வாஸ்து பயிற்சி வகுப்பு II (Vastu Practitioner Training – II): –

ஸ்ரீ

VPT II

வாஸ்து பயிற்சி வகுப்பு I (Vastu Practitioner Training I) நடத்தி முடிக்கும் தருவாயில் இனம் புரியாத ஒரு சோகம் என்னை வியாபித்துக் கொண்டது…

  • இருந்து பழகியது ஏழு நாள் தான் என்றாலும் யுகம், யுகமாக ஒன்றாக இருந்தது போல் எண்ணம் பலவண்ணமாக மனதில் நிலைப்பெற்று விட்டது.
  • குப்பையை வானுயுற உயரத்திய காற்று போல் என்னை உயரத்திற்கு கொண்டு போன நிகழ்வாக அனைவரும் எனக்கு அந்த ஏழு நாளில் அமைந்து விட்டார்கள்.
  • ஏதோ ஒரு உந்துதல் எனக்குள் என்னை எழுப்பிக் கொண்டே இருக்கின்றது. என்னை நம்பியவர்களுக்கு எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற உணர்வு நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது. இந்த உந்துதலும், உணர்வும் தான் என்னை உங்களுடையதாக்கியது. உங்களை என்னுடையதாக்கி இருக்கின்றது.

இரயிலில் பயணம் போல் நிறைய பேர் வந்து போய் விட்டார்கள் என் வாழ்க்கையில். இரயில் பயணம் முடிந்து குடும்பத்தினருடன் வீடு திரும்புவது போல மேற் சொன்ன 24 பேரின் நினைவுகளுடன் வீடு திரும்பினேன். திரும்பிய பிறகு திருப்பி பார்த்தேன் – நிகழ்வுகளை… நடந்த நிகழ்வுகளை…

அந்த வகையில் என் எண்ணம் ஈடேறிய சந்தோஷம் அற்புதமான 24 மனிதர்களை வாஸ்து பயிற்சி வகுப்பு – I (Vastu Practitioner Training – I) – ல் சந்தித்த போது கிடைத்தது.

ஆண்டாள் குடும்பம் என்கின்ற குடும்பத்தில் ஒருவர் 24 பேராக மாறிய சுகானுபவத்தை என்னவென்று சொல்லி புரிய வைப்பது… இந்த இனம் புரியாத அனுபவத்தின் வெளியில் ஒளிந்திருக்கும் என்னுடைய திட்டம் பெரிய திட்டம்….

அந்த திட்ட இலக்கை அடைய அனைவருக்கும் தேவைப்படும் வாஸ்துவால் அனைவரையும் முதலில் ஒருங்கிணைத்து பின் அனைவரையும் அனைவருடன் செயலாற்ற வைப்பதே என் திட்டத்தின் ஒரு வரி கதை சுருக்கம்…

அந்த வகையில் வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II) July 15 – ந் தேதி துவங்க உள்ளது.

வாஸ்து பயிற்சி வகுப்பு I  ஏழு நாள் நடைபெற்றது. 

வாஸ்து பயிற்சி வகுப்பு II – எட்டு நாள் நடை பெற உள்ளது.

இந்த பயிற்சியில் வாஸ்து, மனம், பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன்.

8 – ம் நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் கொண்டு  பணத்தை கவர்ந்திழுப்பது பற்றியும், பணத்தை ஈர்த்து கொண்டிருக்கும் பணக்காரர்களின் ரகசியங்கள் பற்றியும் இருக்கும்.

8 – ம் நாள் பயிற்சியின் போது VPT – I முதல் வகுப்பில் பங்கேற்றவர்கள் பங்கேற்கலாம். அப்படி வருபவர்கள் குடும்பத்துடன் வருவது நன்று.

இந்த பயிற்சி நடைபெறும் போது பயிற்சி பெறுவோர் தங்கும் இடங்கள்: –

  1. Le Royal Meridien, Chennai – 2 நாட்கள்
  2. Hyatt Regency, Chennai – 1 நாள்
  3. ITC Fortune, Chennai – 1 நாள்
  4. Sangam, Trichy – 1 நாள்
  5. Taj, Coimbatore – 1 நாள்
  6. Le Royal Meridien, Coimbatore – 1 நாள்

நான் ஏன் கற்று கொடுக்கின்றேன்:-

v  நல்ல வாஸ்து நிபுணர்களை உருவாக்க தருணம் வந்து விட்டதாக கருதுகின்றேன்.

v  மேலும், ஒரு உன்னத நோக்கத்திற்காக எனக்கு பணம் தேவைப்படுகின்றது. அந்த நோக்கதிற்கான பணத்தை திரட்டுவதற்காகவும்;

v  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை உண்டு பண்ணுவதன் மூலம் என்னை என்னுடைய மற்ற தொழில்களில் நன்கு கவனத்தை செலுத்திட வைப்பதற்காகவும்;

v  என்னுடைய பழைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக நான் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்த பயிற்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

இந்த பயிற்சி யாருக்கு தேவை:-

v  வாஸ்து அறிவு பெற்று வாஸ்துவை தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கும், சேவையாக செய்ய நினைப்பவர்களும், பகுதி நேர தொழிலாக செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி பெரிய அளவில் பயன்பெறும்.

v  எனக்கு துணைவர் இல்லை, வேலை இல்லை, உறவுகளின் ஆதரவு இல்லை, பண கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று வாழ்பவர்களுக்கும்,  தைரிய மனம் படைத்தவர்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சி இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர்கள் மற்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: –

திரு.சுப்பிரமணியன் – +91 99622 94600

திரு.அபுதாலிப் – +91 98843 94600

  • 25% முன்பணம் – June 25 – க்குள் கொடுக்கவும்
  • 50% பின் பணம் – June 30 – க்குள் கொடுக்கவும்
  • 25% பின் பணம் – July 5 – க்குள் கொடுக்கவும்
  • முன்பணம் திருப்பி தரப்பட மாட்டது.
  • முழுப்பணமும் செலுத்திய பிறகு நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் மொத்த தொகையில் 50% பிடித்து கொண்டு 50% பணம் மட்டுமே தரப்படும்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × 4 =