January 11 2018 0Comment

26. திருமணிமாடக் கோயில்

திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர்.
பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.
கோயில் தகவல்கள்:
வேறு பெயர்(கள்): நாராயணன் பெருமாள் கோயில்
பெயர்: மணிமாடக் கோயில்
அமைவு: திருநாங்கூர்
விமானம்:பிரணவ விமானம்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிட கட்டிடக்கலை
திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது.
இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார். இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள நாராயணன், அளத்தற்கரியான்;
இறைவி புண்டரீகவல்லித் தாயார்
தீர்த்தம் இந்திர புஷ்கரணி மற்றும் ருத்ர புஷ்கரணி
Share this:

Write a Reply or Comment

eight + 4 =