October 08 2017 0Comment

ஆண்டாள் கடிதம் – 44 சாய்பாபா வழிபாடு சரியா?????

சாய்பாபா வழிபாடு சரியா?????

 

முகில் குழு என்று கீழ்க்கண்ட message Forward ஆக வந்தது. இந்த message ஐ முதலில் படிக்கவும்:

 

“””எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இந்து சமயம்..?

 

இறைவனுக்கு இணையானவர்களா ஆச்சாரியார்கள்?

இன்னும் ஐம்பது வருடங்களில், சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன், வினாயகர், எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன்! சிவபெருமான், பெருமாள் என்றால் யார் என்று கேட்பார்கள் போல..!

 

ஏனென்றால் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்???? ஸ்ரீடி சாய்பாபா மட்டும்தான் உலகிற்கே பிரம்மம்! அவர் தான் பரமாத்மா! அவரே பகவான் என்று ஹிந்துகள் பலருக்கு நம்பிக்கை வந்து விடும் என்று நினைக்கிறேன்!

 

தேவாரம், திருமுறை என்றால் என்னவென்றே தெரியாமல், கீதையின் ஒரு சுலோகம் தெரியாமல் பத்து சாய்பாபா சென்டர் மலேசியாவில் ஒருவரே திறக்கிறார்! நான் எட்டு தடவை, ஒன்பது தடவை ஐய்யப்பன் மலைக்கு சென்றேன் என்று பிதற்றி பெருமை பட்டு கொள்வது போல நான் ஐந்து சாய்பாபா சென்டர் திறந்து விட்டேன் என்று பெருமை பட்டு கொள்கிறார்கள்!

 

முகநூலில் காலை வணக்கம் படங்களாக

இரண்டு பெருமாள் இரண்டு சிவன், ஆறு சாய்பாபா வருகிறார்கள்!

 

வாட்சாப் குழுக்களில் அடிக்கடி பார்க்கலாம்!

ஷேர் செய்யுங்கள் இன்று ஒரு அதிசயம் நடக்கும் என்கிறார்கள்!

 

கீதை, வேதம், உபநிடதம், தேவாரம், திருமுறைகள், புராணம், இதிகாசம், கீதைகளில் எத்தனை எத்தனை ஆயிரம் மந்திரங்கள், சுலோகங்கள்! அதில் ஒன்றை கூட எவருக்கும் எழுதி காலை வணக்கம் சொல்ல தெரியவில்லை!

 

ஆச்சார்யர்கள் குருமார்கள் முக்கியம்தான்! ஆனால், இறைவனுக்கு இணையாக வைத்து விட்டு, அவரே கதி என்று இருக்கலாகாது!

 

முதலில் ஆச்சாரியன் என்பவர் யார்? அவரின் தகுதிகள் என்பது எவை? சம்பிதிராயம் என்பது என்ன? குரு சிஷ்யன் சங்கிலி தொடர் என்பது எது? அந்த சங்கிலியின் ஆரம்பத்தில் மூலமாக எவர் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆராய வேண்டும்!

 

யோக சக்தி உடையவர், அபூர்வ அதிசய காரியங்கள் செய்பவர், பத்து பதினைந்து உபதேசங்கள் செய்பவர்களுக்கு எல்லாம் ஆச்சாரியர் பதவி கொடுக்க இயலாது. ஆச்சாரியர் என்ற பதவிக்கே தகுதி இல்லாதவர்களுக்கு கோவில் கட்டி, விழா எடுத்து, இறைவனுக்கு நிகராக வைத்து விட்டார்கள் சாய்பாபாவை.

 

கிருஷ்ணரின் விஸ்வரூப ஓவியத்தில் நடு நாயகமாக சாய்பாபா உள்ளார்!

 

சிவலிங்கத்தை சாய்பாபாவின் மடியில் அமரவைத்துவிட்டார்கள்.

 

அடுத்து பார்வதியை அணைத்துக் கொண்டு (சிவ சிவ)  முருக பெருமானை மடியில் அமர வைத்து உள்ளது போல ஓவியம் வரைவார்களோ?

 

கோவில் வழிபாடு பக்தி எல்லாம், பெருமை பட்டு பிதற்றி கொள்ளவும் பணம் சம்பாதிக்கவும் என்று ஆகி விட்டது!

 

உண்மையான தெய்வ வழிப்பாடு மறைகிறது!

 

மூடத்தனம் பெருகுகிறது!

இதை எடுத்து சொன்னால் நம்மை சைவ / வைணவ வெறியன் என்பார்கள்! நீ பெருமாளுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டாம்! பரமேஸ்வரனுக்கு தா! இந்த பாபாக்கள், அனந்தாக்கள் வழிபாடு எல்லாம் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்!

 

தமிழ் நாட்டு மகான்னு புகழ் பெற்ற ஸ்ரீ ராமானுஜர், அவர் தத்துவம், சரித்திரம் அவர் வழிவந்த ஆச்சாரியர்கள் மகிமைகள் பற்றி தெரியாதவர் எல்லாம் வடக்கில் தோன்றிய யோகிகள், சாமியார்களுக்கு பாபாக்களுக்கு முக்கியதுவம் கொடுத்து விழுந்து விழுந்து வணங்குகிறார்கள்!

 

சைவ சமயத்தவராக இருந்தாலும், வைணவ சமயத்தவராக இருந்தாலும் நாயன்மார் சரித்திரம் அறிய சொல்கிறேன்! பெரிய புராணம், திருமுறைகள் படிக்க சொல்கிறேன்! சைவ சித்தாந்த தத்துவங்களை குழந்தைகளுக்கு கற்று தர சொல்கிறேன்! பாபாக்கள் சாமியார்கள் எல்லாம் வேண்டாம் என்கிறேன்!

 

பல வருட ஆதங்கம் இது!

 

காலையில் சாய்பாபா வாட்சாப்பில் Good Morning சொன்னார்! வாரத்தில் ஐந்து நாட்கள் வருகிறார்! இரவில் கூட வந்து நிம்மதியாக தூங்கு ! இரவு வணக்கம்னு சொல்கிறார்!

 

ஆனால் சிவனும் பெருமாளும் அப்பன் முருகனும் ஆளையே காணோம்! அதான் உண்மையை சொன்னேன்! அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்??? சாய் பாபா பக்தர்கள் கோபித்து கொண்டால் எம்மால் எதுவும் செய்ய இயலாது!

 

நான் உண்மையை தான் இங்கே உரைத்துக்கொண்டிருக்கிறேன்.”””

 

கடவுள் என்பதே நம்பிக்கை தானே…..

அது யாராக இருந்தால் என்ன ?????

 

எனக்கு ஆண்டாளை பிடிக்கும்…

மற்றொருவருக்கு அல்லாவை பிடிக்கும்….

சிலருக்கு யேசுவை பிடிக்கும்….

 

அது போல தான் பாபா வழிபாடும் என்பது என் கருத்து. #Chockisim

 

இதில் ஒரே ஒரு விஷயம் சாய் பாபாவை இந்து மதத்திற்குள் கொண்டு வந்த விஷயம்.

 

இது தவறு என்பது என் கருத்து.

 

உன்  மத கருத்து சிறந்தது என்று  நீ கருதுவதால் நீ அதையே  வழிபடு….

 

என்  மத கருத்து சிறந்தது என்று நான் கருதுவதால் அதை நான் வழிபட வழிவிடு…..

 

 

#சாய்பாபா #பாபா #சீரடி #இந்து #மதம் #தெய்வவழிபாடு #ஆண்டாள்_கடிதம் #

Share this:

Write a Reply or Comment

1 × five =