வாஸ்து வகுப்பு – என் பார்வையில்

ஸ்ரீ

DSC_0092

வாஸ்து பயிற்சி வகுப்பு II (VPT II) – 23-07-2015 அன்று நிறைவு பெற்றது.     

சென்ற முறையை விட இந்த முறை 2 நாட்கள் அதிகம் எடுத்து கொண்டு 9 நாட்களில் பயிற்சியை நிறைவு செய்தோம்.

சென்னையில் 5 நாட்கள், திருச்சியில் 1 நாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 நாள், கோவையில் 2 நாள் என நன்கு திட்டமிடப்பட்டு பிரயாணத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

வாஸ்து பயிற்சி வகுப்பு II – க்கு அருமையான மனிதர்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்து இருந்தார்கள்.

நிறைய புதிய களங்கள் புதிய வழிகாட்டியாக இருந்தது அனைவருக்கும்.

வாஸ்து பயிற்சிக்கு நடுவே ஆண்டாளைப் பற்றி பேச ஆண்டாளை வளர்த்த பெரியாழ்வாரின் வம்சாவழியினரான வேதபிரான் பட்டர் சுதர்சன் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஆண்டாளைப் போல நீங்களும் சாதிக்க சரணாகதி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும் என்று பேச எனக்கு என்றும் ஆண்டாளாகத் தெரியும் திருமதி.கவிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் கோயம்புத்தூரில் இருந்தும் சென்னைக்கு வருகை புரிந்து பயிற்சி வகுப்பை சிறப்பித்து கொடுத்து இருந்தார்கள்.

வந்தவர்களுடன், வர வழைத்தவனான எனக்கும் நிறைய புரிந்தது இவர்கள் பேச்சின் மூலம்.

சிந்திக்க தெரியாத என்னை சிந்திக்க வைத்தவளான ஆண்டாளைப் பற்றி யார் பேசினாலும் கேட்க உடல் முழுவதும் பதிவு செய்ய வசதி வேண்டும் என நான் நினைப்பேன். காரணம் கேட்ட ஒரு விஷயத்தை கிரகித்து சிந்தித்து பதிய வைப்பதற்குள் அடுத்த விஷயத்தை கேட்க மறந்து போவது இயற்கையாகையால் தான் இந்த யோசனை.

நேரம் குறித்த விழிப்புணர்வு சற்று இல்லாத வகுப்பாக வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II) இருந்ததால் சில அதிக விஷயங்களை உணர / பார்க்க முடியாத சூழ்நிலை என்கின்ற பெரிய குறையை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக சென்றது வகுப்பு.

“பணத்தை ஈர்ப்பது எப்படி” என்கின்ற கடைசி நாள் நிகழ்ச்சியில் வாஸ்து பயிற்சி வகுப்பு I -ல்  பங்கு பெற்றவர்களுடன் சேர்த்து  5 மடங்கு அதிகமாகி அரங்கு நிறைந்த ஆரவாரத்துடன் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையும் மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவாக்கி விட்ட சந்தோஷம் நிகழ்ச்சியின் முடிவில் எனக்கு இருந்தது.

வாஸ்து பயிற்சி வகுப்பு II -ஐ பொறுத்தவரை

  • செய்யாறு குப்புசாமியும், தஞ்சாவூர் ஆண்டாள் ராஜாவும் சற்று படிக்க மறந்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்கள்.
  • திருப்பத்தூர் சிவகுமாரும், திருநெல்வேலி நாசரும் என்னை சிந்திக்க வைத்தார்கள்.
  • சென்னை சுப்பிரமணியமும், கோயம்புத்தூர் மஞ்சுளாவும், மதுரை நாகஜோதியும் வாஸ்து உலகத்தில் சாதிப்பார்கள் என எண்ண விதையை என்னுள் விதைத்தார்கள்.
  • சென்னை சூர்யகலாவும், வேலூர் சரளாவும் கொஞ்சம் அழுத்தத்திற்கு பிறகு நன்றாக புரிந்து கொண்டு என்னை சற்று ஆச்சரியபட வைத்தார்கள்.
  • சென்னை பிரபுவும், பெரம்பலூர் சண்முகமும் கடைசி பந்தில் 6 ரன் அடித்து அணியை வெற்றிக் கோட்டிற்கு கொண்டு சென்றது போல், வாஸ்து வகுப்பில்  சாதாரணமானவர்களாக இருந்து அசாதரணமானவார்களாக மாறி எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார்கள்.
  • மதுரை குமாரலிங்கமும், கோயம்புத்தூர் ஆனந்த்குமார் அவர்களும் கொஞ்சம் சிரமப்பட்டாலும் சற்று மெனக்கிட்டு முன்னேற்றத்தை காண்பித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

