March 11 2018 0Comment

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்:
குளத்தில் மண் கலயத்தில் #விபூதி தோன்றுகிறது!
சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும்.
500 -1000 வருடங்கள் மிக பழமை வாய்ந்த இந்த அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் #மடவிளாகம் என்னும் ஊரில் உள்ளது.
பச்சை ஓட்டுடன் #சிவன் எழுந்தருளியதால் இத்தல
இறைவன் ‘பச்சோட்டு ஆவுடையார்”
என அழைக்கப்படுகிறார். ஆனால் கல்வெட்டுக்களில் ‘பச்சோட்டு ஆளுடையார்” என காணப்படுகிறது.
தலத்தின் நாயகி ‘பச்சை நாயகி” ‘பெரியநாயகி” என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள்.
#விபூதி மிதந்து வரும் அதிசயம் :
கோவிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. ‘நிகபுஷ்கரணி” என்ற பெயர் பெற்ற இச்சுனை கங்கையை போன்று பெருமை பெற்றது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள #சுனையில் விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ‘குடம்” அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது ‘சிறிய செம்பு” அளவில் மிதந்து வருகிறது.
இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும் சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
Share this:

Write a Reply or Comment

five × 4 =