March 21 2018 0Comment

சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்

சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்:
நம்முடைய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்கென தனிச்சிறப்பும் பாரம்பரியமும் உண்டு. அந்த வகையில் #ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட மற்றொரு சிவாலயம் திருச்சி அருகே இருக்கிறது. அக்கோவிலின் வரலாறு நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
#ஊற்றத்தூா் என்ற ஊர் தற்போது மருவி #ஊட்டத்தூா் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
அப்படி ஒருமுறை மன்னர் வருவதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் உள்ள முட்புதர்கள், புல் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.
மண் வெட்டியால் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வந்த பகுதியில் திடீரென இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளா்கள் மன்னரிடம் இந்த செய்தியை கொண்டு சோ்த்தனா். மன்னா் உடனடியாக வந்து
அப்பகுதியை பார்வையிட்ட போது
ரத்தம் வழிந்தோடியது நின்று
தழும்புடன் ஒரு சிவலிங்கம்
இருந்ததை கண்டு மன்னர் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.
அப்பகுதியிலேயே உடனடியாக
கோவில் கட்ட தீா்மானித்து
எழுப்பபட்டது தான் இந்த சுத்தரத்தினேஸ்வரா் என்று
வரலாறு கூறுகிறது.
அதன்பிறகு ஒரு காலகட்டத்தில்
ராஜராஜ சோழன் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் இந்த கோவிலில் உள்ள #பிரம்ம தீா்த்ததை உடலில் தெளித்து இறைவனை வழிபாடு செய்து குணம் அடைந்ததோடு, ஆயட்காலம் நீடிக்கப்பெற்றார் என்று கதைகள் கூறுகின்றன.
இன்றும் கூட ராஜராஜ சோழன் வந்து வழிபாடு செய்த இக்கோவில் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள லிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயம் தெரியும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இத்தனை பிரசித்தி பெற்ற இக்கோவில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 35வது கிலோமீட்டரில் பாடாலூா் என்ற இடத்தில் புள்ளம்பாடிக்கு அருகே ஊட்டத்தூா் என்ற கிராமத்தில் இந்த சிவன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் 7 நிலை உள்ள ராஜாகோபுரம் அமைந்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து தீா்த்தங்களும் கொண்டு வந்து பிரம்மா ஊட்டத்தூரில் உள்ள பிரம்ம தீா்த்ததில் சோ்த்துள்ளனா்.
எந்த சிவன் கோவிலிலும் சிவனுக்கு எதிர்புரத்தில் தீா்த்த குளம் இருந்தது இல்லை.
எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு எதிர்புரத்தில் தான் தீா்த்தம் இருக்கும். இந்த கோவிலில் பிரம்ம பாதத்தில் தீா்த்தம் இருக்கிறது.
குடகு மலையே வற்றி போனாலும் இந்த ஊட்டத்தூர் கோவில் தீா்த்தம் வற்றியது கிடையாது. ராஜ ராஜ சோழன் வாழ்ந்த கிபி 7ஆம் நூற்றாண்டில் இருந்து 11ஆம் நுற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டு இன்றும் கம்பீரமாய் நிற்கிறது.
இந்த கோவிலில் சேவை செய்து வரும் சிவாச்சாரியார் நடராஜ் பேசுகையில்…. கடந்த 3 தலைமுறையாக இந்த சிவாலயத்தில் பூஜை செய்து வருகிறோம். சிறப்பு மிக்க நடராஜா் ஆசிய கண்டத்தில் பஞ்ச அந்தகநரி மூலம் என்ற வேர் பல கோடி பாறைகளில் ஒரு பாறையை பிளக்கும் அதற்கு பஞ்சநாதன பாறை என்று பெயா்.
பதவி இழந்தவா்கள் இந்த நடராஜ பெருமபானை சேவித்தால் மீண்டும் இந்திர பதவி கிடைக்கும் என்று
வரலாறு கூறுகிறது.
இந்த நடராஜருக்கு வெற்றிவோ் மாலை அணிந்து வழிபடுதல் விஷேசம் என்று கூறுகிறார்.
வெற்றிவேரை 48 கண்ணியாக கட்டி பூஜை செய்து 48 நாள் இரவு 100மிலி தண்ணீரில் ஊர வைத்துவிட்டு காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பிரம்ம தீா்த்தத்தில் நாம் குடிக்கும் தண்ணீருடன் கலந்து நடராஜரை தியானித்து ஒரு மண்டலம் குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுகின்றனா்.
இதனால் பயனடைந்தவா்கள் பலர் தங்களுடைய உறவினா்கள், நண்பா்கள், என்று பலருக்கும் வாய்மொழியாக கூறி வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும், பாண்டிசேரி, ஆந்திரா, கா்நாடகா, மைசூா், பெங்களுா், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் இங்கு வந்து பூஜை செய்து பலருக்கு சிறுநீரக கோளாறு சரியானதாக கூறி காணிக்கை செலுத்தியும் வருகின்றனா்.
டயாலிசஸ் செய்யும் நோயாளிகளுக்கு அவர்களுடைய மருத்துவா்களே இந்த கோவிலுக்கு வந்து செல்ல அறிவுரை வழங்கி வருகின்றனா். ஜெயம்கண்ணன் என்ற மருத்துவரே இதைப்பற்றி தொடர் கட்டுரைகள் எழுதி அதன் மூலம் பலா் இங்கு வந்து பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த கோவிலின் சுற்றுசுவா்களுக்கு உள்ளே சிவனக்கு தேவையான அனைத்தை மலா்களும் கிடைக்கும், குறிப்பாக சிவனுக்கு வில்வம் மரத்தின் இலைகளை கொண்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
நடராஜருக்கு பூஜை செய்ய கேரள மாநிலத்தில் இருந்து வெற்றி வோ் வரவழைக்கப்பட்டு அதை கோவில் நிர்வாகமே விற்பனை செய்கின்றனா். பக்தா்கள் வந்து செல்ல போதிய அளவில் வசதிகள் உள்ளது. ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த கல் நடராஜர் சிலை உள்ள கோவில் இது.
Share this:

Write a Reply or Comment

8 − 2 =