ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை:-

ஸ்ரீ

Vastu - Andal_Temple-Gopuram

கோவில் கருவறை என்பது தாயின் கருவறை போல புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதங்கள் இருக்க போவதில்லை. ஆகம விதிகள் படி கோவில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் கருவறைக்குள் போகக்கூடாது என்பது நியதி என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…. அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து….

அந்த நிகழ்வு:

சமீபத்தில் நான் மற்றும் என் நெருங்கிய நண்பரான

திரு.லக்ஷ்மி நாராயணன் (திரு.தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் உதவியாளர்) மற்றும் அவருடைய நண்பர்களான

திரு.K.மாணிக்கம் (மதுரை அ.இ.அ.தி.மு.க புறநகர் மாணவரணி செயலாளர்)

திரு.கார்த்திகேயன் (கடலூர் நகராட்சி தலைவர் அவர்களின் புதல்வர்)

ஆகிய அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சென்று இருந்தோம். நாங்கள் கருவறைக்குள் இருக்கும் சாமியை பார்த்து நின்று கொண்டிருந்த போது, சடாரென்று திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் மைத்துனர் திரு.இராகவேந்திரா (தமிழ்பட இசை அமைப்பாளர் அனிருத்தின் தந்தை) அவர்களை அழைத்து வந்து எங்கள் பக்கம் நிற்க வைத்த கோவில் அர்ச்சகர், திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை திரு.இராகவேந்திரா அவர்களை மட்டும் அந்த அர்ச்சகர் கை பிடித்து மூலஸ்தானத்திற்கு உள் அழைத்து சென்று ஆண்டாள் / ரங்கமன்னார் / கருடாழ்வார் அருகே நிற்க வைத்து, அவருக்கு விஷேச பூஜை, மரியாதை செய்து பின் மறுபடியும் எங்கள் பக்கத்தில் நிற்க வைத்தார்.

இதில் என்ன வருத்தத்திற்குரிய விஷயம் என்றால் பூஜை முடித்து வெளியே வந்த அவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமான கைங்கர்யத்திற்கு உதவுங்கள் என்று அவரை கோவிலுக்குள் அழைத்து வந்த திருமதி.ஜோதி (கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தரின் மனைவி) கேட்ட போது, முகத்தை கஞ்சி போட்டு சலவை செய்த சட்டை போல் விரைப்பாக வைத்துக் கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் கார் ஏறி சென்று விட்டார். ஆண்டாளுக்கு சரி கொடுக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லாத இவருக்கு எதுக்கு சட்டத்தை வளைத்து, ஆளும் ஆட்சியாளர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ஆகம விதிகளை உடைத்து முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.

உணவு மறந்து, தூக்கம் மறந்து கோவிலுக்கு உழைக்ககூடிய கோவிலின் தக்கார் திரு.இரவிச்சந்திரன் வெளியே நிற்க, அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் ஆட்கள் வெளியே கால் கடுக்க நிற்க, ஆண்டாள் கோவிலில் தங்க விமான திருப்பணிக்காக தங்கம் கொடுத்தவர்கள் எல்லாம் கோவில் மூலஸ்தானத்திற்கு வெளியே கால் கடுக்க நிற்க, கோவிலின் கர்ப்ப கிரகத்திற்குள் போக அருகதை இல்லாத, போக கூடாத திரு.இராகவேந்தர் – தான் தப்பு செய்கின்றோம் என்பது தெரிந்தும் அந்த தப்பை சந்தோஷத்துடன் செய்ததை பார்த்த நான் உடனே தந்தை பெரியாரை நினைத்து கொண்டேன்.

காரணம் அந்த நொடி வரை தந்தை பெரியாரை அவரை அவரின் இந்து மத துவஷேத்திற்காக வெறுத்து வந்த  நான், திரு.இராகவேந்தர் போன்று அக்கிரமம் செய்பவர்களை தடுக்கவும், ஆட்சியாளர்களுக்கு கேடு ஏற்பட்டால் கூட பரவாயில்லை தனக்கு பணம் மட்டும் தான் முக்கியம் என நினைக்கும் அர்ச்சகர்களை தண்டிக்கவும், குறைந்தபட்சம் கடவுள் சன்னதியிலாவது ஜாதி பேதம் கிடையாது என்பதை நிலைநாட்டவும் தந்தை பெரியார் மற்றொரு முறை பிறப்பெடுக்க கூடாதா என்று மனம் வெதும்பி எண்ணியவாறு வீடு வந்து சேர்ந்தேன்.

ஆண்டாள் உண்மை என்றால் இதற்கு உடனேயும், விரைவிலும் வழி பிறக்கும்…..

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

4 comments

  1. மனம் வருந்துகிறது. நீங்கள் முன்பு சொன்னது போல் காரணம் இல்லாமல் காரியமில்லை. அதற்கான பலன் அவருக்கு மற்றும் அதற்கு காரணமானவருக்கும் கிடைக்கும்.

    Reply
  2. A Battar(priest) is the one who has won the “mukkurumbu” known as (3 kharvams ) Jaathi madha kharvam, Vidhya Kharvam & Ishvarya kharvam.. A Bhramanan should be far away from these 3 negative factors.. which is the basic principle of “Upanayanam”.. (wearing 3 threaded string ). Hence i think , the priest’s partial act is not judicial. By indulging in such an act that priest has become unfit to be a Bhramin. May be by birth he could be known as a bhramin . But his act is a “bhramana dhuvesham” In front of God, “All are Equal”. The priest has done a big “Bhagavadha abatchaaram” I condemn this act of the priest.

    Reply
  3. you are also doing mistake sir, the person who entered inthe restricted place is if he willing to give donation for the temple then it is alright. this thought is wrong. you should not think like that. the rule is rule It should not bend

    Reply
  4. B.Srinivasan sir:
    Though i have not written with this thought your comment is right.I cent percent agree with your argument.

    Reply

Write a Reply or Comment

twenty − one =