January 17 2018 0Comment

பல ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில்:

நவபாஷாண நவக்கிரக கோவில் ⭐ புராண காலம் தொட்டே கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்களும் அமைந்த அற்புத காட்சி அமைந்துள்ள அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோவில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ளது. ⭐ ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷாணமிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று. மேலும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. தெய்வங்கள் : நவகிரகங்கள் பிரதிஷ்டை […]

January 17 2018 0Comment

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!!

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!! நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்களும் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவில்….!  மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில்தான் ‘ஹரிஷ்சந்திரகட் கோவில்”. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.  இது 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலுக்கு அருகில் தான் […]

January 13 2018 0Comment

28.திருதலைச்சங்க நாண்மதியம்:

தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும். இங்கு பெருமான் சங்காரண்யேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.இத்திருத்தலம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்று. கோயில் தகவல்கள்: மூலவர்: நாண்மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்). உற்சவர்: வெண்சுடர்ப் பெருமாள் தாயார்: தலைச்சங்க நாச்சியார் உற்சவர் தாயார்: செங்கமலவல்லி தீர்த்தம்: சந்திர புஷ்கரணி பிரத்யட்சம்: சந்திரன், தேவப்பிருந்தங்கள் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் செய்தவர்கள்: திருமங்கையாழ்வார் விமானம்: சந்திர விமானம் கல்வெட்டுகள்: உண்டு […]

மருதுபாண்டிய சகோதரர்கள் – தன் உயிரை விட மேலானது எங்கள் மதம், இனம், சின்னம் அடையாளம்

தன்னுடைய மதம், இனம், சின்னம் மற்றும் அடையாளம் இவைகள் யாவும் தன் உயிரை விட மேலானது என்று கருதிய மருதுபாண்டிய சகோதரர்கள் பிறந்த மண்ணிலே…. திரு.வைரமுத்து அவர்களே நீங்கள் எப்படி ஒரு மதத்தின் உச்சகட்ட தெய்வத்தை அசிங்கப்படுத்தலாம்??? இது சரியா??? தகுமா???

பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து

பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து: – எங்கள் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் நாங்கள் ராணி ஆக நடத்துவோம்; ராணியாக தான் பார்ப்போம் என்று சொன்ன விவேகானந்தர் அவர்கள் பிறந்து வாழ்ந்த இப்பூமியிலே இருந்துகொண்டு திரு.வைரமுத்து அவர்களே பெண்களின் குல தெய்வமான, பெண்களின் உச்சபட்ச இனத்தலைவி ஆன ஆண்டாளை உங்களால் எவ்வாறு இவ்வளவு அசிங்கமாக பேச முடிந்ததது???…

January 12 2018 0Comment

27: திருஇந்தளூர்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 27வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். கோயில் தகவல்கள்: பெயர்(கள்):திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் மூலவர்:பரிமளரங்கநாதர் தாயார்:பரிமள ரங்கநாயகி தீர்த்தம்:இந்து புஷ்கரிணிபிரத்யட்சம்:சந்திரன்மங்களா சாசனம்பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார் விமானம்:வேத சக்ரம் கல்வெட்டுகள்:உண்டு

January 11 2018 0Comment

26. திருமணிமாடக் கோயில்

திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர். பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும். கோயில் தகவல்கள்: வேறு பெயர்(கள்): நாராயணன் பெருமாள் கோயில் பெயர்: மணிமாடக் கோயில் அமைவு: திருநாங்கூர் விமானம்:பிரணவ விமானம் கட்டடக்கலை […]

January 10 2018 0Comment

திருவாழி-திருநகரி கோயில்

திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali – Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும். இவ்விரட்டைக் கோயில்கள் 108 திவ்ய தேசங்களில் உள்ளது. இக்கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இரட்டைத் தலங்கள்: திருவாழி அழகியசிங்கர் கோயில்மற்றும் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் திருவாழி – திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருவாழி: […]

January 10 2018 0Comment

24.திருநந்திபுரவிண்ணகரம்:

நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். காளமேகப் புலவர் பிறந்த ஊர். புராண பெயர்(கள்): நாதன் கோயில், திருநந்திபுரவிண்ணகரம் பெயர்: நாதன் கோயில் (திருநந்திபுரவிண்ணகரம்) கோயில் தகவல்கள்: மூலவர்: நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், ஜகந்நாதன் உற்சவர்: […]

January 08 2018 0Comment

ஹரிஹரபுரம் – துங்கா நதி தீரத்தில் அமைந்திருக்கும் புனிதத் தலம்;

தட்ச பிரஜாபதி யாகம் செய்த யாக பூமி; அகத்தியர் தவமியற்றிய தவபூமி; ஆதிசங்கரர் சனாதன தர்மத்தைச் செழிக்கச் செய்த ஞானபூமி. இந்த ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆதிசங்கராசார்ய சாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடத்தை ஏற்படுத்தி, ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச கிருஷ்ண யோகேந்திர மஹா ஸ்வாமிக்கு மந்திர தீட்சை கொடுத்து, பீடாதிபதியாக நியமித்தார். அத்துடன், அகத்தியர் பூஜித்த ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம சாளக்கிராம வழிபாட்டுக்கும் நியமங்களை வகுத்துத் தந்தார். இந்த பீடத்தின் இன்றைய #பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள். இந்தக் கோயிலை மிக பிரமாண்டமாக நிர்மாணித்து, ஸ்ரீ […]