September 15 2018 0Comment

கிருஷ்ணன் திருக்கோவில்: 

கிருஷ்ணன் திருக்கோவில்: 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது ‘கிருஷ்ணன் கோவில்”. இங்கு உள்ள மூலவர் ‘#பாலகிருஷ்ணன்” குழந்தை வடிவில் நின்றபடி, தன் இரு திருக்கரங்களிலும் #வெண்ணெய் வைத்துள்ளார். இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார்.

மூலவர் : கிருஷ்ணன்.

உற்சவர் : ராஜகோபாலசுவாமி.

அம்மன் : ருக்மணி, சத்யபாமா.

தல விருட்சம் : நெல்லிமரம்.

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.

ஊர் : நாகர்கோவில்.

மாவட்டம் : கன்னியாகுமரி.

தல வரலாறு :

கி.பி. 13-ம் நு}ற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது. 

குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோயில் எழுப்ப ஆசைப்பட்டார்.

அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக அவரது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். 

அதன்படி கோயில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

தல பெருமை :

குழந்தை கண்ணன்: 

மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். #கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.

தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். இந்த பூஜையில் கலந்து கொள்வது நல்லது.

தண்ட சுவாமி: 

மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிருஷ்ணரே பிரதானம் என்பதால் கோஷ்ட மூர்த்திகள் இல்லை.

காவல் தெய்வம் பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் கொன்றை மரத்தடியில் நாகர் சிலைகளும், சிவலிங்கமும் உள்ளன. இங்கு மூலவரின் வலப்புறம் வெளிப் பிரகாரத்தில் #கன்னி விநாயகர் சன்னிதி உள்ளது.

நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதன் மூலமும், குளக்கரை நாகம்மனை வழிபடுகின்றன.

மேலும் இத்தல குளக்கரை நாகர் சிலைகளுக்கோ, #கொன்றை மரத்தடி நாகர் சிலைகளுக்கோ பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றன.

இக்கோவிலுக்கு வந்து ‘பாலகிருஷ்ணனை” வழிபட்டு வெண்ணெயும், பாலும் வாங்கி உண்டால் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Share this:

Write a Reply or Comment

9 − 1 =