August 03 2018 0Comment

நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

நாவலடி கருப்பசாமி திருக்கோவில்
கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.
கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. 
இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
மூலவர் : கருப்பசாமி.
உற்சவர் : நாவலடியான்.
அம்மன் : செல்லாண்டியம்மன்.
தல விருட்சம் : நாவல்.
தீர்த்தம் : காவிரி.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.
ஊர் : மோகனூர்.
மாவட்டம் : நாமக்கல்.
தல வரலாறு :
முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது இரவாகிவிட்டது. எனவே இங்கேயே தங்கினர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை நாவல் மரத்தின் அடியில் வைத்துவிட்டு தூங்கி விட்டனர்.
மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது கல்லை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசாமி தானே கல் வடிவில் இருப்பதாகவும் தன்னை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பும் படியும் கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து கருப்பசாமியாக பாவித்து வணங்கினர். இவர் நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால் நாவலடியான் என்றும் நாவலடி கருப்பசாமி என்றும் பெயர் பெற்றார்.
பிற்காலத்தில் நாவலடியான் என்கின்ற கருப்பண்ண சாமி சுயம்புவாக தோன்றி சுயம்புக்கு தெற்கே உள்ள வேம்புமரத்தை காவல் மரமாக அறிவித்து தரிசித்து வந்தனர். சாமி பட்டுப்போன நாவல் மரத்துக்கு அடியில் இருந்ததால் பட்டமரத்தையன் என்றும் அருகில் இருந்த நாவல்மரத்து நிழலில் இருந்ததால் நாவலடியான் என்றும் பெயர் பெற்றார்.
தல பெருமை :
நாவலடி கருப்பசாமி மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. நாவலடியான் என்கின்ற கருப்பண்ண சாமி சுயம்புவாக தோன்றியுள்ளது இங்கு சிறப்பு.
ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால் சுயம்பு மூர்த்தி சாமி பள்ளத்திற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுயம்புவுக்கு பின்புறம் பட்டுப்போன பழங்கால நாவல் மரம் இன்னமும் உள்ளது. இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது.
இக்கோயிலில் உற்சவர் சன்னதிக்கு எதிரேஇ பிரகாரத்தில் அருகருகில் மூன்று வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அருகில் இரண்டு சிறிய குதிரை வாகனங்கள் இருக்கிறது.
தெரிந்தே தவறு செய்துவிட்டு மன்னிப்பு வேண்டுபவர்கள், இனிமேல் தவறு செய்யமாட்டேன் என சத்தியம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு சத்தியம் செய்ததற்கு சாட்சியாக சாமியின் வாகனங்களான குதிரைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. இந்த வேலை சக்தி வேல் என்றும் சத்திய வேல் என்றும் சொல்கிறார்கள்.
பெருமைகள் : 
2000 வருடம் பழமையான கோயில் இது என்கிறார்கள். 
நாவலடியான் என்கின்ற கருப்பண்ண சுவாமி சுயம்புவாக தோன்றி யுள்ளது இங்கு சிறப்பு.
சுயம்பு மூர்த்தி இங்கு குழிக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுயம்புவுக்கு பின்புறம் பட்டுப்போன பழங்கால நாவல் மரம் இன்னமும் உள்ளது
செங்குட்டுவன் கள வேள்வி செய்த இடம் இத்தலம்
இங்குள்ள செல்லாண்டியம்மன் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் நாள்தோறும் அசைவ பூஜைகள் மட்டுமே செய்யப்படுகின்றன.
முக்கிய திருவிழாக்கள் 
மாரியம்மன் திருவிழா 15 நாள் திருவிழா பங்குனி மாதம் லட்சக்கணக்கான அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுவர். 
காளியம்மன் திருவிழா 8 நாள் சித்திரை மாதம் அன்று ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்
Share this:

Write a Reply or Comment

eighteen − 2 =