இன்னும் 2 மாதங்களில் இவர்களுடன் மேலும் சில கலந்துரையாடல்கள் நடத்திய பின் இவர்களைப் பற்றிய மேலும் சுவையான தகவல்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்துவேன்.

வாஸ்து பயிற்சி வகுப்பு – II (VPT – II) – ற்கு வந்தவர்களால் நானும் சிறிது கற்று கொண்டேன். வாஸ்து பயிற்சி வகுப்பை பொறுத்தவரை நான் கற்று கொண்ட விஷயங்கள் எனக்குள் நிறைய இடங்களில் பெரிய அளவில் தெளிவை ஏற்படுத்தி உள்ளது. அவை கீழ்கண்டவாறு:-

  1. இனிமேல் வாஸ்து பயிற்சி வகுப்பு (Vastu Practitioner Training) – க்கிற்கு வருபவர்களுக்கு முதல் விதி: –  என்னுடன் இருக்கும் 8 – 9 நாட்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். தேவைப்பட்டால் 20 மணி நேரமாக கூட இருக்கலாம்.
  2. Punctuality இன்றியமையாதது என்கின்ற உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும்.
  3. அடுத்த வகுப்பு 3 வாரமாக இடைவெளியுடன் நடைபெறும்.
    1. வெள்ளிக்கிழமை / சனிக்கிழமை / ஞாயிறுக்கிழமை / திங்கள்கிழமை என சென்னையில் 4 நாட்களும்
    2. வெள்ளிக்கிழமை / சனிக்கிழமை / ஞாயிறுக்கிழமை  – என மதுரையில் 2 நாட்களும்
    3. சனிக்கிழமை / ஞாயிறுக்கிழமை – என கோயம்புத்தூரில் 2 நாட்களும் நடைபெறும்.
  4. கணவன் / மனைவியாக வருபவர்கள் தூங்கும் நேரத்தை தவிர மொத்த பயிற்சி கால கட்டமான 9 நாட்களில் பயற்சி நடைபெறும் இடங்களில் சேர்ந்து இருக்க கூடாது.
  5. வகுப்பில் கலந்து கொள்பவர்களில் நிறைய பேர் மிகுந்த சிரமத்திற்கு நடுவே பணத்தை சேகரித்து என்னிடம் கொடுத்து வாஸ்து கற்று கொள்ள என்னிடம் வருகின்றார்கள். அப்படி வருபவர்கள் அவர்கள் இலக்கை அடைய கட்டாயம் வகுப்பில் பயிற்சி பெற வரும் மற்றவர்களின் ஒத்துழைப்பும் தேவை. எனவே பயிற்சி வகுப்பை மிகவும் Serious ஆக எடுத்து கொள்ளக் கூடியவர்கள் மட்டும் வாஸ்து பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கவும்.
  6. சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி இருப்பவர்கள் மட்டுமே வாஸ்து பயிற்சி வகுப்புக்கு சரியான தேர்வாக இருப்பார்கள் என்பதால் இனிமேல் விண்ணப்பிப்பவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

2 comments

  1. Sir, Good to see your comments about VPT’s 360 degree appraisal.It increases the curiosity to participate/learn Vastu under your guidance. Regarding this I sent a letter to you last week during your VPT-II class. Please go thru’ and let me know my fate. – Thanks Andal bless you Regards N karthi

    Reply
  2. சிறந்த முடிவு.

    Reply

Write a Reply or Comment

4 × three =