

    ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர்: ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில் – குகையினுள் அதிசய பெட்டகம்! சுற்றிலும் மலை அரணாக விளங்க பச்சைபசேலென அமைதியான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரரை, தரையிலிருந்து சுமார் பதினைந்து அடி இறங்கிச் சென்றால் தரிசனம் செய்யலாம். ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் சிவன் கோவில் ஆஸ்திரேலியாவில் ரம்மியமாக அமைந்துள்ளது. இந்த சிவன் கோவில் சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் மின்டோ என்னும் இடத்தில் உள்ளது. பூமிக்கு அடியில் 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் அமைக்கப்பட்ட கோவில் இது. 1997ல் இக்கோவில் கட்டும் பணி ஆரம்பித்து 1999ல் […]

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்

  இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்: இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தல வரலாறு : இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் […]

சமயபுரம் மாரியம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வரலாறு : சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்தகோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. இங்கு தான் அம்மன் கோவில் உருவாகியதாக நம்பப்படுகிறது. அம்மனின் வரலாறு : வைணவி […]

பழனி முருகன் கோவில்:

பழனி முருகன் கோவில்: பழனி முருகன் கோவில் முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும்.  பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம் சிவனும் பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை ‘ஞானப் பழம் நீ” என அழைத்ததால் ‘பழம் நீ” என வழங்கப்பெற்று பின்னர் அதுவே ‘பழனி” ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. கோவில் வரலாறு : முருகனின் அறுபடை வீடுகளில் […]

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்: தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான்.  புனிதப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். கோவில் வரலாறு […]

மங்களநாதர் திருக்கோவில்

அருள்மிகு #மங்களநாதர் திருக்கோவில்: ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் ஒன்று உள்ளது என்றால் அது அருள்மிகு #மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோவில் மட்டுமே. சுவாமி : மங்களநாதர் அம்பாள் : மங்களேஸ்வரி தலவிருட்சம் : இலந்தை மரம் ஊர் : உத்தரகோசமங்கை மாவட்டம் : ராமநாதபுரம் தல #வரலாறு : #மண்டோதரி (இராவணனின் மனைவி) என்ற பெண் முன்னொரு காலத்தில் உலகில் தலைசிறந்த சிவனின் பக்தரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஈசனை தியானித்தாள். சிவபெருமான் […]

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்

அருள்மிகு #மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்: தமிழ்நாட்டிலே மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அனைவராலும் போற்றபடும் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அருள்பாலிக்கிறார். தல குறிப்பு : திருக்கோவில் பெயர் : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் காலம் : சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் பெயர் : தாண்டேஸ்வரர் இறைவியின் பெயர் : தாண்டேஸ்வரி (என்னும்) அங்காளம்மன் தலவிருட்சகம் : வில்வம்இ வாகை தீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல வரலாறு : வல்லாள […]

சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்

சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்: நம்முடைய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்கென தனிச்சிறப்பும் பாரம்பரியமும் உண்டு. அந்த வகையில் #ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட மற்றொரு சிவாலயம் திருச்சி அருகே இருக்கிறது. அக்கோவிலின் வரலாறு நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. #ஊற்றத்தூா் என்ற ஊர் தற்போது மருவி #ஊட்டத்தூா் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒருமுறை மன்னர் வருவதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் உள்ள முட்புதர்கள், புல் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. மண் வெட்டியால் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வந்த […]

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஸ்தல சிறப்புகள்! இன்று தியாகேசரை பார்க்கும்  பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. சிவலாயங்களில் முதல்முறை தரிசனம் காணும் போது திருவண்ணமலை, திருவனைக்காவல்,சிதம்பரம், வெள்ளியங்கிரி, தஞ்சை பெருவூடையார், கங்கைகொண்டசோழபுரம், பேரூர், சமயபுரம் போஜீஸ்வரர், சமயபுரம் முக்திஸ்வரர், நங்கவரம் சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபடும் போது ஏற்பட்ட  இனம் புரியாத உணர்வு, மனதிருப்தி  தியாகேசரை காணும்போது ஏற்பட்டது, என் தந்தையின் தாய்  பிறந்த ஊர் இது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க முழுமையாக ஒருநாள் ஆகும் […]

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…! ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர். கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு […]